குரு ஈஸ்வராலயம் பொன்மொழிகள், guru eswaralayam, guru eswaralayam charitable trust, charitable trust in pollachi, charitable trust in coimbatore, charitable trust in tamil nadu, charitable trust in india, non-profit organization, non-profit organisation, palli konda sri selva anjaneyar, parihara sthalam, thavath thiru nagarajan swami, dhavath thiru nagarajan swami

Golden Words in Tamil (குரு ஈஸ்வராலயம் பொன்மொழிகள்)

 

அருட் பெருஞ்ஜோதி ஆனந்த ஜோதி

ஆதி சிவமாகி வந்த ஈஸ்வர ஜோதி

தந்தை தாய் ஆவானும், சார்கதியிங்கு ஆவணும்,

அந்தமிலா இன்பநமக்காவானும், எந்தனுயிர் தானாகுவானும்,

சரணாகுவானும், அருட்கோனாகுவானும் குரு.

 

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனே வாழ்க

பரிபூரண சச்சிதானந்த சொரூபனே வாழ்க

சுத்த பரப்பிரம்ம ஜோதி வடிவானவனே வாழ்க

கலியுக தெய்வமே திவ்ய மங்கள ஜோதியே வாழ்க

அன்பர்க்கு வரமருளும் சர்வமங்கள ஜோதியே வாழ்க

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே! வாழ்க!

 

  • சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர மகாஜோதி வாழும் குரு ஈஸ்வறாலயத்தில் நாமும் ஓர் அங்கம்.
  • நம்முடைய உடல், உயிர், மனம், ஆன்மா ஆகியாவற்றிற்கு பிறரின் தீய எண்ணஅணுக்கள் அணுகாது.
  • நாம் பிற ஆன்மாக்களின் நன்மையிலேயே கருத்தாக இருப்போம்.
  • நம்மைப் பார்பவர்களுடைய வாழ்க்கை நலமாகவும், வளமாகவும் உயர்வு பெறும்.
  • நாமும் வற்றாத இகபர சுகங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
  • நல்லதையேநாம் எண்ணி, தர்ம சிந்தனையுடன் விளங்கிடுவோம்.
  • சத்தியம், தர்மம் செழித்திட சொல்வாக்கும், செல்வாக்கும் பெற்றிடுவோம்.
  • ஸ்ரீ ஈஸ்வர! எங்கள் மனம், அறிவு, உடல், உயிர், ஆன்மா இவைகளை உங்கள் திருவடிகளில் சமர்ப்பித்து சரண் அடைகிறோம்.
  • சகல ஆற்றலும், மேன்னையும், கருணையும் கொண்டு எல்லா உயிர்களிடமும் சக்தியாய் வெளிப்படும் இறைவா! ஜோதி வடிவான ஸ்ரீ ஈஸ்வரா! எப்பொழுதும் உம்மையே தியானிக்கிறோம்.
  • அருள் புரிய வேண்டும்.

 

குரு ஈஸ்வரலயம் வளர அருள்வாய் செய் ஈஸ்வர மஹா ஜோதியே இறைவா!

வளம் பெருக! அருள் பெறுவோம்!!

வளம் பெருக! அருள் பெறுவோம்!!

வளம் பெருக! அருள் பெறுவோம்!!