முருகன் என்னும் ஞானம்.

252

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•07•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(394) மனிதனே புனிதன் —
முருகன் என்னும் ஞானம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°”
“குருபரன்” என்ற ஸ்தானத்தைப் பெற்று விட்ட முருகப்பெருமான் தன்னை நாடிவந்த ரிஷிமுனிவர் களுக்கு அநேக தெய்வீக உண்மைகளைப் போதித்து ஞான வள்ளலாக “குரு” நாதனாக விளக்குகிறார். “சிந்தனை” தனை அறிந்து கொள்ளச் செய்ததால் “திரு” என்ற ஆற்றலாக வெளிப்படுகிறார். தயாபரியாகிய “வாலை” சக்தியை இறைவனி டம் பெற்று தனது சக்தியை மென்மேலும் வளர்ச்சி பெறச் செய்ததால் “தரு” எனத் தெய்வங்களால் போற்றப் படுகிறார். “கர்த்தன்” என்ற சதாசிவனாரின் முழுமையான ஆற்றல் சக்தியைப் பெற்றதால் “கரு” என்னும் அற்புத ஆற்றலை அடைந்தார். சித்தர்களுக்கு “வெளி” எது என்பதைத் தெளிவாக உணர்த்தியதால் இவரே “சிவம்” எனக் கொண்டாடப்படுகின்றார். பிராண “வாயு” வை நெறிப் படுத்தும் யோக வித்தைகளைத் தெள்ளத்தெளிவாகப் புரியச் செய்ததால் யோகியர் இவரைத் “சக்தி ” எனத் துதித்தனர். “ரவி” எனப்படும் சூரியனை சந்திர கலையில் உதிக்கச் செய்ததால் “ருத்திரன்” எனப் பெயர் பெற்றார். சமுத்திரத்தின் “நீரில்” இருந்து உப்பு வடிவாய் வெளிப் பட்டதால், நீரமில சக்தியின் “மால்” எனப் போற்றப்பட்டார். “பிருதிவி” யில் ஜீவர்களைச் சிருஷ்ட்டிக்கும் செயல் புரிந்து “பிரம்மா”வானார். “பிரம்மம்” என்னும் நாதத்தில் நிலை பெற்று “நாதன்” என விளங்கினார். மூலமென்ற “உச்சி”யின் மேல் பார்வையை வைத்ததால், “எட்டிரண்டு” பெட்டியின் தெய்வீக ரகசியங்களின் திறவு கோலைப் பாதுகாக்கும் முதன்மையைப் பெற்றார். “பரம்” என்ற பராபரமே இறைவன் என்றும், அறிவின் கேந்திரம் என்றும் முருகப்பெருமான் கூறியதால் இவரையே “அறிவு” என்கின்றனர்.

“தன்நிலை”யை அறிந்து கொண்டதால் “பெரியோன்” என அழைக்கப் படுகிறார். இரு கண்களின் நடுவில் தோன்றும் “அக்கினி” எனப்படுவதே “கைலாயம்” எனப் பகர்ந்ததே ஞான முருகன் தான். “மனம்” என்ற நாடு தான் “வைகுந்தம்” என்றார். இதற்கெல்லாம் சிகரமாக “அரகரா” மந்திரச் சொல்லால் “தியானம்” செய்ய வழி வகுத்தார். முருகப் பெருமான் ஞானியர்கள் வணங்கும் ஞானவள்ளல் அல்லவா? அவரால் அங்கீகரிக்கப்பட்ட பதினெட்டு சித்தர்கள் யார்? என நாமும் அறிந்து கொள்ள வேண்டும். இதோ முருகப் பெருமானால் சித்தர்கள் எனப் போற்றப் படுபவர்களின் திருப் பெயர்ப் பட்டியல்! 1.பத்திரகிரி, 2.பட்டினத்தார், 3.அருணகிரி, 4.முத்தானந்தர், 5.கடுவெளியார்,
6.குதம்பையார், 7.பாம்பாட்டி, 8.அகப்பை, 9.அழுகண்ணி, 10.சிவவாக்கியர், 11.குகை நமசிவாயம், 12.சுப்பிரமணியர், 13.அகத்தியர், 14.சிவனார், 15.அப்பர், 16.சுந்தரர், 17.மாணிக்க வாசகர், 18.ஞான சம்பந்தர். இவர்கள் அனைவரும் சுத்தஞானத்தை அடைந்தவர்கள்.

முருகப் பெருமானைப் போற்றிய படி பயணக் குழு நாகபட்டினம் நோக்கிப் புறப்பட்டதும், கேள்விக் கணைகளை தவயோகினி அம்மாள் ஆரம்பித்து வைத்தார். “நாகராஜன் சுவாமி வேல் வாங்கும் போது முருகன் இருக்கும் அறை எங்கும் நீர் பெருக என்ன காரணம்? தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளது ” என்று தவயோகினி அம்மாள் கேட்டார்கள். அதற்கு நமது சுவாமி, “அம்மா இன்று ஆகாயத்தில் விசாகம், மகம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் தனித்துவமாக வெளிப்பட்டதைப் பார்த்தீர்கள் அல்லவா? அவ்விரண்டு நட்சத்திர சக்திகளின் எதிர் மோதினால் ஏற்படும், பிறிதொரு சக்தியாக அங்கே நீர் வெளிப்படுகின்றது. முருகப் பெருமான் அணிந்து இருக்கும் ஆபரணங்களிலோ அல்லது பீடத்திலோ மகம் நட்சத்திர ரத்தினக் கல்லொன்று இருக்க வேண்டும். மற்றொரு விசாகம் நட்சத்திர ரத்தினக் கல்லொன்று சம்ஹார வேலில் பதிக்கப் பட்டிருக்கும். முருகனின்
கரத்தில் வேலைத் தந்தவுடன், இருநட்சத்திர அமிலத் தன்மைகளால் நீர் வெளிப் படுகிறது. வெளிப்படும் நீரைச் சிறிதளவு உட்கொண்டால் அது ஒளஷத மாக மாறி அநேக நோய்களை நீக்கி விடும்” எனறார் நமது சுவாமி. இன்னும் அநேக கேள்விகளுக்குப் பொறுமையுடன் சுவாமி பதில் கூறிக் கொண்டு வந்தார். ராசீபுரத்துத் தங்கை தனது சகோதரி தவயோகினியைப் பார்த்து, “அக்கா, நோய் தீர்க்கும் மருந்து என்கின்றாரே, அங்கேயே கூறியிருந்தால் எனது நோய் நீங்க அந்த நீரைச் சாப்பிட்டு இருப்பேனே…” என ஆதங்கப்பட்டார். நமது சுவாமி, “அம்மா, வீண் சங்கடங்களுக்கு ஆளாகாதீர்கள். ஆதி கால மருத்துவ சித்தர்கள் வேல். வாங்கும் போது வெளிப்படும் நீரைச் சரியான பரிபக்குவத்தில் ஒளஷதங்களுடன் சேர்த்துத் தந்து வந்தார்கள். சித்த மருத்து வத்தில் கை கண்ட அனுபவ சாலிகள் இம் முறையைப் பயன் படுத்தி வெற்றி பெற்றார்கள். நோய் கடிந்தார்கள் தாயே. வீடு திரும்பும்போது மிகுந்த நம்பிக்கையோடு செல்லுங்கள்.
நோயற்ற வாழ்வு வாழுங்கள்” என்று நமது சுவாமி கூறினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button