எதிரும், புதிருமா வாழ்வு?

220

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

23•07•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(388) மனிதனே புனிதன் —
எதிரும், புதிருமா வாழ்வு?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°கிராமத்தில் ஓர் உறவினர் வீட்டில் அவர்கள் மருமகன் எதிர்மறையான சிந்தனை கொண்டு, ஒருவருக்கு ஏதாவது நல்லது நடந்தால், அது நடக்கக்கூடாது என எண்ணுவார். இது ஒருவகையில் பொறாமை குணம் அல்லது அங்கலாய்ப்பு என நடைமுறை வழக்கத்தில் சொல்வார்கள். இவர் தன்னுடைய வழிபாடு சக்தியைப் பிறரின் வாழ்வு கெடுவதற்கு, தன்னுடைய வலுவான எண்ணத்தை எடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். தனது வாழ்க்கையில் மட்டுமே நல்லதே நடக்கவேண்டும் என எண்ணம் இருந்தது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் தனது சொந்த மைத்துனர் திருமணம் நடந்து விட்டால், தனது மதிப்பு மாமனார் வீட்டில் குறைந்து போய் விடுமே என எண்ணினார். தனது எதிர் மறையான எண்ண ஜெபத்தால் சொந்த மைத்துனர் திருமண காரியம் நடைபெற விடாமல் தடுத்து அதில் வெற்றியும் பெற்றார். தனது கெடுதல் நினைப்பெல்லாம் நடை பெற்றதால், கர்வமும், அகங்காரமும் அதிகமாக, யாரையுமே மதிக்காமல் நடந்து கொண்டார். இதற்கெல்லாம் ஓரு படி மேலே சென்று, தனது ஒரே மைத்துனர் மட்டும் இல்லாதிருந்தால் எல்லா சொத்துக்களுக்கும் தான் ஒருவனே ஏகபோக வாரிசாக வந்திருப்பேனே என சிந்தித்துச் சிந்தித்து, அனுதினமும் தனது மனதை நோகச் செய்து, துக்கமும், விசனமும் கொண்டார். மைத்துனரை மாப்பிள்ளை பார்க்கப் பெண் வீட்டினர் வந்த போது, அவர்கள் முன்னால் அழுது ஒப்பாரி வைத்து விட்டுத் தனது அறைக்குள் சென்று கதவைத் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். உணவு கூட உண்ணாமல் அறைக்குள் எதிர்மறை ஜெபம் செய்த படியே இருந்தார். கண்டித்த மாமனார் மாமியாரி டம் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். பிறகு அன்று துவங்கி மாமனார் மாமியார் மற்றும் மைத்துனர் அறையின் ஜன்னலில் மெதுவாக ஆளைக் கொல்லும் பூச்சி மருந்து வைக்கப்பட்டது. மருந்து வாசனை அறைக்குள் இரவு நேரத்தில் வரத் துவங்கி விட்டது.

மருமகன் பூச்சிக் கொல்லி மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மருந்து நெடியினால் அவர்கள் தூக்கம் இன்றித் தவித்து வந்தனர். பிறகு அவர்கள் மருமகனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் தப்பிப் பிழைத்துக் போயினர். பிறகு எனக்கு மனச் சாந்தி வேண்டும், அதனால் உல்லாசப் பிரயாணம் போய்வர வேண்டும் என மாமனார் குடும்பத்தினரை மருமகன் அழைத்தார். உடல் நலம் குன்றிய மைத்துனருடன், மாமா மாமியுடன் கட்டாயப் பிரயாணம் நடந்தது. திரும்பி வரும்போது மைத்துனர் பிணமாகத் திரும்பி வந்தார். ஊரே அதிர்ந்து போயிற்று. அவர்களோ அவன் அதிகமாக உணவு உண்டதால் அதுவே ஜீரணிக்காமல் விஷமா கிப் போனது; அதனால் மரணம் சம்பவித்து விட்டது என்றும், சமுத்திரத்தில் குளிக்கும் போது கடல்நாகம் தீட்டி விட்டது எனவும், திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டது என்றும், மருத்துவ விடுதிக்கு மருந்து வாங்கிப் போவதற்குள் உயிர் பிரிந்து விட்டது என்றும் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலைக் கூறினார் கள். மலை சாய்ந்து விட்டது என ஊரார் பேசிக் கொண்டார்கள். எது, எப்படியோ? அந்த வாலிபன் விபரீத மர்ம மரணம் தாய், தந்தையின் கண் எதிரில் நடை பெற்றது தான் விந்தை. மருமகனின் எதிர்மறை எண்ணம் “விநாசகாலே விபரீத புத்தி ” ஆயிற்று சகலவிதமான செல்வமும் அவர்கள் கண் முன்னால் அழிந்தது. இறைவன் தர வேண்டிய கூலியைத் தர வேண்டிய நேரத்தில் கொடுத்து விட்டான் என ஊரின் பெரியவர் கள் கூறினர்.

நேர்மறையான எண்ணம் உள்ள மக்களால் தான் வீட்டிற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் அநேக நன்மைகள் பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு. நாம் பழகி வரும் மக்கள் இடத்தில், எண்ணத்தின் இருவித துருவங்க ளில் விபரீத மாற்றங்கள் நமக்குத் தெரிய வரும் போது அதிர்ச்சி அடைந்து விடுவோம். நாம் அவர்கள் மீது வைத்திருக் கும் மதிப்பும், மரியாதையும் கூட தவிடுபொடி யாகிவிடும். வெளியே ஓடியோடி பிறருக்கு உழைப்பவர்கள், தர்ம சேவைகள் செய்பவர்கள் என்று இருப்பவர் களில் சிலர் எண்ணத்தில் எதிர் மறை குணங்கள் இருக்கும். வெளிப்படையாகப் பார்க்கும் போது உண்மையாக உழைப்பவ ராகவே தென்படுவர். ஆனால் இவர்கள் உள்ளத்தில் தற்பெருமையோ, பிறர் தன்னை மதித்து நடக்கவேண்டும் என்ற எண்ணமோ வந்து விட்டால், வெளியில் நேர்மறைச் செய்கை போல் தோன்றினாலும், உள்ளில் சுயநலச் சித்தனைதான் வளரும். எண்ணத்தின் நன்மை, தீமை துருவங்கள் தனக்கு ஒத்த எண்ணங்களை ஈர்க்கும் போது, தனது ஜெப, தவ சக்தியை எதிர்மறையான எண்ணமாக, சுயநலமாக மாற்றிக் கொள்வர். இதனால் தீமைசக்தி உடையவ ராக மாறி விடுவார்கள். வெளியே நல்லவராகவும், உள்ளே தீமையின் கைப்பாவை யாக மாறிப் பச்சோந்திபோல் இருந்து வருவர். தியான சக்தி யைத் தவறாக உபயோகித்து வரும் இவர்களால் பிறருக்கு…?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button