ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•07•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(373) மனிதனே புனிதன் —
தெய்வ ரகசியம் மறைந்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“பழனியில் குருக்கள் தான் கண்களால் காணாத, தனது தொடு உணர்வுகளால் அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்குத் தன்னைக் வெளிப்படுத்திக் கொண்ட, அமானுஷ்யத்திடம் குருக்கள் பேசினார். ‘ஐயா, தாங்கள் யார் என்பதை அறியேன். தாங்கள் இங்கு தான் இருக்கின்றீர்கள் என்பதை உணர்கிறேன். ஜயா எங்களின் ஆழ்மனதின் எண்ணங்களில் எல்லாம் முருகன் பதிந்து போய் இருக்கிறார். எங்கள் வாழ்க்கை யில் நடைபெறும் சூழ்நிலையை முருகன் தான் உருவாக்கி, எங்களை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். முருகனின்றி எங்கள் வாழ்வைத் கற்பனை செய்யவே இயலாது ஐயா. மாயாவியான தாங்கள் எங்களது முருகப்பெருமானை விட்டு விட்டுச் சென்று விடுங்கள் ஐயா. தங்களின் நோக்கம் நிறை வேறாது. போகநாதர் இதற்குக் காவலையும், மணிமந்திரக் கட்டுக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றார். அதனை மீறி முருகப் பெருமானைக் கொண்டு செல்லும் தவறைச் செய்து விடாதீர்கள். இதனால் தெய்வீக சக்திகளைப் பகைத்துக் கொள்வீர் கள் ‘என்றார். முருகன் விக்ரகம் இப்போது முன்னைக் காட்டிலும் வேகமாக அசைக்கப்படுவது மிக நன்றாகத் தெரிந்தது. குருக்கள் கோபம் இல்லை மீறியது. சண்டாளா, நிறுத்திக் தொலை யடா. நான் கற்ற வேதத்தின் மீது ஆணை; எங்களுக்கு நல்ல வழி காட்டி வழிநடத்திச் செல்லும் இறைவனின் மீதும் ஆணை. உனது அடாத காரியம் பலிதப் படாமல் போகக கடவது’ என்று சபித்துவிட்டுப் போனார்.”
” முருகனை அகற்றச் செய்யும் அடாத காரியத்தினால் குராவடி யில் சூக்குமமாய் தவம் புரிந்து வரும் முருகப் பெருமாளின் சீடர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்று உண்மை பக்தர்களின் உள்ளங்களில் பழனி மலை மீது விரைவில் வரவேணும் என்ற செய்தியைப் புகட்டி விட்டார்கள். இப்போது மலை மீது பக்தர்கள் குவிந்தனர். இரவு நடுஜாமம் நேரம். நெருப்புப் பந்தங்களைக் கொழுத்தி எடுத்துச் சென்றனர். செய்தியைக் கேள்விப்பட்டு குருக்கள் தலைமையில் குவிந்த பக்தர்கள் கொதித்துப் போய் விட்டனர். கர்பக்கிரகம் திறக்கப்பட அதன் உள்ளே இருந்து தாங்க முடியாத குளிர்ச்சி வெளிப்பட்டது. குருக்களின் ஆலோசனைப்படி நெருப்புப் பந்தங்கள் உள்ளே கொண்டு போகப்பட்டது . கிழக்கு வாயில் பக்கம் முருகனின் முதுகுப்புறம் தான் தெரிய, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். விக்ரகத்தைச் சுற்றிலும் குருக்கள் பலர் அக்கினிப் பந்தங்கள் பிடித்துப் பார்க்கப் பழனி ஆண்டவர் மேற்கு நோக்கித் திரும்பி இருந்தார். முருகனை மேற்குப் பக்கமாகத் திருப்பிய சாமியாரின் உருவம் கண்களுக்குப் புலப்படத் துவங்கியது. வெளியில் நின்ற பக்தர்களுக்கு மொட்டைக் சாமியாரின் முதுகுப் புறம் பளிச்செனத் தெரிந்தது. முருகனின் நவபாஷாண சிலையைக் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து இருந்த சாமியாரின் கைகளைப் பிடித்து குருக்கள் விலக்க முயன்றனர். இயலவில்லை. பலம் மிகுந்த இளம் குருக்கள் தீப்பந்தங்களால் மொட்டைச் சாமியின் விரல்களைத் தீய்த்தனர். வெகுநேரம் போராடி மொட்டை சாமியின் கரங்களை முருகனின் விக்ரகத்தில் இருந்து விடுவித்து வெளியே இழுத்துப் போயினர்.”
“அதன் பிறகு மர்ம சாமியார் என்ன ஆனார் என்பதும் தெரிய வில்லை. மாந்திரீகன் என்று கருதிய ஜனங்கள் முன்பக்கம் உள்ள பற்களைக் கழற்றி விட்டு விட்டதாகப் பேசிக் கொண்டார் கள். பல் போனால் சொல் போச்சே, எப்படி மாந்திரீக உச்சாடனம் செய்ய முடியும்? இதுதான் சரியான வழி என்று அக்காலத்திய அனுபவஸ்தர்கள் ஞாயம் தேடிக் கொண்டார்கள். மற்றபடி முருகன் சிலை மேற்கு திசை நோக்கியும் திரும்பிய பிறகு, திரும்பவும் கிழக்குப் பக்கம் திருப்ப முடியவில்லை யாம். வாயில் மேற்குப் பக்கம் அமைந்த பிறகுதான், மலைக் கோயில் பிரபல்யமாக வளர்ச்சி நிலை பெற்றதாம். 27 நட்சத்திரப் பாடங்களும், சந்திர தியானத்தில் வானியல் பாடங்களின் பரிகாரங் கள் உலகினுக்குக் கிடைக்கப் பெற்றதாம். பழனி ஆண்டவர் நிற்கும் பீடத்தில் உள்ள ரத்தினக் கற்களின் மகிமையும் மக்களின் எண்ணத்தை ஈடேற்றித் தந்ததாம். மட்டுமல்லாமல் மக்களின் உடல் பிணி, உள்ளப் பிணி நீக்கும் செயல்களால் மனம் ஆறுதல பெற்று வரலாயி னர். தீயசக்திகளின் சேட்டை
களில் இருந்து விடுபடலாயினர். உடல் சூடு தணிந்து, தாதுக்கள் பலப்பட்டு, பிந்து தேஜஸ் பெற்றனர். இதயத்தைப் பலப்படுத்தி, தேகத்தை கல்பமாக மாற்றிக் கொண்டனர். கண் பார்வையை மற்றும் தேகத்தைக் குளிர்ச்சி அடையச் செய்து கொண்டனர். இரத்தத்தை அதிகமாகச் சுரக்கச் செய்து, பால் வினை நோய்கள் அணுகாமல் காத்துக் கொண்டனர்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
—ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.