துருவ சக்திகளின் மாறுபாடு!

212

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•07•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(383) மனிதனே புனிதன் —
துருவ சக்திகளின் மாறுபாடு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“நமது தியானத்தில் காண்கின்ற காட்சிகள் அனைத்திலும், நமது எண்ணத்தின் நன்மை, தீமைகள் ஆகிய இரண்டிலும், ஈர்க்கின்ற துருவம், எதிர்க்கின்ற துருவம் என இரண்டு சக்திகள் செயல்படுகிறது. இதனை நமது மெய ஞானியர்கள் வெளிப்படுத்தி னார்கள். எண்ணம் செயற்படும் க்ஷண நேரத்தில் அது மின்காந்த சக்தியாக மாற்றம் பெறுகின்றது என்றனர். மெளனத்தில் மின்காந்தமாக இருக்கும் எண்ணம் , செயல்படும் பொழுது மின்சாரமாகவும் மாறுகின்றது. மின்காந்தத்தில் சக்தியின் சேமிப்பு அபரிமிதமாக இருக்கும். எண்ணம் செயற்படும் பொழுது அது மின்சாரமாக மாறி ஆற்றல்கள் செலவழித்து கொண்டே உள்ளது. எண்ணமா னது நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்று சொல்லப் படுவதில், நல்ல – கெட்ட என்ற எண்ணத்தின் இரு துருவங்களும்
மற்றவர்களின் எண்ணங்களை ஈர்க்கும் பொழுது, அதில் உள்ள நன்மை, தீமைகளை நமது எண்ணத்தின் இரண்டு துருவங் களும் பிரித்துத் தன்னில் தனக்குரியதைச் சேர்த்துக் கொண்டு விடும். எண்ணம் செயற்படும் பொழுது, மின்காந்தமாக மாற்றம் பெற்று விட்டால், நேர்மறை துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொள்ளும். எதிர் மறை துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும். மனோ சக்தியைப் பெறுவதற்கு ஞானியர்கள் ஏன்? முயற்சிகள் செய்து, அதில் வெற்றி அடைந்த காரணம் இப்போது உங்களுக்கு இப்போது புரியத் துவங்கி யிருக்கும் என நம்புகிறேன். நல்ல எண்ணங்களை மட்டுமே அடைந்து, அதனை வளர்த்து, வாழ்ந்த ஞானியர்கள் அவர்கள் எண்ணியதை எண்ணியபடி பெற்று சாதனைகள் புரிந்ததும் இப்படித்தான். தியானக் காட்சிகள் பற்றிக் கூறுவது என்றால் அது காண்பவரின் அனுபவம். அதனை அவர்கள் தனது சக்தியின் ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கு உபயோகப்படுத்தினால், எண்ணத்தின் நேர்மறைகள் நேர்மறைகளுடன் சேர்ந்து நன்மை துருவம் வளர்ந்து வளர்ச்சி பெறும். இதனால் மனோசக்தியானது ஆகாய கேந்திரத்தில் நீண்ட நெடுந்தூரம் பரவிக் படர்ந்து செல்வதால், நாம் நினைப்பதை எளிதில் அடைந்து விட முடியும். இதனை உறுதி மிக்க ஒருமையில் செயல்பாடு என்றும் கூறலாம். இதனை நீங்கள் தியானத்தில் கற்பனை மிகுந்து ஒரு நிகழ்ச்சியை உருவாவது போல் பாவனையை மனதினுள் ஏற்படுத்திக் கொண்டு அதனை மிகவும் விரும்பி அனுபவிக்கின்றீர்கள். இது நகல். இதில் மனோசக்தியின் ஆற்றல் வளர்ச்சி பெறுவது தாமதப்படும். இப்படி நான் கூறிவிட்டதால் நீங்கள் அனைவரும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன். நீங்கள் ஒரு காட்சியின் லயத்தில் வீற்றிருக்கும் போது, ஏதாவது ஒரு தெய்வ மந்திர ஜெபத்தினை சுவாசத்தில் செலுத்தி தியானப் பயிற்சியைத் துவங்கித் தொடர்ந்து தினமும் கடைப்பிடித்து வந்தால், மற்றவர்களின் நல்ல எண்ணங்க ளைக் காற்றலையின் ஆகாய சக்தியில் இருந்து பெறமுடியும். இது அனுபவப் பூர்வமான உண்மையாகும்,நன்றி. ” என்று நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் எடுத்துரைத்தார்.

“அப்படியானால் தியானத்தில் எங்களுக்குத் தெய்வங்கள் காட்சி கொடுப்பதெல்லாம் உண்மை இல்லை என்று கூறுகின்றீர் களா? “என திருமதி ரங்கநாயகி அம்மாள் அவர்கள் வினாவினார். அதற்கு நமது சுவாமி பதில்கூறத் தயங்கினார். காரணம் திருமதி ரங்கநாயகி அம்மா அவர்கள், “நான் தியானம் செய்யும் நேரத்தில் தெய்வீக சக்தி பெற்றவர்கள் தானே விரும்பிப் தேடி வந்து தனக்குக் காட்சிகள் மூலம் பாடங்கள் தந்து வருகிறார்கள். ஆனால் அதன் விளக்கம் மட்டும் எனக்குப் புரிய வில்லை. அதனைப் புரிந்து கொள்ளும்படி உங்கள் தியான சக்தியைப் பயன்படுத்துங்கள்” எனக் கூறியதும் சுவாமி மெளனமாக இருந்து விட்டார். தியானப் பயிற்சி பெறுபவர் முதலில் அது பற்றிய சரியான விளக்கம் பெற்று, ஆன்மசக்தி பற்றி அறிந்து கொண்டால் இறை நிலைத் தன்மையை, அவன் அருளை அடைந்து விடமுடியும். அப்படி இல்லாவிடில் தெய்வீக குணங்கள் நம்மில் வளராமல் எண்ணத்தின் எதிர்மறை சக்தி வளர்ந்து நம்மை துயரத்தில் மூழ்க வைத்து விடும். எதனையும் அறிந்து கொள்ளும், புரிந்து கொண்டு விடும் ஞாபக சக்தி குறைந்து விடும். தக்க குரு இன்றி வெறும் கூட்டு தியானம் வீண் பொழுது போக்கும் இடமாக வம்பர் சபையாக மாறிப் போகும் என்பதில் ஐயப்பாடு இல்லை. அவர் கேள்வி கேட்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. தன்னிடத்திலும் அபூர்வ சக்தி இருப்பதால்தான் சக்தி பெற்ற ஆத்மாக்கள் தன்னை விரும்பித் தேடி வருகின்றனர் என்ற கருத்து அவரிடம் வெளிப்பட்டு விட்டது. தியானம் செய்பவர் இறை சக்தியை மறந்து, தன்னைப் பெருமையாக எண்ணும் சிறுமை குணம் வளர்ந்து விடாமல் கவனித்து வர வேண்டும். இது முக்கியமான விஷயமாகும். இறைவன் அருள் ஒன்றையே பிரதானமாகக் கொண்டால் மட்டுமே தியானம் சாத்தியமான ஒன்றாகும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button