ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•09•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(76) மனிதனே புனிதன் —
அதிசய மனிதர்கள் இருவர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயமுத்தூர் அதிசய மனிதர் திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் சிறு வயது முதற் கொண்டே மேதையாகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர். அன்னாரது தந்தையார் பள்ளி வயதில் அவருக்கு மோட்டார்சைக்கிள் வாங்கித் தந்தபோது, அந்த வாகனத்தை அச்சுவேறு, ஆணி வேறாகப் பிரித்துத் திரும்பவும் அப்படியே மோட்டார் சைக்கிளாக்கி ஓட்டிக் காட்டியவர். அந்த அளவிற்கு ஞாபகசக்தி மிகுந்த அதிசய மனிதர்.
இந்த வரலாறு பற்றி எழுதுவதன் நோக்கம் யாரையும் புகழவோ அல்லது இகழவோ அல்ல! எனதறிவிற்கு எல்லா செய்திகளையும் சேகரிக்கும் போது பலதடவைகள் அதனைப் பற்றி முழு விபரங்களும் தெரிந்த பிறகே, உண்மை என்றால் மட்டுமே எழுதிக் கொண்டு வருகின்றேன். திரு.ஜி.டி.நாயுடு அவர்களைப் பற்றி அக்காலத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. தனது ஆராய்ச்சிக்காக முண்டாசு சுவாமியை மதுரையில் இருந்து வரவழைத்தார்.
“ஆணி தானாக தலையில் உருவாகவே முடியாது. இது முண்டாசு சுவாமியேதான் செய்கிறார். தெருவில் பக்கிரிகள் செய்யும் மாயா ஜாலம் போன்றது இந்த ஜாலம்” என்று கூறிய கோவை யின் அதிசய மனிதர், முண்டாசு சுவாமிகளை இருபத்தி நான்கு மணி நேரமும் தனது கண்காணிப்பில் வைத்திருந்தார்.
இரவில் ஆணியை சாமியார் தலையில் அடிக்காமல் இருக்க தலைக் கவசம் வேறு! கையை அசைய விடாமல் ஏற்பாடுகள் தனி. தனியறையில் சாமியாரை வைத்து கண்காணித்தல் எல்லாம் நடை பெற்றது. அதிகாலையில் முண்டாசு சாமியைப் பார்க்கப்போன திரு. ஜி.டி.நாயுடு ஐயா அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தலைக்கவசம் மூன்றடி உயரத்தில் நின்றிருந்தது. தலையில் ஆணிக்குப் பதிலாக கடப்பாரை முளைத்து மூன்றடிக்கு வளர்ந்திருந்தது. இதன் காரணமும் புரியவில்லை. கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, மதுரைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபரங்களை முண்டாசு சாமியார் கூறும்போது நமது சுவாமியும் உடன் இருந்தார்.
நமது சுவாமி அவருக்காக ஜெபம் செய்தார். தினமும் ஆணி முளைக்கும் போது தலை வலி தாளாது துடிப்பதாகக் கூறினார். அவரது கண்களைத் பார்த்து சுவாமி கூறியது, “இனி தலையில் ஆணிகள் முளைப்பது
படிப்படியாகக் குறைந்து விடும். சீலைக்காரி அம்மனுக்கு நீங்கள் வழிபாடு செய்யும் போது எமது நன்றியைத் தெரியப் படுத்துங்கள்” என்று கூறி விடை கொடுத்தார். ஆணிகள் முளைப்பது படிப்படியாகக் குறைந்தது. நல்ல முறையில் அம்மன் வழிபாட்டில் திளைத்து மகிழ்ந்தார்.
நான் பெற்ற அனுபவங்களை இடையிடையில் கூறுவதால் வரலாற்றின் சுவை கூடுமே தவிரக் குறையாது. அவருடன் குரு மலை, சதுரகிரி மலை, சபரிமலை, சுருளி மலை சென்று பெற்ற அனுபவங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைப்பவை. வரலாற்றின் இடையில் அதையும் கூறுகிறேன். இனி சுவாமி பொள்ளாச்சி தியானக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெற்ற அனுபவங்கள், அவரது ஞானப் பாடங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.