அறம் வளர்ந்த இட மர்மம்!

315

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•08•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(399) மனிதனே புனிதன் —
அறம் வளர்ந்த இட மர்மம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஜோதிட நிபுணர் திரு. ஷண்மும் ஐயா அவர்கள் அன்று சூரியன் சஞ்சரிக்கும் உத்திரம் நட்சத்திரத் தன்று மகா மேரு என்று அழைக்கப்படும் பெரிய கோயில் வாசலில் நின்று கொண்டிருந் தார். மிடுக்குடன் நடந்து வந்து அவரின் எதிரில் நின்றார் துறவி ஒருவர். அவரைப் பார்த்ததும் புன்னைநல்லூரில் தான் முன்பு ஒருநாள் சந்தித்த துறவி தான் எனப் புரிந்து கொண்டார். ஈர்ப்பு சக்தி அவரிடத்தில் இருப்பதை அறிந்த ஜோதிடர் அவரே முதலில் பேசட்டும் என்று சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தார். துறவியோ ஜோதிடரிடம், ” அப்பா என்னை ராஜதுறவி என்று அழைப்பார்கள். நாடாண்ட பரம்பரையில் வந்த எங்கள் குடும்பத்தில் நான் ஒருவன் தூறவியாகிப் போனேன். அநேக சாஸ்த்திர ஞான வித்தைகள் கற்றறிந்து தேடினேன். பெரிய கோயில் என அழைக்கப்படும் இந்த மகா மேரு கோயிலைப்பற்றி எனக்கு ஓர் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக எனக்கு உதவி புரியும் சரியான நபருக்காகப் பல காலம் இங்கே காத்திருந்தேன். சக்தியின் அருள் பெற்ற உம்மைத் தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறேன். உம்முடைய ஜோதிட ஆராய்ச்சி பரிபூரண இறையருளுடன் கூடித் துலங்குவதால் சரியான பதிலை எனக்குக் கூறுவீர் என நம்புகி றேன் ” எனச் சொல்லி தனது காந்தக்கண்களால் குழைந்த பார்வை பார்த்தார்.

இரும்பைக் காந்தம் ஈர்ப்பதைப் போன்று ராஜதுறவியின் பின்னால் ஜோதிட நிபுணர் திரு. ஷண்முகம் சென்றார். மகா மேருவின் பின்னால் உள்ள கருவூரார் சமாதிக் கோயிலுக்கு முன்புறம் அமர்ந்து கொண்டனர். திரு.ஷண்முகம் அவர்கள் சிரசை ராஜதுறவி தொட்டார். தியான லயத்தில் ஆழ்ந்து போனார் ஜோதிட நிபுணர். பிறகு அவர் கண் விழித்துக் தன்னை சுதாரித்துக் கொண்டு பார்த்தபோது துறவி அவர்கள் அங்கு காணப்படவில்லை. தான் தியானத்தில் அறிந்து கொண்டு விட்டதை மனதில் எண்ணிப் பார்க்கலானார். கோயிலை உருவாக்கிய ராஜனும், ராஜ குருவும், சாபமும், எதிர் சாபமும் இட்டுக் கொண்ட காட்சி பளீரிட்டது. கோயிலின் சற்று தென் மேற்குப் பகுதில் வற்றாத வட்ட வடிவமான கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணறு தோண்டுவதற்கு ஒரு நாளில் கணித்துப் பார்த்த நட்சத்திரம் அனுஷம். ஆலயத்திற்கு அதிக நீர் தேவை என்ற ஒரு காரணம் கொண்டே, அன்றைய காலகட்டத்தில் கணித்த முறை அது. நீருக்கு உண்டான கிரகம் சந்திரன் என்பது ஜோதிட வாக்கு. அந்தச் சந்திரனுக்கு உண்டான நட்சத்திரம் ரோகினி. மகா மேரு ஆலயத்தின் பின்புறம் சிறிது தென்மேற்கை ஒட்டி தோண்டப் பட்ட கிணற்றில் வற்றாத ஜீவநீராக வெளிப்பட்டது.

முதலாவதாக சந்திரன் நட்சத்திலிருந்து (ரோகினி) எண்ணப்பட்டு, அன்றைய தினம் பதினான்காவது நட்சத்திரமாக அனுஷம் நட்சத்திரத்தில் அந்தக் கிணறு தோண்டப்பட்டு அதிக அளவு நீர் வெளிப்பட்டது. இது ஜோதிடக் கலையின் அற்புதம் எனச் சொல்லலாம் இதனை ராஜனின் குரு கருவூரார் வரவேற்றார். ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனது ஜீவசமாதிக்குக் குறிக்கப்பட்ட நட்சத்திர தினத்தை மட்டும் அவர் அங்கீகரிக்கவில்லை. அது அன்று சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரமான உத்திரம் துவங்கி, சந்திரன் சஞ்சாரம் செய்யும் ஆறாவது நட்சத்திரம் அனுஷம் ஒளிரும் நாளில் ஜீவசமாதி கட்ட ஸ்தம்பம் ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இதனை அவர் பெரிதாக எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தார். இதில் அபிஜித் நட்சத்திரம் சேர்த்து இருபத்தி எட்டு நட்சத்திர ஆரக்கால்களாக எண்ணப்பட்டது. இதன் காரணம் யாருக்குமே புலப்படவில்லை. செய்வதறியாது திகைத்தனர். அரச ஆணையை மீறி யாரும் பேசுவதற்குத்தான் தயக்கம் காட்டினர். அரசரிடம் பணிவாகக் காரணத்தை விளக்கினார். ” ஜீவ சமாதி ஆவதற்குக் குறிக்கப்பட்ட தினம் மரணத்தைத் தரும் நாளாகும். ஜீவ சமாதி என்பது இறவாமல் வாழும் யோகமாகும். இதன் பொருளை அரசபெருமான் அறிதல் வேண்டும் ” என்றார். கடைசியாகச் சொன்ன ‘அரச பெருமான் அறிதல் வேண்டும் ‘ என்ற வார்த்தையின் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது. அரசஆணையை ஏற்றுக் கொள்ளாமல் விவாதம் புரிந்தது, ஜீவசமாதிக்கு குரு உட்படாமல் தப்பிக்கும் நோக்கமே என்றும், இது ராஜனுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பு எனக் கருதப் பட்டது. அறிவாளி என்று மக்களால் போற்றப்பட்ட ராஜன் தனது அதிகார பலத்தைக் காட்டினான். “கருவூராரே உமக்கு மரண சாசனம் அனுஷம் நட்சத்திரக் காலில் எழுதப்பட்டு விட்டது தான் விதி ஐயனே ” என்றான். கருவூரார், “ஏ ராஜனே, நீ நினைத்தால் எனது விதியையே மாற்றி அமைக்கும், மதியூகமும், அதிகார பலமும் உனக்கு உண்டு. ஆனால் எனது மரணத்தை விரும்பும் உனக்குப் பரிசு, உனது விதி உனக்கே மரணமாக மகா மேரு ஆலயத்தில் கிடைக்கும். இதுவே நீதி ” என்றார் கருவூரார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button