விற்ற பூமியில் அமானுஷ்யம்.

167

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•07•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(380) மனிதனே புனிதன் —
விற்ற பூமியில் அமானுஷ்யம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நம்முடைய மனதை நாம் இயக்க வேண்டும். மனதினை நாம் இயக்குவதால் சிந்திக்கும் ஆற்றல் சக்தி வெளிப்படும். சிந்தனா சக்தியைக் கொண்டே நமக்கு எண்ணங்கள் ஏற்படும். இதனைத்தான் ஞானியர்கள் சங்கல்பம் என்று கூறினர். நேர் மறையான எண்ணத்தின் சங்கற்பங்கள் மனிதனை நல்ல பாதையில் கொண்டு செல்கிறது. ஆனால் சிலருக்கு மனம் தாமாகவே எண்ணங்களில் அகப்பட்டு கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு எதிர்மறை வினைகளை ஏற்படுத்திக் கொள்வதை விகற்பம் எனக் கூறுவர். மனத்தை வசப்படுத்திக் கொண்டு நேர் மறையான எண்ணத்தின் சங்கற்பத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் களை அறிவாளிகள் அல்லது ஞானியர் என்று குறிப்பிடுவர். மனதினை வயப்படுத்த இயலாத வர்கள் விகற்ப எண்ணங்களுட னும், குழப்பங்களுடனும் வாழ்ந்து, அமானுஷ்யத் சக்திகளுக்குத் தங்கள் உடலில் இடம் தந்து விடுவார்கள். அவைகள் உடலுக்குள் இருந்து கொண்டு, வெளியில் இருந்து மற்றவர்கள் அனுப்பும், எதிர் மறையான வலுவான எண்ணங் களை ஈர்த்து, உள்ளே கிரகித்து வைத்துக் கொண்டு மனதினை அலைகழிக்கச் செய்து விடும். அதனால்தான் நமது முன்னோர் களாகிய ஞானியர்களும், சித்தர் பெருமக்களும், உடலையும், மனதையும் வசமாக்க மனித சமுதாயத் திற்கு நல்ல வழி வகைகளைக் காட்டித்தந்தனர். மனதை வளப்படுத்தி நேர் மறையான எண்ணங்களைச் செயலாக்கவே ஜெபமந்திர ஒலிகள், இறைவனது நாம ஜெபங்கள் ஆகியவற்றைச் சொல்லி வைத்த்தனர். தியானம் செய்வதற்குக் கற்றுக் கொடுத்த னர். உடலைப் பேணிக் காக்க யோகாசன அப்பியாசங்களைப் போதித்து வந்தனர்.

விகற்பமான மனதின் எதிர் மறையான எண்ணங்களை வலுவிழக்கச் செய்து, சங்கற்பமான வலுவான மனதைல அடைய இறைவனது நாம ஜெபம், ஓர் நல்ல வரப்பிரசாத மான உபாயமாகும். இதைத்தான் நமது சுவாமி அவர்களின் குடும்பம் செய்து வந்தது. பூமியைத் திருப்பிக் கேட்டவர் நோக்கம் நமது சுவாமியின் தந்தைக்கு உடனடியாகத் தெரியவராததால் அரைகுறை மனத்துடன், “ஆகட்டும் பார்க்கலாம்” என்று பொத்தாம் பொதுவில் சொல்லி வைத்தார். இந்த நிகழ்வு பல முறைகள் நடை பெற்றதால் அது சாரமற்றுப் போனதுடன், வேறு வடிவில் அரங்கேறத் துவங்கியது விவசாய பூமியில் திருட்டுப் போவது தொடர்ந்து நடை பெற்று வந்தது. விவசாயப் பயிர்களை முகம் தெரியாத யாரோ அறுவடை செய்து கொண்டு போயினர். பருத்தி நிலவின் ஒளியில் வெடித்து மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.ஆனால் பனிப்பதத்தில் இரவின் நிலவொளியில் பாடுபட்ட பலன்கள், அவரின் உழைப்பு கொள்ளை போயிருக் கும். தனது சொந்த பூமியில் விவசாயப் பலன்கள் கைக்கு வந்து சேராததால், விவசாய நிலத்தை விற்று விடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிப் போனார். அந்த சமயத்தில் அருகே உள்ள தோட்டத்தில் ஒரு விதவைப் பாட்டி வசித்து வந்தார். குடும்பத்தில் அவருக்கு ஆதரவு இல்லாததால் , கணவர் தனது பெயரில் எழுதிக் கொடுத்த விவசாய நிலத்தில் தனியே வசித்து வந்தார். அங்கு தோட்ட வேலைக ளைக் கவனித்துக் கொள்ள பதினாறு வயதே ஆன பையன் ஒருவன் அங்கே தங்கியிருந்தான். விசுவாசமாக நடந்து கொண்டு அவனால் தனக்கு ஆபத்து ஏற்படப் போகும் நிலையை அவர்கள் எதிர்பார்க்க வில்லை.

ஒரு சுபமுகூர்த்த தினத்தன்று அவர்கள் வாழ்க்கை அகால மரணமாக முற்றுப் பெற்று விட்டது. ஊர் கூடி அந்த அவல நிலைக்கு இரங்கியது. ஆனால் நேரில்பார்த்த போது பயத்தால் அலறினர். தாட்டியான உடலுடைய அவரது நெஞ்சில் பெரிய ஆட்டுக்கல் வைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கல்லைத் தூக்க சுமார் ஐந்து ஆட்கள் தேவைப்படும். எல்லோரிடமும் மரியாதையுடன் உரையாடும் அவர் மென்மையான இதயம் கொண்டவர். அவர் அத்தனை பெரிய கல்லைத் சுமந்தபடி மரணம் அடைந்திருந்த அவர் நிலை கண்டு ஊரே அனுதாபம் கொண்டது. காவல்துறையினர் பார்வை அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த அப்பாவி இளைஞன் மீது விழுந்ததுஅவன் குற்றம் புரிந்ததை ஒப்புக் கொண்டான். பிறகு அதற்குரிய தண்டனையை நீதி ஸ்தானம் வழங்கியது. இறந்து போனவர் கள் அத்தனை பேரும் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடுவார்கள் என்று எண்ண இயலாது. உலகில் அவர்கள் வேறு வடிவில் மீண்டும் இந்த உலகத்தில் உலவுகின்ற வாய்ப்பு கள் உருவாகலாம். மனிதன் இறந்த பிறகு அவனது உடலில் உள்ள அனைத்து தாதுக்களும் பிரிந்து சென்று அததற்கு உண்டான வெவ்வேறு பொருட்க ளில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். எப்படி மனிதன் தனது உடலின் தாதுக்கள் அனைத்தும் தனக்குச் சொந்தம் என்று நினைக்கலாம். உண்மையில் இந்த உலகத்திற்குத் தான் அவைகள் சேர்ந்தவை. அதனால் அத்தனை தாதுக்களும் மாறிச் சென்று, மற்றபொருட்களுடன் இணைந்து கொணடிட எந்தவிதமான எதிர்மறையான வினைச் செயல்களும உண்டாவதில்லை.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button