அசையும் அசையாச் செல்வம்!

241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•06•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(362) மனிதனே புனிதன் —
அசையும் அசையாச் செல்வம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஐவர் மலையின் மீது தென்புறத் தில் இருக்கும் தாமரைக் தடாகம் நீர் நிறைந்து, காற்றைக் குளிர்ச்சி மிக்கதாக ஆக்கிக் கொண்டிருந் தது. சிவக்கோலம் பூண்ட சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி யும், ஸ்ரீ விஷ்ணு கோலம் கொண்ட இளம் துறவியும் அருகருகே அமர்ந்து தெய்வீக சம்பாஷனையில் ஈடுபட்டிருந் தனர். அங்கேயிருந்து கிழக்குத் திசையில் பழனி மலையின் உச்சியில் கோபுரக்கலசம் சூரிய ஒளியில் மின்னுவது தெரிந்தது. இனி அவர்களின் உரையாடல் களின் சாரத்தைக் கவனித்துக் கேட்போம். முதலில் கல்வி கற்றுக் கொள்வதால் ஏற்படும் அறிவின் சிந்தனை விருத்தி மேம்பாடு அடைவது நன்மை தான் என்றாலும் அதனை சம்பாதிக்க மட்டுமே பயன்படும் விசித்திரம் இக் கலியின் யுக தர்மமாக மனிதன் உருவாக்கிக் கொண்டதைப் பற்றியதாக இருந் தது. கல்வியின் மூலம் அறிவை அடையாமல் கல்லா ஞானத்தின் மூலம் மெய்ஞானம் பெற்றிட்ட மகான்கள் பற்றி பேசிக் கொண்ட னர்.

எந்த பாஷைகளிலும் பாண்டித் யம் இல்லாமலும், வேதங்களின் ஞானம் இல்லாமலும், வேறெந்த நூல்களையும் கற்காமலும், மகா ஞானியர்கள் இறைவனது அனுபூதியைப் பெற்று, உலகின் எந்தவொரு விஷயத்தின் சாரத்தையும், தன்னுள் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை யும், ஞானத்தையும் பெற்றிருப் பார்களாம். இத்தகைய ஆன்மீகப் படிப்பு மிகவும் முக்கியமானதாக எண்ணப்படுகின்றன. இன்னொரு விஷயத்தை இளம் துறவி கூறினார். “நதியைக் கடக்க உதவுகிற படகு அழகாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை தான். ஆனால் அது ஓட்டை விழுந்த படகாக மட்டும் இருக்கக் கூடாது. ஞானத்தைப் பெற்று விட்ட அறிவாளியானவன் தான் எந்த நிலையிலும் தனது குருநாதரை ஒதுக்கி வைத்து விட மாட்டான். குரு நிந்தனை யில் ஈடுபடுபவர், தான் கற்றுக் கொண்ட வித்தைகளின் சாபத் திற்கே ஆளாகின்றார். எந்த தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றாது. குலசாமி அவர்களுக்குப் பகையாக மாறி விடும். அறிவாளி தனது நல்ல குணங்களை எதற்காகவும் இழந்து விட மாட்டார்.”

இளம் துறவி மேலும் கூறினார், “இறைவனிடம் எந்த வித முயற்சியும் இல்லாமல், இயற்கையாகவே இரண்டு வித செல்வங்கள் நிறைந்துள்ளன. அதனை இறைவனால் படைக்கப்பட்டு இப் பூவுலகி னுக்கு அனுப்பப்பட்டு, இறைவன் செய்தியினை வேதங்களாகக் கொண்டு வந்த தெய்வங்கள் மட்டுமே இதனை அறிந்திருந்த னர். ரிஷிகள், சித்தர்களின் உலகப் பொதுநலன் கருதி , தெய்வ சங்கல்பம் என்னும், நற்சிந்தனைகளால் கவரப்பட்ட, தெய்வங்களால் உணர்த்தப் பட்டதே இறைவனின் இரண்டு செல்வங்கள் ஆகும். நகருவது (அசைவது), நகராதது (அசையா தது) என்ற இருவிதச் செல்வங் களில், ஞானத்துடன், மெளன மாகக் கூடியிருப்பது அசையாச் செல்வமே. இயற்கையாகவே இவ்விரு செல்வங்களை உடைய இறை சக்தியிடம் நகராத ஒன்று ஞானத்துடன் கூடி அமைதியாக உள்ளது. எந்தவிதமான மாறுத லும் அற்றவராகப் பரம்பொரு ளாம் பராபரம் விளங்கிக் கொண்டு உள்ளது. தன்னிடம் உள்ள நகராத பிரக்ருதி என்னும் ஆற்றலைக் கொண்டு சகல உலகங்களை எல்லாம் படைத்த இறைவன், அதனுள் நகரும் பொருளாகிய சகல வித ஜீவன் களையும் உலகத்தில் விட்டு, தானும் எல்லா வற்றிலும் உள் நுழைந்து உடலும், உயிருமாகப் பரவி இருப்பது இறைவனே! பிறகு அசையாத தனது பிரக்ருதி சக்தியாகிய உலகங்களை எல்லாம் அசையக் கூடியதாக ஆக்கினார். சுக துக்க வாழ்வில் அலையக் கூடிய ஜீவனையும் அதனுடன் சேர்த்துப் படைத்தார். எல்லாவற்றிலும் கர்மபலன் களை அனுபவித்துக் தீர்த்த பிறகு ஜீவன்கள் தன்னுடன் மோட்சம் அடைந்து ஆனந்தம் அனுபவிக்கவே இத்தனையும் இறைவன் செய்து கொண்டிருக் கிறார். ஆனால் இறைவன் அசைவது இல்லை.

அவர் இருக்கின்ற பட்சத்தில் காந்தத் தின் முன்பு எல்லாம் அசைந்து ஆடுவதைப் போல உலகில் உள்ள அனைத்துக் காரியங்க ளும் நடைபெறுகின்றன. இங்கு காந்தம் என்று குறிப்பிடுவது, இறைவனின் மாயா சக்தி தொழில்படுவதைத் தான். இப்படி மேதினியில் அசைவன, அசையாதவன எல்லாவற்றி னுள்ளும் இறைவன் இருப்ப தால், அவைகள் இறைவனுக்கு மேனியாகின்றன. அதனால் அவை- அவர் என்று இறைவ னைப் பிரித்து அறிய முடிய வில்லை! காரிய பிரம்மமாகிய ஜீவன்களும், காரண பிரம்ம மாகிய இறைவனும் வேறு வேறல்ல! அனைத்துமே இறைவனைச் சேர்ந்தவையே! எனவே மெய்யன்பர்களும் இறை வனது சொத்தே! அவர்களை விட்டு இறைவன் என்றும் பிரிவது இல்லை என்பதே உண்மை. இறைசக்தியே பரப்பிரம்மம். அனைத்திலும் உயர்ந்தவர். மங்களகரமானவர். சகல சாரம்சங்களின் அடிப்படை அவரே. இறைவன் இறப்பு, பிறப்பு அற்றவர். அமைதியின் வடிவமும் அவரே. புகுந்து அறிய முடியாத மஹா ஆற்றல் சக்தி யும் அவரே. சகலரும் அவரை யே வழிபடுகின்றனர் ” என இளம் துறவி கூறினார். இதனை ஞானமடைந்தவர் அறிந்து கொண்ட உண்மைகளாகும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button