ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•10•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(106) மனிதனே புனிதன் —
அக்கினிப் பூக்கள் அறிவே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒலி + ஒளி = காரிருள். பேரண்ட இருளின்கண் விழிப்பு நிலை பெற்ற வாலிறைவன் என்னும் பராபரம், தனது தன்முனைப்பில் கிரியை உற்றது. இயற்கையின் இயல்பினால் அதற்குப் பசியை உண்டு பண்ணிற்றாம். அதற்கு உணவு அங்குள்ள நாதமே ஆயிற்று. நாதத்தினை உட்கொண்ட பராபரம் உண்டபின் வெளிப்பட்ட பொருட்களாய், அதனுள் இச்சை ஏற்பட்டு சிருஷ்டிக்கும் காரியத்தை உருவாக்கிக் கொண்டதாம்! இதற்கெல்லாம் காரணமாக அறிவின் குணவிஷேசத்தால், அணுக்களாய், பலவித நிறங்களும், பலவித மணங்களும், பலவித குணங்களும் உருவாக்கி, அறிவின் முதிர்ச்சியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
ஒலி, ஒளி இணைந்த காரிருளில் ஆதி உயிரணு தனது ஏக்கத்தினால் ஏற்பட்ட உறக்கமும், பின்பு நாதத்தினால் ஏற்பட்ட விழிப்பினால், விழித்தபின் உண்டான பசியினால், அதற்காக உண்ட ஆகாரம் அறிவின் அணுக்களே! தன் முகிழ்வில் சிருஷ்டித்த போது, படைப்பின் ஆற்றலாய் அது வெளிப்பட்டது. படைத்தல், கருணை, அன்பு, அழகு எனும் தைரியம், தானும் வளர்வதும், பிறிதொன்றை வளர்ப்பதும், சகலவித அபிரிமிதங்களும், எதையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியும் ஆகிய குணங்களுடன் விளங்கின! அக் குணத் தன்மைகள் பக்குவ நிலைக்கு முன்பு, அமில குணங்கள் மிகுத்த தன்மைகளாய், எங்கும் காந்தபுல சக்தியால் விரிவடைந்தது. சகலத்தையும் படைத்துக் கொண்டே தானும் வளர்ச்சி பெற்றது. சகலத்தையும் இறைசக்தி தனது இயல்பில் சகல புவனங்களையும் படைத்துக் காத்து ரக்ஷித்தது!
ஆனைமலையில் இருந்து வந்த சாமியார் அவர்களுக்கும் நமது சுவாமி அவர்களுக்கும் நடை பெற்ற சம்பாஷனைகளின் சாரத்தையே உங்களுக்குச் சுருக்கமாக வழங்கியுள்ளேன்! ஒளி, ஒலித் தன்மைகளை விவரித்துக் கொண்டே செல்லலாம். அதற்கு நாம் எடுத்த இந்த ஜென்மம் போதாது.
சுவாமி அவர்களுடன் சதுரகிரி மலைக்குச் சென்றிருந்தோம். அந்த சமயம் வனம் வாழும் சித்தர்கள், ஆகாய கேந்திரத்தில் தொடர்பு கொண்டிட, ஒரு ஏற்பாட்டை வனத்தினுள் கடைப்பிடித்து வந்த இடத்தில், அவருடன் தியானத்தில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் இலங்கை, கொழும்புவைச் சேர்ந்த திரு.குகன் ரொலக்ஸ் அவர்களும் தியானத்தில் எங்களுடன் இருந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடமானது ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் நிலவின் ஒளியில், சித்தர்கள் கூடி தவம்புரியும் இடம். அங்கு அவர்கள் பலவகையான ஆலோசனைகள் செய்து, உலக நன்மைக்காக சில தீர்மானங்களை நிறைவேற்றுகின்றார்கள். அதனை ஆகாயத்தில் பிரபஞ்ச வெளிக்குச் செய்திகளை அனுப்பி வைக்கின்றார்கள். ஏன்? எதற்காக? அதற்கு அவர்கள் ஓங்காரத்தைக் கொண்டு, அங்குள்ள மூன்று விருக்ஷங்களைப் பயன் படுத்துகின்றனர் என்பதே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் தான்! நமது சுவாமி மெளனத்தில் இருந்து அங்கு பல விஷயங்களை அறிந்து கூறினார்கள்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.