ஓம் ஸ்ரீ ஈஸ்வர மகா ஜோதியே சரணம்!
19•07•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(384) மனிதனே புனிதன் —
படைப்பும் அதன் பயனும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரியக்குடும்பத்தில் நிறைவான படைப்பாக நமது பூமி விளங்கி வருகின்றது. காந்தபுல ஈர்ப்பு சக்தி உடைய இப்புவியானது, மற்ற கோள்களின் இருந்து தனக்குத் தேவையான சக்திகளைப் பெறுகின்ற ஆற்றல் மற்றும் உயிர்ப்புத் தன்மை உடையதாக விளங்குகின்றது. இதனைப் போன்றே இப்பூமியின் ஜீவன்களில் ஆறாம் அறிவில் பகுத்தறியும் ஆற்றல் உடைய மானுடத்தில், அஞ்சா நெஞ்சம் கொண்ட தைரியசாலிகள், அறிவின் திறனுடைய சிந்தனை யாளர்கள், எதனையும் உருவாக் கும் படைப்புத்திறன் மிக்கவர்கள் மற்றும் இதனைப் போன்ற அநேக ஆற்றல் சக்தியைக் கொண்டவர்கள் அனைவரும் இறைவனின் அருளாகிய கொடையைப் பெற்றவர்களே. இவர்கள் தங்கள் சக்தியைப் புவியின் ஈர்ப்பு சக்தியுடன் தொடர்பு படுத்திக் கொண்டு, நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி வாழ்ந்து வருபவர் களாவர். நேர்மறையான எண்ணம் உடைய மனிதர்களே, பூவுலகின் படைப்பாளிகள் என்பது ஞானியர் களின் கருத்தாகும். இவர்களே எதனையும் நிர்வகிக்கும் ஆற்றல் கொண்டவர்களாம். அருளும், நல்லறிவும், பண்புகளும் உடைய இவர்களால் உலக மக்களுக்குப் பல நன்மைகளும், அநேக தொழில் முன்னேற்றங் களும் ஏற்படும். எதிர்மறையான எண்ணம் உடையவர்கள், துக்கம், கவலை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, பிறருக்குத் தொல்லைகளையும், சோதனை களையும் தந்து அதனால் அற்ப சந்தோஷத்தை அடைந்து, உலகில் இன்னபிற இன்பங்களையும் அடைந்து வாழவேண்டும் என்ற அதி ஆசை கொள்வார்கள். மற்றும் சுயநல நோக்குடன் அனுபவித்துப் பயன் அடைபவர்களாக, மற்றவர்களை மதிக்காத குணத்துடன் அதிகாரம் செய்து கொண்டும் இருப்பார்கள். இவர்களால் உலகினுக்குத் துன்பங்கள் அதிகமாகி, முன்னேற்றம் சாதனைகள் எதுவுமின்றி, சோதனை மிகுந்த காலமாக மாறிவிடும். பொருளாதாரம் வளர்ச்சிகளின்றி வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பது அறிஞர் பெரு மக்களின் கணிப்பு.
நேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் உள்ளம் எப்போதும், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ இறைசக்தியின் தொடர்பில் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால் அவர்களின் மனதில் எப்போதும் ஊக்கமும், அதற்குண்டான ஆற்றலும் பெருகிக் கொண்டும் இருக்கும். அத்தகைய ஆற்றல் உள்ளிருந்து செயற்கரிய சாதனைகளைச் செய்வித்து, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றி விடும். நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவரின் எத்தகைய குணங்களாயினும், அவைகளின் உணர்ச்சிகள் அதிகமாகப் பெருக்கெடுக்கும் போது, அவர்கள் மனதினை அடக்கிக் கொள்வார்கள். அப்போது அவர்களின் சித்தத்தில் தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும். அதனால் நினைத்த காரியத்தை வெற்றி யாக நிறைவேற்றுவதால் சித்தம் அடங்கி விடும் என்பது ஞானியர் கள் கண்ட அனுபவ உண்மை யாகும். அனைத்து மனிதர்களுக் கும் அதிகமான உணர்ச்சிகளைப் பிரவாகமாக வெளிப்படுத்தப் படும் காலங்களில் எல்லாம் சித்தசக்தி தன்னிச்சையாகவே செயல்படத் துவங்கி விடுகிறது. மெய்யுணர்வாளர்களாகிய மகா ஞானியர்கள் எப்போதும், எந்த நேரத்திலும் இந்த மகா சக்தியை தனது வாழ்க்கையின் பயன் பாட்டில் நிலைநிறுத்திக் கொண்டு உள்ளனர். ஞானியர்கள் தங்கள் உடலில் உள்ள நுட்பமான பாகங்களைத் தமது மனோ சக்தியைக் கொண்டே இயக்கி உலகில் உள்ள உயிர்ப் பொருட்களையும், ஜடப் பொருட்களையும் ஈர்த்துத் தங்களுக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். மனதின் அற்புதமான இந்த சக்தியை இறைவன் தந்த
செல்வமாக மனிதன் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.