முருகன் எனும் ஆபூர்வ ஆற்றல்!

277

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

05•07•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(370) மனிதனே புனிதன் —
முருகன் எனும் ஆபூர்வ ஆற்றல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“இறைவனே தன்னில் இருந்து பிராண சக்தியை உருவாக்கி, அந்தப் பிராண சக்தியினால் அண்ட சராச்சரங்களையும் படைத்து, சகல ஜீவித வர்கங்க ளையும், அநேக இயற்கை ஆற்றல் சக்திகளையும், அந்தந்த சக்திகளைச் செயல்படுத்தும் அபிமானி தேவதைகளையும் சிருஷ்டித்தார். தேவாதி தேவர்கள் எனப்படுபவர்கள் அனைவரும், இறைவன் கட்டளையை ஏற்று இயற்கை சக்தியை அதன் ஆற்றலைச் செயற்படுத்த இப்பூ மண்டலத் திற்கு வந்தார்கள். இறைவனின் பிராண சக்தியினால், இவ்வுலகத் தில் இங்குதான் இயற்கை
யின் ஆற்றலை, அறிவில் மேன்மை பெறும் ஜீவன்களுடன் தொடர்பை உண்டாக்கி, அதனை அறிவால் உணர்ந்து கொள்ள
ரகசியப்படுத்தி வைத்துள்ளனர். உலகத்தில் இறைவனது பிராண சக்தியால் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வரும் மனித ஜீவன்கள், மற்றும் கோடானு கோடி உயிரினங்கள் அத்தனைக் கும் தேவையான உணவுகளும், வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும், இயற்கை சக்திகளின் வாயிலாக இறைவன் வழங்கியுள்ளார். இந்த இயற்கை சக்திகளின் அற்றலை செயற்படுத்தி, உலகின் ஜீவித வர்கங்களைப் பரிபாலனம் செய்திடவேண்டும் என, இறைவன் தெய்வங்களைப் படைத்து அனுப்பி வைத்தார். அத்துடன் மனிதனின் தனது வாழ்க்கையை வளமுடைய தாகச் செய்ய வேண்டும் என்றால், அவன் இயற்கையின் ஆற்றல்களை வளமுடையதாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். மனிதன் இயற்கை யின் இயல்பு ஆற்றலுடன் இயைந்து வாழ வேண்டும் என்பதே இறைவனின் இன்றியமையா நோக்கம். இயற்கையின் ஆற்றலை மனிதன் அழித்தால், இயற்கை மனிதனை அழித்திட தெய்வீக சக்திகள் அதனைச் செயற்படுத்து வார்கள். இயற்கையைப் பேணி அதனை வாழச்செய்தால் மனித வாழ்வு மேம்பாடு அடையும். இது தெய்வீக ரகசிய உண்மை யும் ஆகும்.”

” பழனியம்பதியில் இயற்கை யுடன் இயைந்து வாழும் வாழ்வு தரும் சுப்பிரமணியமாகிய, சுத்த பிரம்மமாகிய நீல ஒளி துலங்கும் ஓம் முருகன், தன்னையே எண்ணுபவர்களுக்கு அபிமானி தேவனாக, கலியுக வரதனாக, சித்தர்களுக்கு ஞான பண்டிதனாக, ஆதிசைவ பீடமாக, மந்திர சொரூபமாய் வழிகாட்டும் வள்ளலாக, அற்புதமான மனம் கொண்டோர்க்கு இறைவனை நோக்கிச் சென்றடையும் பாதை யைக் காட்டுபவராக விளங்கி வருகிறார். நாகராஜா, என் மகனே நீ தயாராக இரு! முருகன் உனக்குத் தன்னுடைய மந்திர உபதேசப் பொருளை தனது மந்திரத் தண்டினுள் நிறைவு செய்து அளித்துக் தனது ஆதரவை உனக்குத் தருவாரப்பா. அதுவரை நான் உனக்குப் போதிப்பதைக் கவனமாகக் கற்றுவர வேண்டும். அதிசயம் அநேகம் நிறைந்துள்ள பழனி மலையில் இப்போது செல்லும் படிக்கட்டுகளில் குராவடிவேலர் சன்னதி மற்றும் இடும்பன் சன்னதி இரண்டும் அருகருகே இருந்து வருவதைக் கண்டிருப் பாய். சகல தோஷங்களையும் நீக்கச்செய்திடும் ரகசியம் இங்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் சீடர்கள் அநேகம்பேர் சூட்சுமவடிவில் இங்கு தான் தவம் செய்து கொண்டு, தங்களது குரு நாதரின் அருளைப் பெற்றுக் கொண்டும் இருக்கின்றார்கள். முருகப் பெருமானின் கட்டளையைத் தாங்கிச் சென்று, அதனை உலகம் முழுவதும் நிறை
வேற்றிடும் காரண, காரியத்தை செய்து வருகின்றார்கள். முருகன் மேற்குப் பக்கம் நின்ற கோலத்தில் காட்சி தந்து கொண்டும் உள்ளார். முருகனின் சந்நிதியின் தெற்குப் பக்கத்தில் பழைய படிக்கட்டுகள் இருந்தன. முருகனின் பாதமும் அங்கு அழகாகக் காட்சி தரும். முருகன் வஇடும்பனை, அகத்தியர் சீடனைக் தனது பக்தனாக மாற்றிக் கொண்ட சம்பவம் நடைபெற்றதும் இங்குதான்.”

” மகனே நாகராஜா உனது உறவின் முறையினர் பழனி மலைக் கோயிலில் முன்பு பணி புரிந்து வந்துள்ளனர். நீ இன்னும் சிறுவனாக இருந்த போது, அவர்கள் உன்னிடம் முருகன் தான் நிற்கும் திசை மாறிய நிகழ்வு பற்றிக் கூறியுள்ளதை, நீ ஞாபகத்தில் கொண்டு கூற வேண்டும் ” என சற்குரு நாதர் கேட்டுக் கொண்டார். “சுவாமி ஈஸ்வரா அது எனக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி என்று நடை பெற்றது என்பதெல்லாம் காலத்தால் உறுதிபடக் கூற இயலாது. கர்ணபரம்பரைக் கதை போன்று அன்று கூறப்பட்டு வந்ததைத் தான், தங்களது உத்தரவின் பேரில் உரைக்கின்றேன். பிழைகள் ஏதாவது இருப்பின் தாங்கள் பொறுத்தருள வேண்டும் ” என்று நாகராஜன் சுவாமி கூறிவிட்டு சற்குருவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். “ஆகட்டும் மகனே, இது ஆதி யில் நடந்த சம்பவம் தான். அமானுஷ்யம் சம்மந்தப் பட்ட இந்த நிகழ்விலும் ஓர் உண்மை செய்தி உலகினுக்குத் தரப்பட்டது. இங்கே அதனைக் கூறு” என சற்குரு கூறினார்.
“நம்பினால் நம்புங்கள் என்று தான் இந்த செய்தியைக் கூறியவர் கூறினார். ‘கோல்காரர்’ என்று அழைக்கப்படும் அவர் பழனி மலையில் அக்காலத்தில் பணி புரிந்து வந்தார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button