ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•02•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(241) மனிதனே புனிதன் —
ஆதி குரு நாதனின் துயரம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஆதி குரு நாதன் தனது அன்னை கூறிய உபதேச மொழிகளைக் கேட்டு முதலில் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, அன்னையே தங்களின் திருவருள் கட்டளைப்படியே நடக்கக் கடமைப் பட்டவன் ஆவேன். அது போன்றே வியாழன் கோள் தவம் செய்து அனுக்கிரகம் பெறுவேன் என்று அவரது தாள் பணிந்து ஆசி பெற்றார். சமைக்கும் வெண்கலப் பானையை எடுத்துச் செல்ல வந்த குரு பத்தினி பைரவிக்கு, தனது கணவனுடன் பேசிய மாமியின் சம்பாசனைகள் பிடிக்கவில்லை. மாமியின் பேச்சில் இருந்து தனது கதி இனி, அதோ கதி தான் என்ற முடிவுக்கே வந்து விட்டாள். பைரவியை தனதருகே ஆதி குரு நாதன் அழைத்தார். இதற்கு என்ன அர்த்தம்? என்று உணவு சமைக்கும் இரட்டை அறை கொண்ட வெங்கலப் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி வினவினார். பைரவிக்குத் தனது கணவன் கேட்பது காதில் விழாதது மாதிரி நடந்து கொண்டாள். மோகனப் புன்னகையை அவர் மீது வீசினாள். ஆதி குரு நாதனுக்கு அவளது அலட்சியமும், காமப் பார்வையும் கண்டு பொறுக்க முடியாமல், கண்கள் சிவந்து தீப்பொறி பறக்கும் சீற்றத்துடன் ‘பைரவி ‘ என்று சப்தமிட்டபடியே எழுந்து நின்றார். ஆசனம் பலகையில் அமர்ந்திருந்த தாயார் ‘மகனே நிதானம்’ எனக்குரல் கொடுத்தார்.
ஆதி குரு நாதருக்கு தனது தாயைப் கொடுமைப் படுத்திய நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ளத் தனது நெற்றிக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தார். ஆதியோடு அந்தமாக அனைத்தையும் அறிந்து கொண்டார். தனது அன்னைக்குப் பதிலாக மாயா அன்னையை ஸ்ரீ விநாயகர் அனுப்பியது, தனக்கு இதுவரை ஞான உபதேசங்கள் செய்தது வரை அறிந்து கொண்டார். தனது அன்னைக்கு ஏற்பட்ட இன்னல்களை உணர்ந்து மனம் ஆற்றாமல் கதறி அழுதார். பெற்றவளைக் கவனிக்காமல் துரோகம் நடந்திடத் தானும் ஒரு காரணமாக இருந்ததை எண்ணிப் துயரத்தில் துடிதுடித்தார். பிறகு அதுவே கோபக்கனலாக மாறியது. குரு பத்தினியின் துரோகத்திற்குக் கடுமையாக சாபம் அளித்து விட்டார்.”
“பைரவி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனது எண்ணத்தில் தான் என்னவகை சூழ்ச்சி? எவை போன்ற கவலைகளை மனதில் கொண்டு, உனது பரிசுத்தமான ஆத்ம சக்தியை மறந்து விட்டு, மற்றவர்களையே எண்ணி எண்ணி, பொன் போன்ற காலத்தையும், உனது அறிவையும் வீணடித்து இருக்கின்றாய்? பயனில்லாத காரியங்களில் உன்னுடைய மனம் செல்வதைத் தான் தடுத்து நிறுத்திடும் உன்னுடைய சக்தி என்னவாயிற்று? நாம் நினைக்கும் காரியங்களும் அதற்குரிய செயலும் மற்றவர்களுக்கு நன்மையை உண்டு பண்ணுவதற்கு அல்லவா? நீ கற்றவை அனைத்தும் உனது சுய நலத்திற்காகவா? உன் மனதில் பொறாமையும், துவேஷமான எண்ணங்களும் உருவாகக் காரணமாகி விட்டாய். நிறை வேறாத ஆசைகளுக்கு இடமளித்தும், காமத்திற்கும் உன்னை அடிமையாக்கியும் விட்டாய். குற்றமாகும் என விதிக்கப்பட்ட நினைவுகளை உன் மனதில் உதயமாகச் செய்திருக்கின்றாய். உனது உள்ளம் இன்னதென்று பலர் அறியும்படி வெளியிட்டு விட்டாய். உனது காரியங்கள் அனைத்தும் உன்னை வெட்கித் தலை குனியும்படிச் செய்ய வில்லையா? ஒரு மிருகம் போல் நடந்து கொண்ட குரு பத்தினியே, பைரவியே சொல்! எனக் கோபமாகக் கேட்டார்.”
“தனது கணவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த பைரவி, தனது தாயின் மீது பாசம் கொண்ட ஆதி குரு நாதனே கேள்! எனக்கு என் மீது பாசம் கொண்ட உறவினர் வாழும் எனது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எனது ஆசையை நீர் செவிமடுக்க வில்லை. அப்படியே இப்புவியில் வாழ வந்தாலும் எனது நியாயமான ஆசைகளை நீர் நிறைவேற்றி வைக்கவில்லை. ஆதி தேவன் அனுப்பி வைத்துப் புவியின் கடமைகளைச் செய்ய மட்டுமே மனம் கொண்ட ஆதி குரு நாதனே, உமக்கு மனைவி என்ற ஒருவள் தேவைதானா? நான் என்ன உணர்ச்சிகள் அற்ற ஜடப்பொருளா? அப்படித்தான் என்னை எண்ணி இருக்கின்றீரோ? என இன்னும் கேட்டாள்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.