ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
20•08•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(416) மனிதனே புனிதன் —-
அறியாமையில் வாழ்வது துன்பம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதி காலம் தொட்டு உலகின் நலன் கருதியே நமது ஞானியர் கள் அறிவாகிய ஒளியை மனம் உவந்து தந்தார்கள். அறியாமை ஒன்றே சகல துன்பங்களுக்கும் காரணம் என்பதே அவர்கள் தெளிந்த முடிவு. அன்று குடும்ப வாழ்வில் உள்ள ஒவ்வொரு நபரும் ஞானியர்கள் காட்டிய வாழ்வியல் விதி ஒன்று இருந்தது. அது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வாழும் பொதுநலத்தைக் குறிப்பிட்டது. இந்தப் பொது நலம் சிறுகச் சிறுக விரிவடைந்து, உலக மக்களின் நன்மையைக் கருதி தெய்வீக குணங்களை வெளிப்படுத்து வதாக அமைந்தது. சேவை மனப்பான்மை வளர்ந்து வந்தது. அன்று உயர்வான லட்சிய நோக்கமும், வாழ்வில் உண்மை யே பேசும் நடைமுறைகளும், சமுதாய முன்னேற்றம் கருதிக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. சேவை மனப்பான்மை மக்களின் உள்ளத்தில் உருவாகி செயல்படத்துவங்கவே, வீடும், ஊரும், நாடும், உலகும் நிச்சயம் முன்னேற்றம் அடையும் என்று ஞானியர்கள், நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளைச் செய்தும் வழிகாட்டியும் வந்தனர். அவர்கள் உலகின் தருமங்களைக் கடைப்பிடித்து வந்தனர். தங்களது சொந்த நலன்களைப் கருத்தில் கொள்ளாமல் பொது நலன்களில் ஈடுபட்டனர். அன்புள்ளம் கொண்ட அறிவுசால் ஞானியர்கள் இறைவனை எண்ணும் போது, தாங்கள் செய்த சகல செயல்களின் பலா பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்தனர். அதனைப் போன்றே உலகில் தோன்றிய சகல ஜீவராசிகளையும், இறைவன் வடிவமாகவே எண்ணித் தங்களது செயல்களின் பலன்களை முழுமனதுடன் அர்ப்பணித்து விட்டுமீண்டும் மீண்டும் உழைத்துக் கொண்டே இருந்தனர்.அவர்கள் பெற்ற அனுபவங்களைப் பரிகாரங்களா கவும், சாஸ்த்திர ஞானங்களாக வும் பதிவு செய்து விட்டுச் சென்றனர்.
அவர்கள் சுயநல வாதிகளாக இருந்திருந்தால், தவமது புரிந்து, யோகம் கலைகளில் சிறப்புற்று இறைவன் திருவடி நிழலை அடைந்து இன்புற்று வாழ்வது சிறப்பு என எண்ணியிருக்கலாம். ஆனால் அவர்கள் உலக மக்கள் நலனே பெரிதென நினைத்தார் கள். மக்களின் அறிவு மேம்பாடு அடைய வேண்டும் என்றும், இறையருளை, அவன் மறக்கருணையைப் பெற்று உய்த்திடவேண்டும் எனவும் ஆழமாகப் சிந்தித்தார்கள். அதனால் இறைவன் அருளிய வேதநூல்களையும், ஆன்மிக நெறிகளையும், மருத்துவ பொக்கிஷங்களையும், சகல சாஸ்திர ஞானங்களையும் உலகினுக்குத் தந்தார்கள். ஆண்களைப் போலவே பெண்கள் ஞானநிலை பெற்று உயர்ந்த நிலையில் தபஸ்வினிகளாக, யோகியர்களாக, சகலசாஸ்திர ஞான வித்தகர்களாக வாழந்ததோடு, அவர்கள் பெற்ற இறையருளை செய்யுள் வடிவில் யாத்திருக்கின்றார்கள். மனிதன் அவைகளைக் கற்று இன்புறாமல், தங்களது மேதா விலாசத்தைக் காட்டி, கேலியும், கிண்டலும், அவதூறும் பேசி வருகிறார்கள். தெய்வீக சிந்தனையாளர்களைப் பெண் என்பதால், தங்களது ஆணாதிக் கத்தைக்காட்டிக் கொள்கிறார்கள். படைப்பில் சகலரும் ஒன்றுதான். உலக நன்மைக்காக ஞானவழிகளைக் கற்பித்த ஆசான்களை, உலகாதய நிலையில் எள்ளி நகையாடலாமா? ஞானிகள் அரசுப் பணிகளிலும் கால்பதித்து நல்ல குருமார்களாக, வழிகாட்டி களாக விளங்கி வந்திருக்கின் றார்கள்.
நமது ஞானகுரு அவர்களும் பவானி தலைமைச் சங்கத்தில் நல்லவிதமாக நாங்கள் செல்லும் போதெல்லாம் ஞானமழை பொழிந்திருக்கின் றார். அவர் ஞானயோகி திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்களை விட்டுவிட்டுச் சென்ற பிறகும், உடன் இருந்தே கேடு செய்ய எண்ணும் சிலபேர் ஞானமுகமூடிகளை அணிந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அதில் மிக முக்கியமான நபர், ஊதியம் பெற்றுக்கொண்டு அலுவலகப் பணிகளைச் செய்து கொண்டிருந் தார். ஞானயோகி திரு.SSM ஐயா அவர்களை எதிர்ப்பாக எண்ணும் கூட்டத்தினரிடம் இருந்தும் மறைவாக சன்மானம் பெற்றுக் கொண்டு, இங்கு தலைமைச் சங்கத்தில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளையும் தெரியப் படுத்தும் உளவாளியாக வாழ்ந்து வந்தார். ஞானகுருவின் செயல்பாடுகள், பவானி தியான சங்கத்தைப் பற்றிய தவறான கருத்துக் கணிப்பாக, அவரது சீடர்கள் வாயிலாகப் பரவத் துவங்கி விட்டது. எப்படி? இனி தியான சங்கம் என்றால் அது ஞானகுரு தான் என்று எண்ணும் அளவிற்குக் கருத்துக்கள் பரப்பப் பட்டது. சேலத்தில் ஒரு வசதி மிக்க திருமண வைபவம். ஞானயோகி திரு SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு, ஞானகுருவை அறிமுகப் படுத்திய செல்வந்தர் வீட்டுத் திருமணம். சேலம் குகைப் பகுதியைச் சேர்ந்தவர். ஞானகுரு தலைமையில் திருமணம் நடை பெற்றது. மரியாதை நிமித்தம் சிறப்பு விருந்தினராக, சத்தியமே ஜெயம் என வாழ்ந்து கொண்டி ருந்த ஞானயோகி திரு SSM. ஐயா அழைக்கப்பட்டிருந்தார். அவர் வருவதற்கு முன்பே திருமணமும் ஞானகுருவின் ஆசியுடன் நடை பெற்றிருந்தது. ஞானயோகி அவர்கள் கம்பீரமாக சபையினுள் பிரவேசித்தார். அவர் மணமக்களுக்கு அன்புடன்ஆசி வழங்கினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.