ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
17•06•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(352) மனிதனே புனிதன் —
இது என்ன மாயம்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பழனி நடராஜா சுவாமிகளின் குழந்தைத்தனமான ஆசையை வெளியிட்டதும், சற்குருநாதர் சிரித்தார். ” நடராஜா உள்ளே உள்ள அதிசயங்களைப் பார்க்க எவ்வளவு காலத்தைச் செல விட்டாலும் அது போதாது. உலகில் உள்ள ஆத்ம அறிவால் மட்டுமே அறிவது கடினம் தான். அதற்குக் கடவுள் அறிவும் தேவை. இன்னுமொன்று நீ வெளியே வரக் காலதாமதம் செய்தாயானால் குகைவாயில் அடைபட்டு விடும் வாய்ப்பு உண்டு. சென்றுவரச் சம்மதமா?” என்று கேட்டார். அவரும் சம்மதம் எனத்தெரிவித்தார். அப்போது குருநாதர் ஒரு விஷயத்தை அவரிடம் தெரியப் படுத்தினார். ” மகனே நடராஜா நீ அதிசயத்தைக் காண மட்டுமே ஆசைப்படுகிறாய். அதிசயத்தை அடைவதற்கு உனது மனம் விரும்ப வில்லை. நீ உள்ளே காணும் எதனைப் பற்றியும், யாரிடமும் எதுவும் கூறக் கூடாது. அப்படிக் கூறும் பட்சத் தில் உனக்கு வாழ்வில் எது வேண்டுமானாலும் எதிர் மறையாக ஏற்பட்டு விடலாம். ஆயுள் பரியந்தம் இறைவனை எண்ணி ஜெபம் செய்வது தான் உனக்கு உத்தமம். எனவே இது ஞாயமான எச்சரிக்கை என்பதை மறந்து விடாதே” என்று கூறினார்.பழனி நடராஜா சுவாமி மிகவும் தைரியமானவர். எதற்காகவும் கலங்காதவர். தனது தேவைகள் அனைத்தை யும் இறையருளோடு, தனது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி நிறைவேற்றித் தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். நமது சுவாமி அவர்களை அழகு நாச்சியார் அம்மன் கோயிலில் விட்டு விட்டு கருப்பசாமி நிலையைத்
தாண்டி காடுகள் நிறைந்த பகுதிக்குள் சென்று விட்டனர்
நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து போனார். மெல்ல உணர்வு திரும்பிய போது பழனி நடராஜா சுவாமி கருப்பண்ண சாமி மேடையின் பின்னால் சற்று தள்ளியிருந்த பெரிய பாறைமீது குருநாதருடன் அமர்ந்து இருந்தார். முகம் வெகு பொலிவுடன் ஜொலித்துக் கொண்டு இருந்தது. கண்களை இமையாது தூரத்தில் எதையோ பார்ப்பது மாதிரி அவர் தோற்றம் இருந்தது. குருநாதர் அவரது நெற்றியில் சிறிது நேரம் அழுத்தம் செய்து விட சுய உணர்வு அவருக்குத் திரும்பி யது. பழனி மலை குகைக்குள் சென்று மீண்டு வந்தவர் என்று கூறுவது உண்மையில் அவருக்கே பொருந்தும். ஆனால் அங்கு கண்டது என்ன? யாரைக் சந்தித்து விட்டு வந்தார் என்பன பற்றி அவர் எதுவும் கூற மறுத்து விட்டார். ஆனால் மனநிறைவை அவர் அடைந்திருந்தார். வீட்டிற்குப் புறப்பட்டுப் போகும் முன்பு கடைசியில் “சற்குரு நாதருக்கு நன்றி” கூறினார். முகத்தில் தேஜஸ் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இவர் கண்டு அனுபவித்த தெய்வீக உண்மை களை எல்லாம் பின்னாளில் சற்குருநாதரின் குருபூஜை விழா ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமியின் சமாதியில் நடை பெற்றபோது, ஏற்பட்ட சந்தோஷத்தில் ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமிகள், பழனி மலை யின் சித்தர்கள் வாழ்வு மற்றும் குகை ரகசிய உண்மைகளை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக வெளியிட்டார். நமது சுவாமி அவரிடம் சற்குரு நாதரிடம் தாங்கள் கொடுத்த வாக்குத் தத்தம் பற்றி எடுத்துரைத்தார்.
சற்குருநாதர் பற்றிப் பலர் பலவிதமான கருத்துக்கள் கூறி வருகின்றனர். அவர்களின் எண்ண வோட்டம் போன்றவை அக்கருத்துக்கள். அறிந்து சொன்ன உபதேசமும், அறிந்ததை உணர்ந்து சொன்ன உபதேசமும், அறிந்து, உணர்ந்து, தெளிந்த பிறகு சொல்லப்படுகிற
உபதேசங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட கருத்துக்களை உண்டு பண்ணும். அனுபவஞான உபதேசம் என்பது நன்மை, தீமை, உயர்ந்தது, தாழ்ந்தது என்று பாகுபடுத்தி உணர்த்துவது அல்ல! அனைத்தையும் ஒட்டு மொத்தமாக உணர்த்துவது மற்றும் உயர்த்துவது என்பது ஞானக்கருத்தின் இயல்பாகும். சுருக்குச் சொன்னால் எல்லாம் இறைவனது மயமாக விளங்கு கிறது என்பதை உணர்த்துவதா கும். மற்றும் ஒன்றைத் தெளிவு படுத்துகிறோம். சித்தர்களின் சித்து என்பதற்கும், சித்து விளையாட்டு என்பதற்கும் பொருள் வேறுபடும். தனது புகழைச் பரப்புவதற்டுச் செய்வது சித்து விளையாட்டு. உண்மை நிலையை உணர்த்துவதோடு, பக்தனை மீட்டெடுப்பதற்காகச் செயல் புரிவது “சித்து” எனப்படும். இன்னும் புரியும்படி கூறுவதென்றால், வேதமந்திரம் பாராயணம் செய்து பாவனை வழிபடுவது பிராம்மண தர்மம். சடங்குகள் மற்றும் வித்தைகளைக் கோல்டு இறைவனை வழிபடுவது தத்ரிகர் தருமம். இவற்றைக் கடந்து பரமாத்ம தியானத்தால் இறைவனின் கருணையைப் ளெற்றூ , தூய ஜீவாத்ம நிலை அடைவது என்பது அவ தூதர் நிலை. இந்நிலை பெற்றவர் செய்வதே சித்துக்கள் எனப்படும். அதாவது இறைவன் திரு விளையாடல் எனப்படும். அது உன்னத உயர்ந்த நிலை. இந்நிலை பெற்றவர்கள், வேதமந்திர பாராயணம், சடங்குகள், வழிபாடுகளைத் தவறு என்று ஒருபோதும் கூறியது கிடையாது. இறைவனை அடைய ஒவ்வொன் றும் ஒவ்வொரு வழி! நதிகள் பல கடலைப் சென்று சேருவதைக் குறிப்பிடலாம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.