ஈசா, சாப நிவிர்த்தி வேண்டும்

299

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•08•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(400) மனிதனே புனிதன் —
ஈசா, சாப நிவிர்த்தி வேண்டும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தப் படுவதில் உலகினுக்குத்தான் பயன் யாது? ஆயினும் பலனைத் தேடும் ஆத்மாக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஐயா திரு. ஷண்முகம் அவர்களின் இந்த உரையாடல் பல தீர்வுகளுக்கு வழி வகுப்பதால் அறிந்து கொள்வதில் தவறேதும் இல்லை. இப்போது துறவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஜோதிட நிபுணர் திகைத்துப் போய் இருந்தார். அங்கு அவருக்கு இன்றியமையாத ஓர் அதீத சக்தி கைவரப் பெற்றிருந் தது. அதன் ஆற்றல் உடல் எங்கும் மின் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. துறவியின் கண்களில் நீர் வழிந்த படியே இருக்க ஜோதிடரிடம், “அப்பா, நீ நடை பெற்ற வரலாற்று ஏட்டில் மறைக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொண்டாய். குருநாதன் சீடன் இருவருமே எதிர் சாபத்தில் இருந்து விடுபட நீ உதவி செய்ய வேண்டும். இங்கு சரியான பரிகாரங்கள் காண வேண்டும். எனக்கு இதில் ஏன்? அக்கறை என்று நீ சந்தேகம் கொள்ளலாம். நானும் ராஜ வம்சத்தில் வந்திருப்பதால் தான் இதில் அக்கறை கொண்டிருக்கி றேன் ” என்றார். ” நான் இதில் செய்ய வேண்டியது ஏதும் இல்லை. இதற்கான பரிகாரம் எனக்குத் தெரியாது. அதனைத் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது வழிவகைகள் இருக்கின்றனவா? அதனைத் தாங்கள் தான் கூற வேண்டும்” எனத் திரு ஷண்முகம் அவர்கள் கூறினார்.
ராஜதுறவி , “அப்பா ஷண்முகம், நீ எமக்காகக் கருவூர் பசுபதி நாதர்ஆலயம் செல்ல வேண்டும். விபூதியும், வில்வ தளமும் உடன் கொண்டு செல்லுங்கள். கருவூரார் சன்னிதானத்தில் தான் இதற்கு விடை கிடைக்கும். நீங்கள் தான் எப்படியாவது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். எப்போது புறப்படு கின்றீர்கள்? ” எனக் கேட்டார்.

ஜோதிடநிபுணர், “ஆகட்டும் ஐயா, நான் புறப்படுகிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லிப் புறப்பட்டு விட்டார். அவருக்கோ மலைப்பாக இருந்தது. குரு தோஷம் என்பது மிகவும் கடுமை வாய்ந்த விஷயமாகும். தெய்வ மன்னிப்பு என்பது இந்த தோஷத்திற்கு வழங்கப்பட வில்லை என்று தான் கூறப் படுகிறது. எப்படியாவது இந்த தோஷத்தில் உள்ள எதிர்சாபமும் விலக வேண்டும் என்று எண்ணியபடியே புறப்பட்ட அவர் மனதில் அநேக சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டார். அன்று ஹஸ்தம் நட்சத்திரம். பசுபதிநாதர் ஆலயத் திற்குள் சென்ற ஜோதிட நிபுணர் அவர்கள் இறைவழிபாட்டில் கவனம் செலுத்தி, தான் எண்ணி வந்த காரியம் நிச்சயமாக நிறை வேறும் என்று பிரார்த்தனை செய்து கொண்டார். தென்பகுதி ஸ்ரீ கருவூரார் தேவர் சமாதியில் வில்வம், விபூதி கொடுத்து வழி பாடுகள் செய்தார். பிறகு மிகவும் அமைதியுடன் தியானத்தில் அமர்ந்து கொண்டார். இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பைத்தியம் போன்ற ஒருவர் பின் தொடர்ந்து வந்து கொண்டும், பலபடியாக உளறிக் கொண்டும், வந்ததால் செய்வதறியாது திகைத்துப் போனார். கவனம் சிதறிக் கொண்டு வந்ததால் அவரிடம் இருந்து தப்பிக்க வெகு வேகமாக ஆலயத்தை விட்டு வெளியே வந்து, ஆயிரங்கால் மண்டபத்தினுள் நுழைந்து தூண்களின் மறைவில் மறைந்து கொண்டார்.

யாரும் தொடரவில்லை என்பது தெரிந்ததும் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். தரையில் அமர்ந்து கொண்டு மெல்ல தியானத்தில் ஆழ்ந்து போனார். திரு.ஷண்முகம் அவர்கள் கண்விழித்த போது, தன்னையே வெறித்துப் பார்த்தபடி பற்களை
நறநறவென நெறித்தும் , நாக்கை கடித்தபடி காளியைப் போல் தலைவிரி கோலமாக, நரிபோல் ஊளையிட்டபடி, அதே பைத்தியம் அவர் மீது வெறியுடன் பாய்ந்தது. ஜோதிடர் அலறியபடியே ஓட, அவர் பின்னால் கத்தியபடியே பைத்தியமும் ஓடியது. ஆயிரம் கால் மண்டபத்தினுள் ஓட்டம் நடை பெற்றது. இப்போது பைத்தியம் போல் காணப்பட்ட வரிடம் அநேகம் மாறுதல்கள் காணப்பட்டது. “ஷண்முகம், நில், நில்! ஓடாதே, நான் தான் வந்திருக்கிறேன், நில் ” என்று இனிமை வாய்ந்த குரலில் கூறவும் ஜோதிடர் நின்று விட்டார். கனிவான குரலில் அவர் பேசவும் தைரியம் வரப் பெற்ற திரு.ஷண்முகம் அவர்கள் சித்தன் போல் காட்சி தரும் அவருக்கு வணக்கம் கூறினார். இருவரும் மண்டபத்தின் தரையில் அமர்ந்து கொண்டனர். அந்தப் பெரியவர் ஜோதிடரைப் பார்த்து, “என்னைத்தேடி நீ வந்தாய்; உன்னைத் தேடி நான் வந்திருக்கிறேன். என்னிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார்? என்ன கூறி அனுப்பி யிருக்கின்றார்? ” எனக் கேட்டார். ” தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்க முடியும் சுவாமி? சாபநிவர்த்தி, குருதோஷ நிவர்த்தி என இரண்டிற்கும் விடை தேவை. பலகாலம் கடந்து விமோசனத்திற்கு வழி பிறந்திருக்கிறது. தயை கூர்ந்து கூறியருளுங்கள் ” என்று வேண்டிக் கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button