மாந்திரீகத்தின் பிடியில்?

0 176

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•08•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(29) மனிதனே புனிதன் —
மாந்திரீகத்தின் பிடியில்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“பிரார்த்தனையானது அறிந்து செய்து வந்தால் அது, இறைசக்தியின் அருளைக் பெற்றுத் தந்து விடும்”.

“நினைத்ததை அடைய தன்னம்பிக்கையும் அதனுடன் இறை நம்பிக்கையும் வேண்டும்.”

” அப்படியே நம்பிக்கையுடன் நமது முயற்சியும் கூடினால், நாம் நினைப்பது
நல்ல எண்ணமாயின் அத்தனையும் வெற்றி பெறும்.நாம் நினைப்பது நடக்கும்.”

“அப்படிப்பட்டவர்களுக்கு, இறைவழியில் உண்மையுடன் செல்பவர்களுக்கு, வையகமும், வானகமும் உதவிகள் செய்யும்” இந்த வரிகளை அடிக்கடி சுவாமி சொல்வார்கள்.

அதனால் தான் இறைசக்தி
தனது உதவிகளை அள்ளி வழங்கிட இவரிடம் வந்தது. வந்து தக்க ஆலோசனையும் கூறியது.

மார்ச்ச நாயக்கரும், அம்பல நாயக்கரும் அண்ணன் தம்பி யாக, அரசாட்சி செய்தவர்கள். நாகவம்சத்து தேவிவழிபாடு களும், பிரசண்டவிநாயகர் பூஜைகளும் செய்து வந்தார்கள்.

இருவரும் ஒற்றுமையாக வாழ நாகதேவி ஆலயத்தை ஆற்றின் கிழக்குப் பகுதியிலும், பிரசண்ட விநாயகருக்கு ஆலயம் அண்ணன் மார்ச்ச நாயக்கர் ஆண்ட மேற்குப் பகுதியிலும் அமைத்து வழிபட்டனர்.

நிலப்பாலம் போக்கு வரவு வசதியைத் தந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில், பரிசலில் இருபுறமும் கயிறு கட்டி இழுத்து சென்ற வர ஏற்பாடுகள் இருந்தது.

விநாயகருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் நடத்தும் அளவுக்கு மார்ச்சநாயக்கர் செல்வ வளம் மிகுத்து வாழ்ந்திருந்தார். ஆனால் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை.

தம்பி அம்பலநாயக்கர் மனைவி அக்கம்ம தேவிக்கு நீண்ட நாட்களாகப் குழந்தை பாக்கியம் இல்லாததால், விரதத்தை அனுசரித்துக் கணவனது மனங்கோணாமல் நடந்து ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். நாகலாதேவி எனப் பெயரிட்டு இரண்டு குடும்பங்களும் மகிழ்ந்தன.

காலப்போக்கில் அண்ணன் மார்ச்ச நாயக்கர் குடும்பம் வாரிசு இல்லாததால், தம்பி அம்பல நாயக்கர் குடும்பத்தினர்களை அவமதிக்கும், பெண்கள் சண்டை யாக மாறி விட்டது. காரணம் பொறாமை உணர்வு.

இந்த உணர்வு வந்தவுடன் குடும்ப உறவு, போக்கு வரவு எல்லாம் நின்று போனது. பழிவாங்கும் உணர்வு மேலோங்கி விட மாந்திரீகத்தை நாடினர். அதனால் மேலும் மனங்கெட்டுச் சொந்த அறிவு வேலை செய்யாமல், மாந்திரீகன் கைப்பாவை ஆகி நாட்டில், வீட்டில் குழப்ப நிலை நிலவியது.

தம்பி அம்பலநாயக்கர் தெய்வசக்தியான நாக தேவியை வழிபட்டுச் கொண்டு, ஏவல், துன்பங்கள் எது வந்தாலும் அதனை முறியடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

நாட்டில் குழப்பங்கள் அதிகப்படக் கள்வர்களால், இரு பகுதிகளிலும் பாளையங்களுக்குப் பெருத்த இன்னல்கள் ஏற்பட்டது. மக்கள் துன்பம் சொல்லி மாளாது. உதவிக்குத் திருச்சி மன்னரை உதவிக்கு அழைக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டு விட்டது.

நல்ல உள்ளம் கொண்ட மக்களை, சத்திய தர்மத்தைக் கடைப் பிடிப்பவர்களை, ஆதரவற்ற நிலையில் வாழ்பவர்களைக் காப்பாற்றுவதும், தீமைகள் புரிவோரைத் தண்டித்துத் திருந்தி வாழச் செய்வது அரச தர்மமாகும்.

இதனால் இறைவன் கருணைக்கு நாட்டினர் ஆளாகமுடியும்.அன்பைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறொன்றும் இல்லை. ஆனால் நயவஞ்சக எண்ணமும், சுயநலப் பேயும் பிடித்து ஆட்டுபவன், மாந்திரீகன் பிடியில் அகப்பட்டுத் தனது சொந்த அறிவை அடகு வைத்தவனை, அவனது குடும்பத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே மார்ச்சநாயக்கர் வரலாறு நமக்குச் சொல்லும் ஒரு நல்ல பாடம்!

இந்த சமயத்தில் தான் நாகலாதேவி பூப்படைந்தது. அவளைத் தீமைசக்தி படுத்திய கொடுமையில் நாடே அழிந்தும் போனது!?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button