அகால மரண பயம்!

259

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•01•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(209) மனிதனே புனிதன் —
அகால மரண பயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள் வீட்டில் திரு.கோவிந்து அண்ணா குடும்பத்தினரை வரவேற்றாலும் சுவாமியின் தாயாருக்குத் தான் வளர்த்த பிள்ளையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஆதங்கத்தில் அவருடைய உடல் நலம் குன்றியது. திரு.கோவிந்து அண்ணாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் குடும்பம் இங்கேயே கிராமத்தில் தங்கி குடியிருக்க வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிக் கொண்டார்கள். யக்ஷன் திருமதி.தேவானை உடலில் புகுந்து கொண்டு ஆட்டிப் படைத்தான். திருமதி.தேவானை தலைவிரி கோலமாக ஆடுவது கண்டு, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் பயந்து அலறினார்கள். அதுகண்டு யக்ஷனும் அவள் உடலில் இருந்து அலறி ஓலமிடுவதும், கலவரம் செய்வதும் தொடர்ந்தது.

வீட்டைக் காலி செய்து தருமாறு வீட்டின் சொந்தக்காரரின் வற்புறுத்தல் பலமாக எழுந்தது. மருத்துவ மனையில இருந்து திரு. கோவிந்து அண்ணா முழுமையாக குணம் பெற்று பழைய உடல் வலிமையை முன் போல் பெற்று வீடு திரும்பினார். வீட்டின் உரிமையளர் யக்ஷனின் அடாவடித்தனத்தைக் கண்டு பயந்து போய், மிகவும்
குழைவாக நடந்து கொண்டு, தேவானை யக்ஷனிடம்
பேசத்துவங்கினார். ஏதாவது பெரியதாகப் பூஜை போட்டு, உடுக்கை தட்டி, சாப்பிட ஏதாவது கோழியைக் கொடுத்தால் இந்தப் பெண்ணைப் பிடித்த பேய் ஓடிவிடும் என்று எண்ணிப் பேசப் போனார். எப்படியாவது வீட்டைக் காலி செய்து விட வேண்டும் என்ற நினைப்பில் போனவரின் கைகள் இரண்டையும், பலமாகக் பிடித்துக்கொண்டு “ஓ ஓ ஓ” வென பலமாகச் சப்தமிடவும், அவரும் பயந்து போய் அலறினார். எல்லோரும் ஓடிவந்து தேவானை யக்ஷனிடம் இருந்து அவரைக் காப்பாற்றினர். அவருடைய கைகளில் பலமாகச் சுளுக்கு ஏற்பட்டுப் போடிபாளையம் ஒரிஜினல் காளீஸ்வரி வைத்திய சாலையில் வைத்தியம் செய்து கொண்டு, எண்ணைபூசிய கைகளுடன் ஊருக்குள் நடமாடினார்.

திரு.கோவிந்து அண்ணா பாடு திண்டாட்டமாகி விட்டது. திருமதி.தேவானை உடலில் இருந்து யக்ஷன் பற்களை நறநறத்தான். “டேய் கோவிந்து ஊருக்குத் திரும்ப வேண்டும். என்னடா சொல்லப் போகிறாய்?” என்று சப்தமிடவும், கேரளாவிற்குச் செல்ல விரும்பாத திரு.கோவிந்து அண்ணா மெளனம் சாதித்தார். “டேய் இவளைக் கொல்லுவேன். என்னுடன் கூட்டிப் போய் விடுவேன். இதுதான் நடக்கும் ” என்று கொக்கறித்தான். அதன் பிறகு திருமதி.தேவானை உடல்
நலம் சீர்கேடடைந்தது. இதற்குப் பிறகு வேறு வழியின்றி திரு.கோவிந்து அண்ணா குடும்பத்தினர் பனங்காவு திரும்பினர். எல்லாம் சரிவர ஓழுங்காக மாறிவிட்டது. ஆனால் யக்ஷன் பழிவாங்கும் நோக்கில் இருந்து மாறவில்லை.

அதன் பிறகு திரு. கோவிந்து அண்ணா குடும்பத்தைப்பற்றி ஏதும் தெரியவில்லை. பனங்காவு சென்று விசாரித்து வந்தவர்களும் சரியான பதிலைக் கூறவில்லை. புதிராகவே ஒருவருட காலம் சென்று விட்டது. திரு.கிருஷ்ணன் குட்டி அவர்கள் பொள்ளாச்சி சந்தைக்கு பாரவண்டியை ஓட்டிக்கொண்டு கிராமக்கடைக்கு வந்திருந்தார். மொட்டை போட்டிருந்த அவர் திரு.கோவிந்து அண்ணா அவர்களுக்கு ஏற்பட்ட அகால மரணச் சேதியைச் சொன்னார். “நன்றாக இருந்தவனை இரவுப் பொழுதில் அவளது உடலில் இருந்த யக்ஷன் சல்லாபிக்க அழைத்து உயிரைக் காவு வாங்கி உள்ளான்.மந்திரவாதியின் ஏவல் காலம் முடிவுக்கு வந்த பிறகு யக்ஷனும் மறைந்து விட்டான். இப்போது அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற திரும்பவும் தினக்கூலி வேலைக்குச் செல்கிறாள். விதவைக்கோலம் பூண்டு விளக்கு வழிபாடு செய்து வருகிறாள். பாட்டியும் இறந்து போனாள். நாங்கள் எல்லோரும் உதவிகள் செய்து வருகின்றோம். எப்பவும் பனங்காவு பாட்டி வீட்டை யக்ஷன் காவல் காப்பதாகக் கூறுகிறார்கள். பின்புறத்தில் தொடியில் அடிக்கடி சுழல் காற்று சுற்றுவதால், அவன்தான் யக்ஷன் என்கிற செய்தியும் உலவுகிறதாம்.” திரு.கிருஷ்ணன் குட்டி கண்ணீருடன் இதனை கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். தீய சக்திகளுக்குச் சொந்தக்காரர்களின் பேராசைக்கு அருமையாக வாழ வேண்டிய குடும்பம் ஒன்று பலியானது.

இதனை உணர்ந்து தெய்வ குணங்களில் வளர்வோம் மெய்யன்பர்களே!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button