ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
11•07•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(376) மனிதனே புனிதன் —
ஞானவித்தகர் ஸ்ரீ ஈஸ்வர பட்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் இன்னும் சில தெய்வீக உண்மை களை நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் கூறி விளக்கமும் தந்துள்ளார். அமாவாசை அன்று இருவரும் வடக்கில் இருந்து வந்திருந்த பைராகிகளைச் சந்தித்தனர். நமது நாகராஜன் சுவாமி அவர்களுக்கு ஏனோ மனதில் திகில் உண்டானது. சற்குரு நாதரைக் கண்டு வணங்கினார் கள். அக் கூட்டத்தின் தலைவர் பெயர் சோமநாத். ஓடுகள் போடப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் மேற்குப் புறமாக அமைந்த திண்ணையின் மீது பைராகிகள் ஐவரும் அமர்ந்திருக்க, அந்தக் கட்டிடத்தின் மேற்குப்புறம் உள்ள கதவின் மீது சாய்ந்து கொண்டு, கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டார். தலைவர் சோமநாத் அவர்கள் சற்குரு நாதருடன் ஹிந்தி பாக்ஷையில் பேசிக் கொண்டு, மெதுவாக அவரது கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டே இருந்தார். சகஜமான பேச்சு வழக்கில் உள்ள கிராமப்புற மக்கள் பேசும் ஹிந்தி யில் உரையாடிக் கொண்டிருந்த னர். குருநாதரது அருகில் பவ்யமாய் அமர்ந்து இருந்த நமது நாகராஜன் சுவாமி பற்றிப் பேசிக் கொண்டனர். ராமாயண காலத்தில் மறைக்கப்பட்ட பரிகார ஸ்தலத்தை, ஹனுமன் இறுதியில் தவமிருந்து சிரஞ்சீவி யாக வாழ்ந்து கொண்டிருக்கும்
புண்ணிய ஷேத்திரத்தை, இவன் வசம் ஒப்படைகும்படி அகத்திய மாமுனிவர் ஏடுகளில் எழுதி வைத்துள்ளார். இவன் எனது மகன் நாகராஜன்” என்று அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த சந்தோஷதுடன் முதுகில் தட்டிக் கொடுத்தார் சோம்நாத் அவர்கள். அந்த பைராகியின் கைபலத்தால் முதுகில் அடி பலமாகப் பட, நமது சுவாமி வணக்கம் கூறினார். மேலும் சறுகுருநாதர், ” எல்லோரும் அமர்ந்து கொண்டிருந்த இடம் ஒரு சுடுகாடு என்றும், சுடுகாட்டில் அமைந்துள்ள இந்த வீட்டினுள் தான் தமது சமாதி அமைந்துள்ளது ” என்றார். “ஹர ஹர மகாதேவ்” என்று ஏக குரலில் கூறி விட்டு, குருநாதரை பூஜித்தனர். சங்குகளின் நாதம் “பம்பம்” என முழங்கியது.
(1).ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியாய நமஹ (2). ஓம் ஸ்ரீ ஆதி மாதா ஜெகதீஸ்வரி நமஹ
(3). ஓம் ஸ்ரீ ஆதி பிதா பரமேஸ்வ ராய நமஹ (4). ஓம் ஸ்ரீ லோக
க்ஷேம கணாய விநாயகாய நமஹ (5). ஓம் ஸ்ரீ ஆதி சைவ பீடாதிபதி சுப்ரமண்யாய நமஹ (6). ஓம் ஸ்ரீ சிருஷ்டிகர்த்த பரப் பிரம்ஹ சொரூபாய நமஹ (7). ஓம் ஸ்ரீ ரக்ஷனாய மஹா விஷ்ணுவாய நமஹ (8). ஓம் ஸ்ரீ சம்ஹார மூர்த்தி ருத்ராய நமஹ (9). ஓம் ஸ்ரீ த்ரயஸ் த்ரிம்ஷட் கோட்டி தேவாய நமஹ (10). ஓம் ஸ்ரீ அஷ்ட சத்வாரிம் ஷத் சகஸ்ர ரிஷியாய நமஹ (11). ஓம் ஸ்ரீ அனந்த கோட்டி சித்த கணாய நமஹ (12). ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதாய நமஹ ” இவ்வாறு பகவான் ஸ்ரீ ஈஸ்வரரை வணங்கிய பிறகு அனைவரும் தியானத்தில் அமர்ந்து கொண்டனர். இரவு நடு ஜாம நேரத்தில் அனைவரும் சற்குருவினிடம் விடை பெற்றுக் கொண்டு நமது நாகராஜன் சுவாமியை ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். பிறகு நாகராஜன் சுவாமி திண்ணையில் படுத்து உறங்கி விட்டார். மெல்லத் தனது உத்திரியத்தை எடுத்து மகன் மீது போர்த்தி விட்டார். நமது நாகராஜன் சுவாமியின் கிராமத்தில் உள்ள பிரசண்ட விநாயகர் கோயிலில் அதிகாலையில் நமது சுவாமி கண்விழித்து எழுந்தார்.
எல்லாவற்றையும் படைத்துக் கொண்டே இருக்கின்ற இறைவ னாகிய ஈஸ்வரனில் இருந்து தான் கருணை என்னும் ஆண்மை சக்தி உருவாகியது. அந்தக் கருணையில் இருந்து தான் அன்பு என்ற பெண்மை சக்தி வெளிப்பட்டது. அதனில் இருந்து ஈர்ப்பின் சக்தி புறப்பட் டது. இதற்கு அழகு குண சக்தி என்றே அழைத்தனர். ஈர்ப்பினில் இருந்தே உணர்வு வெளியானது. இந்த உணர்வுதான் தன்னையும் வளர்த்துக் கொண்டு, மற்றவை களையும் வளர்ச்சி நிலை பெறச் செய்திடக் காரணமானது. உணர்வானது தன்னில் இருந்து அருளை வெளிப்படுத்தியது. அருளை ஞானியர்கள் சகல விதமான செளபாக்கிய குணங் கள் என்றே போற்றினர். அருட் செல்வமானது தன்னில் இருந்து சத்தியமாகிய குணத்தை வெளியிட்டது. இது பிரார்த்தனை யின் போது முக்கியமான இடத்தை வகிக்கிறது. யார் எதைச் சொன்னாலும், எந்த பாக்ஷையில் சொன்னாலும் அவர்களுடைய கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக் கொள்வது இந்த சத்திய குணத்தில் இருந்து தான்.
சத்தியத்தில் இருந்து தான் தர்மம் தழைத்தோங்கியது. இதுவே மன்னிக்கும் மனப் பான்மைக்குக் காரணமாகியது. சத்தியம் என்றும் நிலையான தாகினும், தர்மம் காலத்தின் செயல் சூழலுக்குத் தக்கபடி தன்னை உருவாக்கிக் கொண்டது. இதனால் யுகதர்மத் தின் தீர்ப்பில் அறிவின் ஆற்றல் வெற்றி பெற்றது. இந்த தர்மமே உழைப்பை மேன்மைப் படுத்திற்று. உழைப்பினால் பசியாகிய இறை சக்தியை மனிதன் அறிந்து கொண்டான். பசியின் வழியே இறைவன் தந்த உணவைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்தான்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.