ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•07•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(23) மனிதனே புனிதன் —
அக்கினிப் பிரவேசம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நான் குறிப்பிடும் மந்திரங்கள் தெய்வீக ஆலய வழிபாட்டில் பயன்பாட்டில் இருக்கும் தெய்வ மந்திரங்கள் அல்ல!
ஆவிஉலக ஆத்மாக்களை வசப்படுத்தி எடுக்கப்படும் மந்திரத்தைத் தான் என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டீர்கள் என்றால், இப்போது நான் கூறும் சுவாமியின் விளக்கத்தைத் புரிந்து கொள்வீர்கள்.
ஆவிஉலக சக்திகளைப் பெறுவது அல்லது நாமே ஆவிகளை உருவாக்கி மந்திரம் மூலமாக வசப்படுத்திக் காரியம் ஆற்றுவது என்பது உண்டு.
இதற்கு நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் சரியாகக் கணிக்கப்பட்டு மிகப்பெரிய நெருப்புக் குண்டம் ஆழம் அதிகம் உள்ளதாகத் செய்து, அதில் அக்கினி பெரும் ஜூவாலையுடன் எரிந்து கொண்டே இருக்கும் படி செய்வார்கள்.
அதன் முன்பு எந்த மந்திரம் உயிர் பெறவேண்டுமோ அந்த மந்திர உச்சாடனம் நடை பெறும்.
அதேமந்திரத்தை ஜெபம் செய்கின்ற குழந்தையோ அல்லது பெண்ணையோ அவர்கள் விரும்பிய வண்ண ஆடையை உடுத்திப் போதைப் பொருள் கலந்த உணவை உண்ண வைத்து, கொட்டு முழக்கத்துடன் தன்நிலை மறந்து ஆடச்செய்தபடியே, சந்தோசமாக அழைத்து வருவார்கள்.
அக்கினி குண்டத்தை வலம் வரச்செய்து ஆவேசம் அதிகரித்து ஆடும் பொழுது, அக் குண்டத்தினுள் அவர்களைத் தள்ளி விட்டு விடுவார்கள்.
மந்திர ஒலியுடன் உயிர் பிரியும்போது, ஆவிஆத்மாவாக வெளிப்படும் நிலையில், அவர்கள் உண்ணும் உணவு, ஆடைகள் வைத்து விடாமல் அம்மந்திரத்தை உச்சாடனம் செய்யும்போது, அதற்கு அது மந்திர ஆத்மாவாக மாறிவிடும்.
அவைகளை அழைக்க அந்தப் பொருட்கள் வைத்து யாககுண்டமோ , விக்கிரகமோ, அல்லது எந்திர சாதனங்களோ அவைகளில் இருக்கச் செய்து ஏவலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இப்படியே அநேக மாந்திரீக மந்திரங்கள் வழிபாட்டிலும் கலந்து விட்டிருப்பதால், மந்திரத்தின் அர்த்தம் தெரியாதவர்கள் அதை உச்சரிக்கக் கூடாது.
அதனால் தான் மந்திரங்களின் பொருள் தெரிந்து கற்றுணர்ந்த வேதியர்களைக் கொண்டே நல்ல பூஜை புனஸ்காரங்களை நடத்துவதற்குக் காரணம்.
தீய சக்தி மந்திரங்களை வேதியர்கள் உச்சரிக்க மாட்டார்கள். அதனால் தான் தெய்வீக காரியங்களை அவர்கள் சந்தோஷமாக நடத்தித் தருகிறார்கள்.
அருண் இதனைக் கேட்டு நன்றி கூறினார்.
அதற்கு சுவாமி, எனது குருநாதருக்கே அது சேரட்டும். அவர்கள் சொன்ன நல்ல விஷயமே தெய்வீக மந்திரத்தை உச்சரிப்பதால் குலதெய்வ பாதுகாப்புக் கிடைக்கும் என்பதே என்றார்.
கோயில்களில் கலச வழிபாடு நடை பெறுகின்றது. அதை வீடுகளில் ஏன் வைத்து வழிபடச் சொல்கிறார்கள்? அதில் உள்ள உண்மையைச் சொல்ல வேண்டுகிறேன் என்று பவ்யமாகக் கேட்டுக் கொண்டேன்.
அதன் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் குருநாதர் சொன்னதுதான் என்றார்.
சுவாமி அவர்கள் தனது குருநாதரை எண்ணாத நேரமே இல்லை என்று கூறலாம். இவரைப் போலவே குரு பக்தி எங்களுக்கும் வரவேண்டும் என்று மனதார வேண்டினோம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.