ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•07•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(371) மனிதனே புனிதன் —
கர்பகிரகத்தினுள் நுழைந்த அமானுஷ்யம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” பழனியம்பதியில் காரமடைத் தோட்டம் என்ற இடம் உள்ளது. பெரிய நாயகி அம்மன் கோயில் அந்தப் பகுதியில் தான் உள்ளது. கோயிலின் வட பால் சற்று தூரத்தில் கீரைக்காரத் தெரு உள்ளது. அதற்குத் தென்புறம் உள்ள குறுக்குத் தெருவில் மலை மீது பணி புரியும் கோல்காரர் வசித்து வந்தார். அவர் பெயர் என்ன வென்று பலருக்கும் தெரியாது. கோல்காரர் என்றால் அக்காலத் தில் அனைவருக்கும் தெரியும். அவர் பெயர் பெரியசாமி என்று கேள்வி. அவர்தான் இப்போது கூறப்போகின்ற சம்பவத்தைக் கூறியவர். அப்போது அவரது உறவினர்கள் அனைவருக்கும் இதனைச் சொல்லி வைத்திருந் தார். அவரது மகளைத் தாராபுரம் அருகில் உள்ள தளவாய் பட்டினம் என்ற ஊரில், எனது பெரியப்பா திரு.செல்லையா என்பவர் மகன் திரு.ராமு என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் கூறியதுதான் இது. பழனி மலை அடிவாரத்தில் ஒரு சாமியார் தங்கி பிரமாதமான பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தார். பழனி மலை முருகனின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந் தார். அநேக ஜனங்கள் அவரைத் தேடி வந்தவண்ணமாக இருந்தனர்.பிறஇடங்களில் இருந்தும் மக்கள் அவரைப் பார்க்க வந்தனர். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பல மொழிகள் பேசுவதில் வல்லவர். அதனால் அவருடன் அனைவரும் நேசமுடன் பழகி வரலாயினர். அக்காலத்தில் பழனி மலை மீது ஓரளவு பாதுகாப்பு இருந்தது. இன்று எவ்வளவோ பலத்த பாது காப்பு இருக்கிறது. மலை மீது சேவை செய்து வரும் ஒருவரை அந்த மர்மசுவாமி நன்கு பழகி வைத்துக் கொண்டு, அவருடன் அடிக்கடி முருகனை தரிசிக்கச் சென்று வரலானார். அங்கு இப்போதெல்லாம் அதிக நேரம் மலை உச்சியில் மண்டபத்தில் அமர்ந்து ஏதோ மந்திரம் ஜெபித்த படி தவமிருந்து வரலானார். அக் கால கட்டத்தில் அங்கே இந்த மர்மசாமியாருடன் நட்பாக இருந்த வந்த சேவார்த்திக்கு, இப்போது இவரைக் கண்டு சற்று அச்சம் ஏற்பட்டது .”
“தங்களது பெட்டிகளைத் திறக்க வரும் சேவார்த்திகள், அங்கு பலமணி நேரங்கள் இடைவிடாது தவம் செய்து வருகின்ற அந்த மர்ம சாமியாரைக் கவனித்து வந்தனர். அவருடன் பழகி வந்த சேவார்த்தியை மற்ற சேவார்த்திகள் எச்சரிக்கை செய்தனர். சில நேரங்களில் அவரது உருவம் பாதி மறைவதும், பாதி தெரிய வருவதும் கண்டு திகைத்துப் போய், என்ன செய்வது எனறு தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டார், அவரை அங்கே அனுமதித்த சேவார்த்தி. இப்படி அநேக நாட்கள் பீதி யின் வசப்பட்டுத், தனக்குள் பேசிக் கொண்டு இருந்தார் அந்த சேவார்த்தி. இப்படிப்பட்ட அமானுஷ்ய நிகழ்ச்சிகளைப் பற்றி வெளியில் பேசுவதற்கே பயந்து நடுங்கினர். ஒருநாள் அந்த மர்ம சாமியார் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்தே போனார். அவர் அங்கு மலை மீது காணப்படாததால் சேவார்த்திகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் நிம்மதி இழந்து போனவர் அவரை அழைத்துப்போன சேவார்த்தி மட்டுமே. காரணம் மர்மசாமியாரின் உருவம் தெரியா விட்டாலும், அவரது குரல் மட்டும் சேவார்த்தியின் காதில் அவ்வப் போது கேட்டுக்கொண்டே இருந்தது தான். சில விஷயங்களில் நமக்கு நம்பிக்கை ஏற்படாததற்குக் காரணம், அப்படி ஒரு அனுபவம் நமக்கு ஏற்படாததுதான். இதனைக் கோல்காரர் கூறும் போது நானும் அதே நிலையில் தான் இருந்தேன். பழனி மலைக் கோயில் முருகனின் சந்நிதானம் ஆதி யில் ‘கிழக்கு திசை’ நோக்கித் தான் இருந்தது எனக் கூறியதும் திகைத்துப் போனேன்.
ஆனால் ஆலயவடிவமைப்பை உற்றுக் கவனித்தால் மட்டுமே நமக்கு நம்பிக்கை ஏற்படும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டு விடும் என்பதற்கு நானும் ஓர் உதாரணம் தான். கோல்காரர் அழைத்துச் சென்று காட்டினார். ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயத்தைக் கிழக்கு நோக்கிக் கற்பனை செய்தால், அனைத்தும் பொருந்தி வருமாறு இருப்பது தான் உண்மையும் கூட. முருகன் மேற்கு திசை நோக்கித் திரும்பிய பிறகு, மன்னர்கள் காலத்தில் மண்டபங்கள் கட்டப் பட்டிருக்கலாம்! எல்லாம் சரியாக இருந்தாலும், முருகன் மேற்குப் பக்கமாகத் திரும்பி யதற்கு வலுவான காரணம் கூறுங்கள் எனக் கோல்காரரைக் கேட்டுக் கொண்டேன்.”
“வானியல் முருகனை பழனியில் இருந்து எங்கேயோ கொண்டு சென்று விடவே, முயற்சியை மேற்கொண்டு வந்தவர்களின் எண்ணம் போலும். வித்தைகளில் மிகவும் தேர்ச்சி பெற்று, மறைப்பு வித்தைகளைக் கற்றுத் தெய்வங்களை வசப்படுத்தி விக்ரகமாகவே கொண்டு சென்றிட பெருமுயற்சி செய்ததன் காரண கர்த்தாவே பழனி வந்து சேர்ந்த மர்ம நபர், தனது ஆற்றலால், தனது உடலை காற்றில் மறையச் செய்திடும் கலையிலும் பிரபலமாக விளங்கினார். ”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.