வித்தகரான இமையா நாட்டார்!

296

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•07•2017,
திங்கள்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(375) மனிதனே புனிதன் —
வித்தகரான இமையா நாட்டார்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” முருகனின் விக்ரகத்தைப் பிடித்து மேற்கு திசைக்குத் திருப்பிய மொட்டைத் தலை சாமியார் அபூர்வ சக்தி பெற்றவர். முருகனின் விக்ரகம் இருக்கும் கர்பக்கிரகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்படி போகநாதர் வடிவமைப்பை ஏற்படுத்தி உள்ளார். அங்கு குளிர்ச்சியை உருவாக்கினால் விக்ரகத்தை மேற்கு நோக்கித் திருப்ப முடியும் என்பதால் தான் இவர் வரவழைக்கப் பட்டார். வெப்பமும், குளிர்ச்சியும் விடாத எதிர் மோதலில் ஏற்படும் பிரம்மம் என்னும் சக்தியின் ஆற்றலைக் கொண்டே அதனைச் சாதித்தார் அந்த மெய்யுணர்வாளர். போகநாதரின் ஒப்புதலின் பேரில் உலக நன்மையின் பொருட்டே இக் காரியம் நிறைவேற்றி வைக்கப் பட்டது. போகநாதர் தனது மனைவியின் வேண்டுதலினால் தான் முருகன் சிலையை மேற்கு நோக்கி ஸ்தாபித்தார் என்று கூறப்படுவதில் உண்மை இருக்குமா என்பது புலனாக வில்லை. பூமியில் எதிர்காலத் தில் ஏற்படும் வெப்பமயமாகும் சூழலைப் தடுக்கக் கூட பழனி மலை முருகன் விக்கிரகத்தில் உள்ள ரகசியம் உபயோகப் பட்டாலும் ஆச்சரியமான சூழ்நிலை உருவாகலாம். பனி மலையில் இருந்து வந்த மெய்யன்பரைச் சில பக்தர்கள், கோயிலை விட்டு வெளியில் இழுத்துப் போகும் போதே மெல்லத் தனது உருவைப் பிறர் கண்களுக்குக் காணாதவாறு, மறைத்துக் கொண்டு, தனது இருப்பிடத்தை அடைய வடக்கு திசை நோக்கிப் பறந்து சென்று விட்டார்.

அழகுறக் காணும் இப் பூமியில் பரிசுத்த ஆத்மாக்கள் வாழ் வாங்கு வாழ வேண்டும் என்ற கொள்கையை உடைய அபூர்வக் கூட்டத்தாரைச் சேர்ந்தவர் அவர். இவர்கள் பனிமலைப் பிரேசங்க ளில் வாழ்ந்து கொண்டு உள்ளார் கள். தேவைப்படும் போது மட்டுமே இவர்கள் தங்களை வெளிப் படுத்திக் கொள்வார்கள். தீமை சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்கள். தீமை சக்திகளி டம் இருந்து உலக மக்களைக் காக்க எண்ணும் இவர்கள், கடும் தவத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். மற்ற இடங்களில் தவம் செய்து சக்தி வாய்ந்த மனிதர்கள் மற்றும் ஒளியுடல் பெற்றவர்கள் எந்த நாடுகளில் இருந்தாலும், அவர்கள் விரும்பினால், தங்களு டைய மரணமில்லாப் பெரு வாழ்வு இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து, என்றும் இளமை வாழ்வில் வாழ வைத்துக் காக்கின்றார்கள். அத்துடன் இவர்களில் ஆண்கள், பெண்கள் அனைவருமே நைஷ்டியப் பிரம்மச்சரிய விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றார்கள். அந்தப் பணிகளுடன், உலகின் ஆபூர்வப் பொருட்களை, மனிதன் ஆதி காலம் தொட்டுக் கண்டு பிடித்த அனைத்துப் பொருட் களையும், இவர்கள் சேகரித்துப் பாதுகாத்து வருவதும் வியப்பூட் டும் உண்மைகளே. இவர்களைத் தொடர்பு கொள்ளும் ரகசிய மந்திர ஒலிகளை, இவர்கள் தேர்வு செய்யும் மனிதர்களில் புனிதருக்கே கொடுத்து உதவி வருகிறார்களாம். பிரபஞ்சம் எங்கேயும் சென்று வருகின்ற தகுதியைத் தங்களது தவத்தால் அடைவதற்கு இவர்கள் உதவி புரிகின்றனராம். சித்தாதி சித்தர் களாகிய இவர்கள் இறைவனது ஆணையை நிறை வேற்ற இப் பூமண்டலத்தில் தங்கி உலக சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறார்களாம். ஆக பழனி மலையில் ஸ்ரீ முருகன் தெண்ட பாணித் தெய்வத்தின் விக்ரகத் தை உலக நன்மையின் பொருட்டே, மேற்குதிசை நோக்கி திரும்பியதும், தேவதா சக்திக ளின் பாதுகாப்பில், மனித சமுதாயம், விஞ்ஞான மறு மலர்ச்சியைப் பெற்று உய்வு நிலையை அடைந்தது.

மனிதன் தனது அறிவினை உபயோகப் படுத்தி விஞ்ஞான அறிவியலில் பெரும் முன்னேற் றத்தையும், சாதனைகளையும் புரியத் துவங்கினான். இந்த மாற்றம் இறைவனது ஆணை யால் தான் நடைபெற்றது என்பதை சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர மகா ஜோதி ஆண்டவர் அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். உலகில் ஜீவராசிகள் பிறக்கும் போது, பூமியின் ஈர்ப்பு சக்திக்குள் இருக்கும் 27 நட்சத்திர சக்தி மண்டலங்களிலும், உருவாகும் வினைளுக்குக் காரண கர்த்தாக் களாக இருக்கும், சக்தி பெற்ற நவகோள்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவே, மனிதனின் ஆற்றலைக் காப்பாற்றிக் புதுப்பிக்கவே , முருகனின் விக்ரகம் போகநாதரால் உருவாக் கப்பட்டது. படைப்பில் முழுமை பெற்ற 27 ரத்தினக்கற்கள், முருகனின் பீடத்தினடியில், முருக வசீகர எந்திரத்தினடியில் வைக்கப்பட்டுள்ளது. நவகிரகங் களின் ஆற்றல்கள், வழிபடுவோர் களின் மீது வேகமுடன் பாய்ந்து, இன்னல்கள் விளைவிக்காமல் நவபாஷாணத்தால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நன்மைகளை உருவாக்கித்தர வேண்டும் என்று நினைத்த போகநாதரின் உயர்வான, கருணையே வடிவான அன்பு நெஞ்சத்திற்குக் கோடானு கோடி நன்றிகளை காணிக்கையாக செலுத்துவதைத் தவிர நாம் என்ன செய்து விட முடியும்? பக்தஜனப் பிரியன், கலியுக வரதன், ஞான வள்ளல், முருகப் பெருமானின் இன்னருளை வேண்டுவதுடன், போகநாதரைப் போற்றுவோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button