அதிர்ச்சி செய்தி தந்த அதிர்ச்சி!

235

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•05•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(321) மனிதனே புனிதன் —
அதிர்ச்சி செய்தி தந்த அதிர்ச்சி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தியான சங்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் அனைவரும், “ஞானகுருவை அவமரியாதை செய்கின்றார்கள்” என்ற செய்தியை, தீர விசாரித்து அறிந்து கொள்ள முயலாமல் அதனை உண்மை என்று நம்பி, மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மக்களும் இதற்குக் காரணம், ஒரு ஆடிட்டர் ஐயா அவர்களும், மற்றொருவர் சொந்த எண்ணொய் வண்டிகள் கொண்ட ஒரு நிறுவனத்தின் அதிபர் என்றும் பேசிக் கொண்ட னர். ஆனால் உண்மை நிலவரம் யாருக்கும் புரியவும் இல்லை! தெரியவும் இல்லை! அனைத்து தியான நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு சிறிது காலம் முன்பு பழனியில் பேருந்து நிலையம் அருகில் ஆசிரியர் ஒருவர் வீட்டில் தியானக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தவத்திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கிி வைத்தார். அக்காலகட்டத்தில் “கி.பி. 2000 – ஆவது ஆண்டில் உலகம் அழிவது உறுதி” என்ற தலைப்பில் ஒர் விளம்பர நோட்டீசை, வெள்ளக் கோவிலில் இருந்து டாக்டர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார். இவர் பவானி தியான சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த செய்தயைப் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது.

“உலகம் அழிவது உறுதி” என்று வெளியிட்ட கருத்தை நாங்கள் ஆட்சேபிக்கின்றோம். சதுர் யுங்கள் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும் இந்தக் கலியுகமானது முடிய இன்னும் அநேக ஆண்டு கள் உள்ளன. ஆனால் கி.பி.2000 ஆண்டில் இந்த உலகம் அழிந்து போகும் எனக் குறிப்பிட்டு இருப்பது எப்படிப் பொருந்தும்?” என இந்தக் கேள்வியை சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் சபையில் எழுந்து நின்று கேட்டார். அதற்கு ஞானகுரு அவர்கள் பதில் கூறும் விதமாக இந்த விளம்பரத்தைக் கண்டித்து, “மக்களிடையே இப்படிப்பட்ட செய்திகளை உறுதிபடக் கொண்டு செல்லக் கூடாது. நான் இதனை ஆட்சேபிக்கின்றேன்” என்று கேள்வி கேட்டவர் சார்பாக பதில். கூறினார். தூய முழுக்கை சட்டையும், வேட்டியும் அணிந்து நல்ல தேஜஸ் பொருந்திய முக விலாசமுமாக, வெள்ளகோவில் டாக்டர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள் எழுந்து நின்று பதில் கூறினார். சபையே நிசப்தமாக இருந்தது. எல்லோருக்கும் பணிவான வணக்கத்தை்க்த கூறினார். “இப்போது மனிதர்களின் எண்ணங்கள் மாசடைந்து விட்டது. விஞ்ஞானம் கூட ஆக்கப் பணிகளை விட்டு விட்டு, அழிவுப் பாதையிலேயே செல்கின்றன. பூமியைக் காக்க வேண்டிய ஓசோன் படலத்தில் துவாரங்கள் விழுந்து, சூரியக் கதிர்வீச்சு புறப்பட்டு ஊதாக்கதிர் களாக, பூமியை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அவை பூமியினால் ஈர்க்கப்பட்டு மனிதனின் சுவாசத்தில் சேரும்போது அவனுக்குத் சோர்வு, சலிப்பு, சங்கடங்கள் என தீமை குணங்களை உருவாக்கு கிறது. .மனிதனின் எண்ணக் கேடுகளால் அவைகள் மனிதனுக்கு நன்மைகளைத் தரப் போவதில்லை. மாறாகக் கோப குணங்களுக்கு ஆட்படுவான். அவசரம், ஆத்திரம், பழி வாங்கும் போக்குகள் அதிகரிக்கும். திடமான மனது இருக்காது. அவன் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை எண்ணங்கள் அவனுக்கு அதிகரிக்கும். நாட்டுக்கு நாடு யுத்தங்கள் உருவாகும் நிலை ஏற்படும். மனித இனம் மற்றொரு மனித இனத்தை அழிக்க முயலலாம். தீவிர வாதமும், ஜாதிச் சண்டைகளும் இனி அதிகரிக்கும். உலகில் நிம்மதி என்பதே போய் விடும். அழிவுக்கு ஆலவட்டம் போடுவார்கள். குறிப்பாகச் சிறு வயதுக் குழந்தைகள் நெறிதவறி நடந்து கொள்வார்கள். உலகம் அழிவது உறுதி என்பதில் உலகம் அழியாது, ஆனால் உலக மக்கள் அழிந்து போவார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். நன்றி ” என பதில் உரையாக எல்லோருக்குமே ஒரு மனத் தெளிவை உருவாக்கித் தந்தார்.

அன்றைய பழனி தியானக் கூட்டம் நிறைவடைந்தாலும், மனதில் ஓர் ஆதங்கமும் கருத்து வேறுபாடுகளும் தோன்றிடக் காரணமாகவும் அமைந்தது. ஞானகுரு அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கலசம் வைத்து வழிபாடு செய்வது எப்படி? கலசத்தில் இருந்து சக்தி பெறுவது எப்படி? என விளக்கம் தந்ததுடன், கலசத்தினுள் போட, வீட்டிற்கு ஒரு இருபத்தி ஐந்து பைசா நாணயம் ஒன்றைத் தந்து ஆசீர்வதித்து விபூதியை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இது தியான சங்கத் தலைவர் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த சமயத்தில் நாம் பிரச்சித்தி பெற்ற மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிர்வாகியும், “ஓம் சக்தி அம்மா” என அன்புடன் பக்தர்களால் அழைக்கப் பெறும் செவ்வாடைத் துறவி தவத்திரு.பங்காரு அடிகளார் “சக்தி ஒளி ” என்ற ஆன்மிகப் பத்திரிக்கையில் பல ஆசீர்வாதச் செய்திகளை வழங்கி வந்தார். பவானியில் செயல் பட்டு வரும் தியான சங்கத்தைப் பற்றியும், தமது தெய்வீக பத்தரிக்கையில் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button