அதிசய மனிதர் சந்திப்பு!

214

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•09•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(75) மனிதனே புனிதன் —
அதிசய மனிதர் சந்திப்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காரியங்கள் சாதிக்கப்பட வேண்டுமானால் தன் முனைப்பு என்ற ஊக்கம் மற்றும் தைரியம் இரண்டும் தேவையானது. இவை இன்றி எத்தகைய காரியங்களும் இல்லை. ஊக்கமுடன் கூடிய மன உறுதிக்கு முன்பு எத்தகைய தடைகளும் எதிர் நிற்க முடியாது. மன உறுதியுடன் கூடிய தனது முயற்சியானது தடைகளைத் தகர்த்து விடுவதோடல்லாமல், காரிய சாதனையைத் திறம்படச் செய்து முடித்து விடும்.

ஊக்கமுடைய மனிதர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையும் தவறானது என்று கண்டு கொண்டாலோ, உடனடியாகத் தங்களைத் திருத்திக் கொண்டு,
மிகச்சரியான பாதையைத் தேர்வு செய்து கொள்வார்கள். தைரியகுணம் கொண்டு ஊக்கத்துடன் காரியமாற்றுபவர்களுக்கு, வைராக்கியமுள்ள மனதும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டிருக்கும்.

சுவாமி அவர்கள் பலமாகச் சிரித்து விட்டு, “உனது நண்பனுக்கு மனிதாபிமான உணர்வு இருந்தால், அந்தப் பையனுக்கு, அவன் விழித்து எழும் வரை எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் உதவி செய்யச் சொல்லுங்கள்” என்று கூறினார். நான் உடனே அவருக்குத் தெரிவித்து, “சுவாமி ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் உங்கள் வீட்டில் வைத்து இந்தக் காரியம் நடை பெற்றுள்ளது” எனச் சொல்லியதும் அவர் புரிந்து கொண்டார். அதற்கு நாளையும், மறுநாள தான் பையன் கண்விழித்து எழுந்தான். சாதாரணமாக எல்லோரையும் போல இயல்புநிலை ஏற்பட்டிருந்தது. அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வாழ்த்தினேன். பையனின் தகப்பனாரும் மனம்மாறி நல்ல பாதையில் தன் வாழ்வைத் துவங்கி வெற்றி நடை போட்டார்.

மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்குக் கீழ்புறம் புதிதாக இன்னும் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அந்தப் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பக்கம் கடைகள் வரிசையாக இருக்கும். அதில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் எங்கள் நண்பர் ஒருவரின் கடை இருந்தது. மீனாட்சி அம்மன் கோயில் சென்று விட்டு நானும் சுவாமியும் மெல்ல நடந்து வந்தோம். அந்த நண்பர் பலமுறை தனது கடைக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார். சுவாமி யுடன் அந்தப்பக்கமாக நானும் சென்றதால் கடைக்கு அழைத்துப் போனேன். நண்பரும் நல்ல படியாக உபசரித்தார்.

வீடுகளுக்கு முன்புறம் கட்டும் திருஷ்டிக் கயறு விற்பனை செய்யும் சாமியார் ஒருவர் கடைக்கு வந்தார். அவரை சுவாமிக்கு அறிமுகப் படுத்தினார் நண்பர். நல்ல பண்புடையவர். அந்த சாமியாருக்கு நமது சுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. அவரும் ,” இவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இவரை சந்தித்ததில் பூரண சந்தோஷம்” என்றார். கடைக்கார நண்பர் அந்த சாமியாரிடம்,” பொள்ளாச்சி சுவாமிகளிடம் ஏதாவது கேளுங்கள்” என்று அவரை ஊக்குவித்தார். சாமியார் தலையில் பெரிய முண்டாசு கட்டி இருந்தார். சுவாமி கடைக்குள் அமர்ந்திருக்க, சாமியார் உள்ளே வந்தார். கடைக்காரர் நண்பர், “அந்த அதிசயத்தை நம்ம சுவாமியிடம் தைரியமாகத்தான் காட்டுங்களேன். அதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்!?”என்று அவரிடம் கூறினார்.

சாமியார் தனது தலைக்கவசம் போல் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்தார். எனக்குள் ஆவல் பிறந்தது. தலை முழுக்கப் பெரிய பெரிய ஆசிகள் அடிக்கப் பட்டுப் பார்த்தாலே யாருக்கும் பயத்தை உண்டு பண்ணும் விதமாக அது இருந்தது. சுவாமி அவரை அருகே அழைத்து,ஒவ்வொரு ஆணியாகப் பிடித்து இழுத்துப் பார்த்தார். மண்டை ஓடுடன் சேர்த்து பலமான பிடியில் ஆணிகள் இருந்தன. ஆறு அங்குல நீளம் இருந்த ஒரு பெரிய ஆணியைப் பிடித்து, சுவாமி பலமாக அசைத்துவிட அவர் வலியால் துடித்துப் போனார். கோயம்புத்தூர் அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் முண்டாசை அவிழ்த்துத் தனது தலையில் முளைக்கும் ஆணிகளை அவர் காட்டியதில்லையாம். அதன் விபரத்தை அவரிடமே சுவாமி கேட்டார். அவர் நமது சுவாமி அவர்களிடம் கூறியதை அப்படியே இயன்ற அளவுக்குத் தந்திருக்கிறேன்.

சாமியார் சீலைக்காரி அம்மன் என்ற ஒரு சக்தி வழிபாட்டை முறையாகத் செய்து வருபவர். யாரிடமும் யாசகம் பெற்று வாழ்வது பிடிக்காத அவருக்கு, உழைத்து சாப்பிடுவோம் என்ற என்ற எண்ணத்தில் திருஷ்டிக் கயறு விற்பனை செய்து கிடைக்கும் சொற்பப் பணத்தில் வாழ்வை நடத்தி வருபவர். வருடத்திற்கு ஒருமுறை அம்மன் பூஜை வழிபாடன்று அவருக்கும், அவரது மனைவிக்கும் இரண்டு உடுப்புகள் ஆகாயத்தில் இருந்து அவர் வழிபடும் அம்மன் தருவதால் அதற்குச் ‘சீலைக்காரி அம்மன்’ என்பது பெயராம்.அந்த மஞ்சள் நிற உடைகள் தவிர வேறு உடைகள் உணிய மாட்டார். இவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ட திரு.ஜி. டி.நாயுடு அவர்கள், தனது ஆராய்சிக்காக இவருக்கு அழைப்பு விடுத்தார். மரியாதை நிமித்தமாகப் புறப்பட்டுக் கோவை சென்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button