ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•07•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(379) மனிதனே புனிதன் —
இதுவும் ஓருவகை நியாயமே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறை சக்தியை அறிந்து கொள்வதற்கு மனிதனின் உடலில் சிரசில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்ற சூரிய, சந்திர ஒளி மண்டலங்க ளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தனித்தனியே விளங்கும் அவைகளை நாம் ஒன்று படுத்த வேண்டும். இரண்டும் ஒன்று பட்ட ஒளி மண்டலத்தில் நமது இறை சிந்தனையைப் பதிவு செய்து வர வேண்டும். இப்படி இடைவிடாத இறை சிந்தனையைப் பதிவு செய்து கொண்டு வருவதற்குத் சிவயோகம் அல்லது இறை யோகம் என்று கூறுவர். இது ஆகாய மண்டலத்தில் இறைவன் தனது சக்தி ஆற்றலுடன் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இடமாகும். மனிதன் இறை சக்தி யுடன் சேர்ந்து ஒன்றாக இணைந்து வாழும் பாக்கியத்தை அடைவதற்கு இது ஒரு உபாயமாகும். நமது சுவாமியின் குடும்பம் ஆனந்த அனுபூதியில் திழைத்துத் தங்களுடைப எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. தனிமையில் அமர்ந்து இருந்த தகப்பனார் தனக்கு முன்னால் சுவாமியை உட்கார்ந்து கொள்ளச் சொன்னார். இறைவனை எண்ணித் ஜெபம் செய்து செய்த படியே அமைதியுடன் இருப்ப தைக் கண்டு, ஏனோ வழக்கமான கோபம் அவருக்கு வரவில்லை. அவர் அன்புடன் பேச ஆரம்பிக்க சுவாமி இறைவன் தனக்குத் துணை இருந்து காக்கும்படி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்.
” தலைநிமிர்ந்து என்னைப் பாரப்பா ” என்று பேசத் துவங்கிய தகப்பனார், “உனக்கு செல்லம் கொடுத்து நாங்கள் தான் உன்னைக் கெடுத்து விட்டோம். உன்னைப் படிக்க வைத்து ஆளாக்கித் திருமணம் செய்து வைத்து குழந்தைக்குத் தகப்பனாகவும் ஆகி விட்டது உன்னால் எங்களுக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. நீ செலவு செய்து கொண்டு மலை மலையாளக் போய் தவம் செய்து வருவதால் உனது குடும்பம் என்ன கதி அடையும்? எனது மூன்று பெண் குழந்தைகளும் என்மீது கொண்ட பாசத்தால், மாப்பிள்ளைகளுடன் பிறந்தகம் திரும்பி எனக்கு உதவியாக இருக்கிறார்கள். மாப்பிள்ளைகள் சம்பாதிக்கின்றார்கள். சுகமாக வாழ்கின்றார்கள். நீ அப்படி இருக்காமல் போனாலும், சாதாரண கிராமத்து ஆளைப் போல எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும். அதில்லாமல் இப்படி வாழ்வது எங்களுக்குப் பிடிக்க வில்லை. எனக்கு எனது மூன்று பெண்களும், மாப்பிள்ளைகளும் போதும். நீ ஏதாவது வேலைக்குப் போய் பத்து ரூபாய் சம்பாதித்து உனது குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சி செய் “என்று கூறிவிட்டு மெளனமானார். உடனே சுவாமி அவரிடம், “அப்பா, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? என்னை வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விடச் சொல்கின்றீர்களா? ” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் அப்படிக் கூற விரும்பவில்லை. எனக்கு எனது பெண் குழந்தை கள் மூவரின் மீதும் பிரியம் அதிகம் என்று உனக்கே தெரியும். நான் அவர்களுக்கு உதவிகள் செய்து முன்னுக்குக் கொண்டு வர விரும்புகிறேன் ” என்று பீடிகையுடன் சுவாமியின் முகத்தையே பார்த்தார்.
நமது சுவாமி தந்தையிடம் ஓர் வாக்குத்தத்தம் தந்து விட்டார். “அப்பா, நான் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. சிறிய குழந்தை முதல் என்னை உங்களுக்கு ஏனோ பிடிக்க வில்லை. அதன் காரணமும் இது வரை விளங்கவில்லை. இறைவனின் கட்டளைப்படி ஒரு தெய்வீக காரியம் நடைபெற வேண்டியுள்ளதால் இங்கு நாங்கள் தங்கியிருக்கிறோம். உங்கள் சொத்து நீங்கள் சம்பாதித்தது. அதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க
உங்களுக்கு உரிமை உள்ளது. இது உங்கள் பக்கத்து ஞாயம். நாங்கள் எதனையும் தங்களிடம் யாசிக்க விரும்பவில்லை. கொஞ்ச காலம் இங்கேயே தங்கி இருக்க விரும்புகிறோம். அதற்கு அனுமதி அளித்தால் மட்டும் போதும். ” என்று சுவாமி கூறியதும் அவர் நிம்மதி அடைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இதனுடைய வினைச் செயல் விதியாக மாறிய போது அதனைத் தடுத்து நிறுத்த அவரால் இயலவில்லை. ஏகப்பட்ட இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. ஊரின் அருகாமையில் சுவாமியின் தகப்பனார் விவசாய நிலம் ஒன்றை வாங்கி மானாவாரிப் பயிர்கள் விளைவித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கு விவசாய நிலங்களின் விலை நான்கு மடங்காக உயர்ந்து விட்டது. கெட்டிமல்லன் புதூர் என்ற கிராமத்தில் வசிக்கும் பழைய மணியகாரர் ஆறுமுகம் என்பவரின் இளைய சகோதரர் வெங்கடசாமி என்பவரிடம் இருந்து தான் அப்பூமியை வாங்கி இருந்தார். விவசாய நிலத்தின் விலை கூடி விட்டதால் வெங்கடசாமி நமது சுவாமியின் தந்தையிடம் வந்து, “நான் அவசரப்பட்டு எனது பூமியை உங்களுக்கு விற்று விட்டேன். மீண்டும் விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன். விற்ற பூமியை எனக்கே திருப்பித் தந்து விட்டால் என் குடும்பம் பிழைத்துக் கொள்ளும். என்ன சொல்கின்றீர்கள்? ” என்ற பீடிகையுடன் பேசிப் புகழ வேறு ஆரம்பித்து விட்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.