அரிய பொக்கிஷம் நம்பிக்கை!

207

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•05•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(306) மனிதனே புனிதன் —
அரிய பொக்கிஷம் நம்பிக்கை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சேலம் குமாரபாளையம் தவத்திரு SSM.சுப்பிரமணியம் ஐயா அவர்கள் அச்சம் என்பதை அறியாதவர். எந்தவொரு காரியத்தையும் நம்பிக்கை கொண்டு செயல்படுபவர். மக்கள் இடையே அறிவின் ஞான விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என தணியாத தாகம் உடையவர். வாய்மையும், ஒழுக்கமும், நடுநிலைமைக் கொள்கையும் உடையவர். தனது நலன் கருதாது ஞான நூல்களை அனைவரும் வாசித்து அறிய வேண்டும் என்ற விருப்பம் உடையவர். எவ்வளவு நம்பிக்கை இருந்தால் மிகவும் குறைந்த விலையில், தரம் வாய்ந்த நூல்களை உலகினுக் குக் கொடையாகத் தர உள்ளம் கொண்டிருப்பார். அவர் ஞானியர் களில் உத்தமர். “ஆதி யும் அந்தமும் அற்ற ஒரு மகா சக்தி என்னை உள்ளிருந்து இயக்குகி றது. நான் காரிய மாற்றுகிறேன். இக்காரியம் அவசியம் எனக் கருதுகிறேன். எது வந்தாலும் எதிர் கொண்டு ஒப்புக் கொள்கி றேன். என்னையே நான் இந்த ஞான இயக்கத்திற்கு அளித்து விட்டேன். மனிதனுக்குத் தேவையான இது இயற்கையின் தேவையுமாகிறது” என நமது தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்களிடம் அவர் கூறியதை இன்றளவும் அவரை மனதில் வைத்து நினைவு கூர்ந்து போற்றி வருகிறார். ஞானம் உடைய பெரியோர்கள் எதனை விரும்பி நாடுகிறார்கள்? அல்லது எதனையும் விட்டு விலகிச் செல்லும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்? என்கின்ற வினாக்களுக்கு தவத்திரு.SSM ஐயா அவர்களே உதாரணம். அவர் நமது சுவாமி முன் சொன்ன கருத்தினில் விடை மறை பொருளாய் உள்ளது. இவர் தாரக மந்திரமே, ” புகழ் கண்டு மயங்காதே ! புகழ் தேடிச் செல்லாதே ! புகழாரம் பாடாதே ! இன்னல் கண்டு கலங்காதே ! இகழ்ச்சி கண்டு பதறாதே ! இகழ்ந்துரைக்க எண்ணாதே ! ”

இதனைக் குறுந்தகடாக அச்சிட்டு அன்றைய கால கட்டத்தில் ஆரம்பத்தில் இவர் இலவச மாகவே அனைவருக்கும் வழங்கினார். பிறகு தியான சங்கம் வளர்ச்சி நிதிக்காக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அதனை சங்க நிதிக்காகத் தந்தவர். அதுமட்டு மின்றி அவர் தனது சொந்த செலவில் வெளியிட்ட அனைத்து ஞான நூல்களையுமே ஆன்மிக தியான சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதியாக அனைத்தையும் வழங்கிவிட்ட ஓர் பெருந்தகை யாளர். இவரது நட்பை நமது தவத்திரு. ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் பெற்றதை மிகவும் பொக்கிஷ மான நினைவுகளாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்த நாட்களில் பெற்ற ஞான அனுபவங்களை வரலாற்றுத் தவல்களாகவே நமது சுவாமிகள் தர இருக்கிறார். இவரது தியான சங்கத்திற்கு வரும் அனைத்து தியான அன்பர்களுக்கு ஒரு தாரக மந்திரத்தைப் போதித்து வந்தார். அது, ” ஓம் ஈஸ்வரா குருதேவா” என்பதாகும். இவரொரு தீர்க்கதரிசி தான் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

பண்ணாரியில் நடந்த விழாவில் இவரது பேச்சு அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து விட்டது. ஏனோ அந்த விழாவில் மக்களை ஏமாற்றி வரும் போலி சன்னியாசிகள் பற்றி தனது கருத்தையும், தனது எதிர்ப்பையும் நாசூக்காகச் சுட்டிக் காட்டினார். “கருத்து வேற்றுமை களை மறந்து அறிவின் ஞானம் பெற விழையும் அன்பர்கள் கவனத்துடன் தனது செயல்
களைச் செய்து வரவேண்டும். கருத்து வேறுபாடுகள் கொள்ள முயல்வோர் தமது சக்திகளை இழந்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உலக வாழ்க்கையில் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நடந்து கொண்டுதான் இருக்கும். இப்படி ஆகிவிட்டதே எனறு வருத்தப்பட்டுக் கொண்டும், மனதில் குறையுடன் வாழ்ந்து வருவதாலும் எதனை அடைந்து விட்டீர்கள்? நீங்கள் வருந்துவதனால் நாம் வாழும் உலகின் நலனுக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறியவில்லையா? இதனால் உலகத்திற்குக் கேடு விளைவித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். கருத்து வேறுபாடுகள் கொள்வதும், நல்ல வளர்ச்சி பெறுகின்ற ஒன்றை அழிக்க நினைப்பதும், ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்க நினைப்பதும், அதனால் ஆதாயம் தேடுவதும் அற்ப சந்தோஷத்தைத் தந்தாலும் உண்மையில் நீங்கள் உலகத்தில் இறைசக்தியை அவமதிக்கின் றீர்கள். மட்டுமல்ல உலகத்தின் இயல்பான ஒற்றுமையைக் கேடுறுத்தி வேறாகமாறப் போகின்றீர்கள். இந்த குணம் பெற்றவர்களை இயற்கை ஒதுக்கி விடும். தன்னை மீண்டும் உலகம் சரிப்படுத்திக் கொள்ளும் சக்தி அதற்கு என்றுமே உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்” என்று கூறினார். என்றோ தியானம் சங்கத்தில் நடைபெறும் போகும், அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியினை முன்னறிவிப்பு செய்ததைப் போன்று தவத்திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் கூறியது அப்படியே பலிதமா கியது. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்கோவில் வளாகத்தில் வைத்து இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள்
அவரிடமிருந்து வெளிப்பட்டது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button