துன்பத்தை சமமாகக் கருது; சுகப்படுவாய்!

237

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•07•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(382) மனிதனே புனிதன் —
துன்பத்தை சமமாகக் கருது; சுகப்படுவாய்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஞானயோகினி அம்மா அவர்கள் தமது இல்லத்தில் சிறப்புக் கூட்டு தியானத்தைத் துவங்கி நடத்தி வரலானார். மன ஆறுதல் தேடுவோரில் அவரது உறவினர் அநேகம் பேர் அந்தக் கூட்டு தியானத்திற்கும் வரத் துவங்கி இருந்தனர். நமது சுவாமியும் கலந்து கொள்ளச் சென்று வருவார். கூடுமானவரை அது மாலை நான்கு மணிக்குத் துவங்கி பாடல்கள் பாடி விட்டு தியானம் செய்வார்கள். நிசப்தமாக இருக்கும். தியானம் நிறைவு அடைந்த பிறகு ஏதாவது காட்சிகள் கிடைத்ததா? என்று கேட்பார்கள். பலவிதமான காட்சிகள் பற்றியும் அதனுடைய விளக்கங்களும் கூறுவார்கள். இப்போது சுவாமி அவர்கள் ஞானப் பாடங்கள் பற்றிப் போனதை செய்பவராகவும் உருவாகி இருந்தார். எல்லோரும் பிரார்த்தனை செய்து, தியானம் செய்து, காட்சிகள் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டும், அநேகம் கற்பனை விளக்கங்களைக் கேட்டுக் கொண்டும் இருந்தனர். இந்த சமயத்தில் தான், தவத்திரு ஞானகுரு ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள் பவானி தியானத் தலைமையகத்தை விட்டு விலகி இருந்த நேரம். தியான அன்பர்களும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து சொற்போர், வாதப்போர் என அந்தந்த ஊர்களில், ஆங்காங்கே நடத்திக் கொண்டிருந்தனர்.

தொழில் அதிபரும், ஆன்மிகச் செம்மலுமான தவத்திரு S. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் பக்கம் ஒரு சாராரும், ஞானகுரு தவத்திரு ஸ்ரீ வேணுகோபால சுவாமி பக்கம் மறுறொரு சாராரும் பிரித்துக் கொண்டு, மண்டைகள் உடையும் சண்டை களை மட்டும் போட்டுக் கொள்ளாமல் தத்தமது கட்சிகளின் உயர்வு பற்றியும், மற்றவர் பிரிவின் தகுதியற்ற தன்மை பற்றியுமே பேசிப் பேசி, தியானம் செய்து வருவதை விடுத்து கோபம் கொள்பவர் களாக மாறிப் போயிருந்தனர். இந்த நிகழ்ச்சி நமது ஞானயோகி திரு.பாஸ்கரன் தலைமையில் சோமனூரில் நடந்தது தான் மிக அதிசயத்திலும் அதிசயமாக விளங்கி, வாதப்பிரதி வாதங்கள் சண்டை சச்சரவின்றி தினமும் நடந்து கொண்டே இருந்தது. இதனை நமது சுவாமி நேரில் காணும் பாக்கியம் பெற்று அதிர்ந்து போனார். அதனைப் பற்றியும் அறிந்து கொள்ளத் துவங்கும் முன்பு, பொள்ளாச்சி தவயோகினி அம்மா அவர்கள் வீட்டில் நமது சுவாமி தியானக் காட்சிகளுக்கு விளக்கம் கூறியதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நமது சுவாமி அவர்களைப் பார்த்துத் தியானக் கூட்டத்திற்கு வந்திருந்த திருமதி ரங்கநாயகி அம்மாள் அவர்கள் பேசினார். “ஏனுங்க நாகராஜன் சுவாமி, காட்சிகள் தெரிவதைப் பற்றியும், அதன் உண்மைப் பலன்கள் பற்றியும் நீங்கள் எனக்கு விளக்கம் கூறுங்கள் ” என்றார்.

நமது சுவாமி அவர்களைப் பார்த்து, “மாலை வணக்கம், தியான அன்பர்களே! மனதை ஒன்று குவிக்கக் கற்றுக் கொண்டு வரும் உங்களைக் காண மகிழ்வெய்துகிறேன். மனித மனதுக்குள் அநேக எண்ணங்கள், பரவியும், சிதறி யும் கிடக்கின்றன. இந்த எண்ணங்களில் ஏதாவது ஒன்றினைத் தேர்வு செய்து கொண்டு அதில் மனதைக் குவியச் செய்திடல் வேண்டும். குறிப்பிடத்தக்க எண்ணத்தின் மீது தொடர்ந்து மனதினைக் குவியச் செய்து வருவோமே யானால், மனதினை ஒன்றுபடுத் தினால் அந்த எண்ணமானது உடனே நிறைவேறத் துவங்கி நன்மையாக நடை பெறுவதைக் காணலாம். இதனை நேர்மறை யான எண்ணத்தின் திடமான எண்ணக் குவிப்பு எனவும் அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளனர். இது மனித வாழ்வில் அன்றாடம் காரிய வெற்றிக்கு நேர்மறையாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நன்மையைத் தரும் வெற்றி ரகசியம் உள்ளது. இதனைத்தான் தியானம் செய்யும் போது, தனது வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது ஒரு நிகழ்ச்சியை, நமது விரும்பத்தின்படி நிகழ்ந்து கொண்டிருப்பதாக, மனமானது தானே உருவாக்கிக் கொண்டு தன்னில் குவியவைத்து தற்காலிக ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதைத்தான் காட்சிகளாகக் கண்டு மகிழ்ந்து, பிறருக்கும் தெரிவிக்கின்றீர்கள். இதனை வெளிப்படுத்துவதால் உங்களின் ஆற்றல் சக்தி குறைவதற்கு வாய்ப்பு துருவங்களில் ஏற்பட்டு விடலாம். மன ஒருமைப்பாடு கொண்டவர்கள் இடத்தினில் மனோசக்தியின் ஆற்றல் அபரிமிதமாக உருவாகி வளர்ந்து வரும். இதனைப் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள், அதன் முதிர்வில் செயற்கரிய சாதனை செய்து உலக நன்மையில் பங்கு கொள்கிறார்கள். ”

“அன்புள்ளம் கொண்டவர்களே, சாதனைகள் புரிய வந்தவர்களே, இன்னும் மன ஒருமைப்பாட்டில் உருவாகும் உண்மை என்ன வென்றால், உலகத்தில் வட, தென் துருவங்களின் உயர் மின் நுண் காந்த சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதைப் போன்றே, நமது எண்ணங்களிலும் ஈர்க்கின்ற, எதிர்க்கின்ற சக்திகள் உண்டு. எண்ணத்தின் துருவங்களில் உள்ள சக்திகள், உலகத்தின் துருவங்களில் உள்ள சக்திகளை விட அவைகள் வித்தியாசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவை என்னவென்றால்….”

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button