கட்புலனாகா மர்ம சுவாமி

295

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•07•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(372) மனிதனே புனிதன் —
கட்புலனாகா மர்ம சுவாமி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“இறைவனால் படைக்க்ப்பட்ட தெய்வங்கள், இயற்கையின் – இறைவனின் உண்மையை, இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில், அறிவின் பரிணாம வளர்ச்சி பெற்ற மனித சமுதாயத்திடம், ஆசீர்வாத முடன் கொண்டு சென்று சேர்த்தனர். இறைவனின் ஆணையை வேதங்களின் வாயிலாகக் கேட்டுக் கொண்ட அறிவின் முன்னோடிகள் இறைவனுக்கு வணக்கம் கூறினர். அவர்களுக்கு அறிவைப் பெறுவதில் அதிக நாட்டம் ஏற்பட்டது. இறைவ னால் அனுப்பப்பட்ட தெய்வீக சக்திகள் அறிவைப் தேடும் மனிதர்கள் முன்னால், மேதா விலாசமுடைய ஆத்ம ஞானியர் களாக வெளிப்பட்டனர். இவர்கள் எங்காவது வெளிப்பட்டு விட்டால் அல்லது இருப்பதாகக் கேள்விப்பட்டு விட்டாலோ, அறிவின் ஞான தாகம் உடைய வர்கள், எத்தகைய சிரமங்களை யும் பாராமல் அவர்களை நாடிச் சென்றனர். பிச்சை புகின்றாலும், உடல் வலிமை குறைந்தாலும், வெகுதூரம் பிரயாணம் செய்தாகி லும், முதுமை வந்துற்றாலும், இருக்கின்ற தங்களது உடல் சத்தியைக் கொண்டும், மன வலிமையைக் கொண்டும், அறிவின் தாகத்துடன் தாங்கள் விரும்பிய ஞானக் கல்வியைக் கற்றுக் கொண்டு தேர்ந்தனர். உள்ளன்புடன் பராபரமாகிய இறைவனை வணங்கித் துதித்தனர். நாமும் மனவலிமை யுடன், ‘ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம் ‘ என்றே, இறைவன் மீது நம்பிக்கையுடன் வணங்கித் துதிப்போம். இறைவனை நாடி, இறை உணர்வில் நிலை பெற்றே வாழ்ந்து வந்தால், தெய்வீக குருமார்கள் நமக்கும் கிடைப்பார் கள், நன்றி. இறைவனை அன்றி வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுதோமேயானால், பொதுவாக, மனம் மற்றும் நமது சிந்தனைகள் அனைத்துமே தீய நோக்கில் போகுமாறு அதுவே செயலுற்று, பூதாகரமான சக்தியாக, அது உருப் பெற்று விடும். பிறகு அதனை யாராலும் தடுக்க முடியாத, தீயவினையின் மாபெரும் ஆற்றலாக உருவாகி விடும். உயர்ந்த ஆற்றல் சக்தி யை உருவாக்கிடும் ஆன்மீக அறிவின் ஞானத் தேடல்களுக்கு அடிப்படையானது மனஉறுதி யுடன கூடிய பிரம்மச்சரியமே! அது உயர்ந்த பலனைத் தருவது என்பது சர்வ நிச்சயமே”.

“இதனைப் போன்றே தீமை சக்தியை அடைய விரும்பு பவர்களுக்கும் இதுவே அடிப்படையாக உள்ளது. எந்த சக்தியை அடைய விரும்பினா லும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூடிய தவமும் , பிரம்மச்சரிய மும் கொண்டு, ஒரு வருடகாலம் அவற்றை ஒழுங்காகக் கடைப் பிடித்து வர வேண்டும் என்பதே முக்கியமானது. பழனி மலை வந்து உச்சாடன ஜெபத்திலும், தவத்திலும் ஈடுபட்டு வந்த மர்ம சுவாமிகள் ஒருகட்டத்தில் தனது உடலை மாயமாக மறைத்துக் கொண்டு விட்டார். ஆதி காலத்தில் விரதமிருந்து தான் மலைக் கோயில் தரிசனம் செய்ய வருவார்கள். மர்மசுவாமியின் அகோர தவத்தால் சகலமும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. கோயிலுக்குள் வந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள் ஜனக்கூட்டம் முற்றிலுமாக நின்று போனது. வருமானமின்றி என்ன கைங்கரியங்கள் தான் நடைபெறும்? முருகனின் சேவையே தனது தேவை என்று வாழ்ந்து வந்த ஒரு குருக்கள் மட்டுமே, முருகன் பூஜைக்குத் தேவை யான பொருட்கள் நைவேத்யமு டன், தலையில் கூடையை வைத்துத் தூக்கிக் கொண்டு, தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு, முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் குடத்தில் தீர்த்தமுடன் உடன் சென்றார். ராஜாக்கள் காலத்திய நிவந்தங்கள் மற்றும் கொடை பெற்று அக்கால பூஜை கள் நடந்து வந்தன. என்ன காரணத்தினாலோ கோயில் கதவைத் திறந்த குருக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குமிழ் சிரிப்புடன் கிழக்கே சூரிய உதயத்தைப் பார்த்தபடி நின்று அருள் செய்தபடி இருந்தான் செவ்வேள் முருகன். குமரன் ஒருவனுக்குக் கிழவன் வேஷம் இட்டது போல், கையில் தண்டு, காலில் கட்டை விரலை மெட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கும் பாதுகைகள், கோவணத்துடன், இடது கையை இடுப்பில் ஊன்றி , வயோதிகத் தோற்றத்தில் காட்சி தரும் ஸ்ரீ முருகன் விக்ரஹம் பீடத்துடன் சற்று இடது புறமாகத் திரும்பி இருந்தது. இது என்ன மாயமோ? முருகப்பா உனக்கு என்னதான் நேர்ந்தது? யார் மீது உனக்குக் கோவமப்பா முருகா? எனக்கூவித் தேம்பி அழுதார். கற்பகிரகம் எப்போதும் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நிலை மாறி, நடுக்கும் கடுங்குளிர் சீதோஷ்ண மாக உருவாகி இருந்தது. இடுப்பில் உத்திரி யத்தை ஸஇழுத்துக் கட்டிக் கொண்டு முருகனைத் தொட்டு அபிஷேகம் செய்தவருக்கு மீண்டும் அதிர்ச்சி தாக்கியது. தண்டபாணி விக்ரகத்தை நூலிழை நூலிழையாக யாரோ திருப்பிக் கொண்டிருப்பதை நன்கு உணரத் துவங்கினார். முருகப்பனுக்கு அபிஷேகமும், ஹாரத்தியும் செய்து, பூமாலை, பா மாலை சூட்டினார்.அவருக்குப் புரிந்து விட்டது. யாரோ ஒரு மாயாவி முருகனைக் கொண்டு செல்ல எண்ணுகிறான். தனக்குப் புலனாகாத அமானுஷ்யத்திடம் கோரிக்கை வைத்தார் பக்தரான குருக்கள். ”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button