ஆட்சேபனைப் புயல் கிளம்பியது.

169

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•07•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(391) மனிதனே புனிதன் —-
ஆட்சேபனைப் புயல் கிளம்பியது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள், வாழ்வினைக் காப்பது விவேகம் தான் என்று ஞானியர்கள் கூறினார்கள் என்ற மாத்திரத்தில் திருமதி ரங்கநாயகி அம்மாளிடம் இருந்தும், தவயோகினியின் மருமகள் ஒருவரிடமிருந்தும் கடும் ஆட்சேபனை கிளம்பி விட்டது. “அது எப்படி? எல்லாமே கடவுள் தான் என்று கூறினீர்கள். இப்போது விவேகம் தான் வாழ்வை வழி நடத்துகிறது என்றால் கொஞ்சமும் பொருந்தி வரவில்லையே” என்றார்கள். அதற்குள் திருமதி கமலம்மாள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “எதற்கும் குருதேவரிடம் தியானத்தில் கேட்டுப் பார்க்க லாம். அவர் இதற்கு என்ன பதில் கூறினாலும் ஏற்றுக் கொள்வோம் “எனக்கூறி விட்டு கேள்வி கேட்ட அந்த வீட்டு மருமகளின் முகத்தையே பார்த்தார். திருமதி ரங்கநாயகி அம்மாள் முகத்தில் பெருமிதம் வழிந்தது. அவர்கள் அனைவரும் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார்கள். ஆனால் பார்ப்பதற்கு எதனையோ யோசிப்பதாகவும் தோன்றியது. கடைசியில் கண் விழித்த பிறகு தங்களுக்கு ஏதேதோ காட்சிகள் மட்டுமே தெரிகின்றது என்றும், விடையேதும் கிடைக்க வில்லை என்றும், அதற்குமேல் கேட்டால் உங்களின் தத்துப்புத்திரனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்கள் என முடித்தார்கள்.

நமது சுவாமி அவர்களுக்கு அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் காரண, காரியம் புரியவந்தது. சுவாமி அவர்கள் தனது பதிலாக முதல் கேள்வியைத் தொடுத்தார். “உலகில் இறைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளில், அறிவுடன் கூடிய மனித வர்க்கத்தில் உங்களைப் படைத்ததான் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு, “சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்வதற்கே” எனப்பதில் வந்தது. சுவாமி உடனே, “முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்து வாழ வேண்டும் என்பதே பராபரமாகிய இறைவனது சித்தம்” என்றார். இதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இனி மற்றொரு கேள்வி என்றவர், “கடமை என்று எதனை நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே திருமதி ரங்கநாயகியம்மாள், “கர்மாவை ஒழுங்காகச் செய்வதுதான் கடமை வாழ்வு ” என்றார்.

நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள், “ஆமாம், உண்மை தான். கர்மாவைச் செய்கிறேன் என்று பேச்சளவில் கூறுபவர்களே! உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கு மன்னிக்கும் குணம் இருக்கிறதா? கர்மாவில் மிக முக்கியமானது மற்றவர் குற்றத்தைப் பொறுத்து மன்னிப்பது தான் தலையாய கடமை. மன்னிக்கும் உள்ளம் பெற்றவர்களே குணக்குன்றுகள். அவர்களே தெய்வீகப் பிறவி நிலை பெறும் பண்பாளர்கள். கடமை வழி நிற்பவர்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்” என எடுத்துரைத் தார். அப்போது சபைக்குள் நுழைந்த முக்கியமான நபர், திருமதி வேணியம்மாள் காமாட்சி சுந்தரம் அவர்களே. சேலம் குமாரபாளையம் தொழில் அதிபரும், பவானி ஞானச் சங்கத்தைத் தோற்று வித்த ஞானயேகி தவத்திரு SSM.சுப்பிரமணியம் அவர்களின் மூன்றாவது மகளாவார். ஜெப தவம் கொண்டவர். சபைக்குள் வந்த அவர் நமது சுவாமிக்கு நமஸ்காரம் சொன்னார். பிறகு அவர் சுவாமியிடம் உரையாடினார். “எனது தந்தையிடம் உங்ளைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன். உங்களின் தவம் மற்றும் தியானப் பாடங்கள் பற்றி அப்பா அக்கறையுடன் கேட்டறிந்து கொண்டுள்ளார். உங்களைச் சந்திக்க விரும்புகின்றார்” என்றார். சற்குருநாதர் நமது சுவாமியிடம் அன்று கூறியபடியே நிகழ்வு ஏற்பட்டது. நமது சுவாமி வணக்கம் கூறிவிட்டு,
” அப்படியே ஆகட்டும் அம்மா ” என விடை பகர்ந்தார்.

சுவாமி வீட்டிற்குத் திரும்பிய பிறகு அன்றைய இரவு உறக்கம் வரும் போல் தோன்ற வில்லை. காரணம் இதுவரையிலும் கேட்டு அறிந்திடாத வகையில்
பற்பல ஓசைகள் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது. சிலர் இனம் புரியாத பாக்ஷை யில் பேசிக்கொள்வதும் கேட்டது. அது வானூர்தியில்
இருந்து செயல்படும் ஏதாவது ஒரு இயந்திர சார்பாகவும் இருக்கலாம் என்று எண்ணிய
வுடன், இன்னும் பல வித்தியாசமுடைய சப்தங்கள் கேட்க ஆரம்பித்தன. இது மனதின் பிரம்மையாகக்கூட இருக்கலாம் என சுவாமி எண்ணினார். நீல வண்ணமுடைய ஒளிவெள்ளத் தினுள் இருந்து மிகுந்த தேஜஸ் உடைய ஒருவர் கண்களை
விழித்தபடியே தியானத்தில லயமாகி இருப்பது தெரிந்தது. இயற்கையின் பருவமாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட பக்குவத்தில் அவரது சரீரம் திகழ்ந்தது. தனது மனதினுள் அவர் எண்ணும் எண்ணத்தை நமது சுவாமிக்குத் தெரியப் படுத்திக் கொண்டிருந்தார். அவர் கூறிய ஞானக்கருத்தை, ஆன்மிக பயிற்சியினைத் தெரிந்து கொள்வோம். “மிகவும் வலிமை வாய்ந்தது என்று கிலாசிக்கப் படுமளவிற்குச் சக்திவாய்ந்த ஒன்று இவ்வுலகில் உண்டு. அதனின் செயல் மனிதனைப் தனது வசமாக்கும்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button