ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
28•07•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(393) மனிதனே புனிதன் —-
தவயோகினியுடன் ஷேத்திர யாத்திரை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரசம்ஹார வேல் வாங்கும் திருவிழா துவங்கும் காலம், ஷேத்திர யாத்திரை துவங்கியது. சமையல் உபகரணங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் தேவைப்பட்ட அனைத்துப் பொருட்களும் அம்பாசிடர் காரில்
ஏற்றப்பட்டன. சிக்கல் சிங்கார வேலவன் சன்னதி செல்லும் வரையிலும் ஆன்மிக விஷயங் களைப் பேசிக்கொண்டே வந்தனர். தவயோகினி அம்மா, அவர்களின் ராசீபுரத்துத் தங்கை, சென்னையில் இருந்து வந்த மற்றொரு தங்கை, எனப் பிரயாணம் அமைதியாகச் சென்றது. சாலை ஓரம் உள்ள ஒரு பெரிய மரத்து நிழலில் உணவு சமைப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டார்கள். நம்பிக்கை மிகுந்த ஆவலுடன், சூரவதை செய்ய பராசக்தியின் வேல் வாங்கும் முருகனுக்கு வியர்வை வெள்ளம் பெருகி ஓடும் காட்சி காண ஜெபமுடன் சிக்கல் என்ற ஊருக்குள் உள்ள ஆலயம் சென்றார்கள். வேல் வாங்கும் அன்றைய தினம் விசாகம் நட்சத்திரம் வானில் பிரகசித்துக் கொண்டிருப்பதை சுவாமி பார்த்தார். இன்றைய தினத்தில் வானில் ஏதாவது மாற்றம் தெரிகின்றதா என்று கவனித்துக் கொண்டிருந்தார். வானில் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கும் அந்த நேரத்தில் திடீரென வானம் கருத்து மழைமேகம் திரண்டது. மகம் நட்சத்திரம் நல்ல ஜொலிப்புடன் திகழ்வதை உற்று நோக்கினார். ஆலயத்தின் வெளியிலோ கட்டுக்கடங்காக் கூட்டம் அலைமோதியது. வாய்ப்பான ஒர் இடத்தில் நமது சுவாமி அவர்கள் அமர்ந்து கொண்டு மனமொன்றியிருந்தார். தவயோகினி அம்மா அவர்களும் அவரது சகோதரிகளும் கூட ஜெபம் செய்தபடி அமர்ந்திருந் தனர்.
முருகப் பெருமான் சர்வலங்கார பூஜிதராகச் சப்பரத்தில் அமர்ந்து கொண்டு தனி அறையினுள் அநுக்கிரஹித்துக் கொண்டிருக்க, வேல் வேல் வெற்றி வேல் முழக்கம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திழைத்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தினுள் இருந்து குருக்கள் வேதமந்திரங்களை பதிக்க வேல் கொண்டுவர, வெற்றிவேலைச் சுமந்தபடி நவ நவவீரர்கள் போன்று பக்தர்கள் முருகப்பெருமானை வாழ்த்தியபடியே ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடியும், பாடியும் வந்தது எல்லோர் மனதினையும் ஈர்த்தது. அப்போதுதான் நமது சுவாமி அந்த அற்புதக் காட்சியைக் கண்டார். வானில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்த அந்த இருள் சூளும் பொழுதில், எல்லா நட்சத்திரங்களும் மேகப் பொதியினுள் மறைந்து கொண்டிருக்க, விசாகம் நட்சத்திரமும், மகம் நட்சத்திரமும் துல்லியமாகக் ஜொலித்தபடி காட்சி தந்தது. அந்த இடத்தில் மேகம் கூட்டம் இல்லாமல் கூட இருந்திருக் கலாம். ஆக அன்று அது வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக மனத்தில் பட்டது.
பக்தர்கள் வரிசை வரிசையாக வேல் வாங்கிய முருகப் பெருமாளை தரிசிக்க அந்த அறையினுள் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். வெளியே வருபவர்கள் அனைவரும் வியர்வை வழிய வந்து கொண்டி ருந்தனர். பெருவாரியான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சற்று கூட்டம் குறைந்த பிறகு நமது சுவாமியும் சென்றார். கூட்டம் குறைவானதால் முருகப் பெருமானை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. முகத்தில் இருந்து வியர்வை முத்து முத்தாய் உருவாகி வழிந்து கொண்டு இருந்தது. இன்னொன்றையும் சுவாமி கவனித்துப் பார்த்தார். மலர் மாலைகள், திருவாச்சி மற்றும் சுற்றுச் சுவர்கள் எங்கெங்கினும் நீர் வடிந்து சென்று கொண்டு இருந்தது. நமது சுவாமியின் உடலிலும் வியர்வை வெளிப்பட்டது. இந்த அதிசய நிகழ்வு விஞ்ஞான ரீதியாகவும் உண்மையே. இரு வேதியல் பொருட்கள் ஒன்று சேர்ந்து பிரிதொன்றை உருவாக்கும் அறிவியல் உண்மையை , அன்றே நமது முன்னோர்கள் இறையருளில் உணர்ந்து கொண்டது தான் சிக்கல் சிங்கார வேலவனின் வேல் வாங்கும் ரகசியம். அன்றைய தினத்தில் அநேக நோய்நொடிகளை நீக்கி சுகம் பெறச்செய்தனர். முருகனின் திருமேனியை அலங்கரித்த ஆபரணங்களில் உள்ளது “விசாகநட்சத்திர சக்தி” பெற்ற ரத்தினங்கள். முருகப் பெருமான் வாங்கும் வேலில் உள்ள “மகம் நட்சத்திர” ரத்தினக்
கற்களின் சக்தியும் ஒன்றாகச் சேர, அந்த அறைக்குள் உருவாகின்றது வினைதீர்க்கும் ஓர் ஔஷதம். என்னே மகானுபாவர்களின் மெஞ்ஞான அறிவின் ஆற்றலின் அளப்பறிய உண்மைகள்! சுவாமி அவர்கள் அந்த நீரை ஜெபம் செய்து உண்டு வினைமாய்ந்து உய்தார். இறைவனுக்கு நன்றி கூறினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி !வணக்கம்!
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.