ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
13•07•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(378) மனிதனே புனிதன் —
சுவாமிக்குக் காதில் பஞ்சு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மணி ஐயர் அவர்கள் கிராமத்தில் நல்ல பேரும் புகழும் பெற்றவ ராக வாழ்ந்தும், மக்களின் ஆதரவு இருந்தும் சத்திய ஞாய தர்மங் களைக் கடைப்பிடித்து வந்தும், எதையும் எதிர்த்து நிற்கத் திராணி அற்றதால் மனத் துன்பத்தில் உழன்று போனார். எதனையும் மன்னித்து விடும் தெய்வீக குணம் அவரிடம் இருந்ததால் மக்களுக்கு அவர் மீது பற்று பாசம் மிகுந்து இருந்தது. அவர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேறிச் சென்றதால் ஒட்டு மொத்த கிராமமே சோகமயமாக மாறி விட்டிருந்தது. ஒரு பிராமணன் சமுதாயத்திற்காகவே வாழ வேண்டும் என்பதில் மணி ஐயர் திடமாக இருந்தார். இப்படியான சமூக சேவையில் ஈடுபடுபவர் கள் மற்றவர்களின் ஏளனங்களை யோ, மற்றும் அவமரியாதைக ளையோ கருத்தில் கொள்ளாமல் திட சித்தத்துடன், எதனையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வாய்த்திட்டாலோ, மனிதனுள் புனிதனெனப் பெயர் பெறுவர் என்பது திண்ணம்.
இந்தக்காலகட்டம் நமது சுவாமி அவர்களுக்கு சரியான சோதனைக் காலம் என்றுதான் கூறவேண்டும். சுவாமியின் தகப்பனார், தாயார் அவர்கள், எவ்வளவு தான் வீட்டு மாப் பிள்ளைகள் மூன்று பேரையும் ஆதரித்தாலும், உள்ளூர அவர்கள் இவர்களை வெறுப்பை அறிந்து கொள்ள இயலவில்லை. சுவாமி அறிந்து கொண்டாலும் செய்ய ஏதுமில்லை. சுவாமி மற்றும் மீனாம்பாள் நாச்சியார் இருவரும் எல்லோரிடமும் மிகப் பக்குவத்துடன் நடந்து கொண்டனர். தங்களின் தவம் நல்ல முறையில் பூர்த்தி அடைய, எதனையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் தானாவே அவர்களுக்கு உருவாக்கப்பட்டது. இதனை இறைவன் கருணை என்றுதான் கூற வேண்டும். சற்குரு நாதருடன் நமது சுவாமி அநேக நாட்கள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போதெல் லாம், சுவாமியின் இரண்டு காது களிலும் வைத்து அடைத்துக் கொள்ளப் பஞ்சை எப்போதும் தயாராக எடுத்து வைத்திருப்பார் நாச்சியார். “இது எதற்கு? ” என்று சுவாமி கேட்டார். ” இன்னும் உங்களுக்கு மனதில் பக்குவம் முழுமையாக வரவேண்டும். உங்களுக்கு இன்னும் சிறிதளவு கோபம் வருகிறது. காதில் பஞ்சை அடைத்து வைத்துக் கொண்டு? காது கேளாதவரைப் போல இருந்து விடுங்கள் . இல்லை என்றால் மான அவமானங்கள் உலகில் இல்லை என்று எண்ணினால், பஞ்சைக் காதில் வைத்துக் கொள்ளாதீர்கள்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பாட்டி அடிக்கடி சொல்வதை, ஞாபகத்தில் கொள்ளுங்கள் ” என்று மீனாம்பாள் நாச்சியார் கூறினார்கள். இந்த அறிவுரை நமது சுவாமிக்கு மிகவும் பிடித்து விட்டது. ‘தனக்கு மனப் பக்குவம் ஏற்படும்’ என்று ஜெபித்துக் கொண்டே தியானத்தில் ஆழ்ந்து போனார்.
பாட்டி அவர்கள் ஒருமுறை, “அம்மா, அப்பா சொல்படி கேட்டு நடப்பது தானே உனது வழக்கம். பின்பு எதனால் பிரச்சினை ஏற்படுகிறது?” என்றார். அதற்கு சுவாமி கூறும் வார்த்தைகளைக் கேட்டுப் பாட்டி அதிர்ந்து போனார். சுவாமி அவர்கள் , “பாட்டி, மாப் பிள்ளைகள் மூவரும் என்னிடம், உங்கள் அப்பாவிடம் சொல்லி விவசாய பூமி களை விற்று அம்மாவிடம் தந்து விடச் சொல்லுங்கள். உங்களது சாமியார் எண்ணம் ஈடேறும் என்றார்கள். நானும் சொத்தை விற்று விடுங்கள் என்று அப்பாவிடம் எப்படிக் கூற முடியும்? சுயசம்பாத்திய சொத்தை, அவர் இஷ்டப்படி என்னமோ செய்து கொள்ளட் டும். எனது குடும்பம் இந்த உலகில் பிழைக்க, இறைவனை நம்பி இருக்கிறோம். அப்பா விடம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறும் காலம் வரும். அதற்காகக் காத்திருக்கி றேன்” என்றார். எந்த நேரத்தில் சுவாமி இப்படிச் சொன்னாரோ, அது உடனடியாகப் பலிதமாகி யது. தந்தையிடம் இருந்து கோபத்துடன் அழைப்பு வேகமாகப் புறப்பட்டு, நமது சுவாமி அவர்களின் அருகே மெதுவாகச் சென்றது. ஏனெனில் சத்தியத்தைக் கண்டால் தர்மமும் பணியுமாம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.