களங்கம் விலகும், கலங்க வேண்டாம்.

330

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•07•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(368) மனிதனே புனிதன் —-
களங்கம் விலகும், கலங்க வேண்டாம்.
-°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது நாகராஜன் சுவாமி தனது குருநாதருடன் இருக்கும் போது அநேக விஷயங்களை அவர் கூறும் பாட போதனைகளை நன்கு மனதில் வாங்கிப் பதிய வைத்துக் கொள்வார். அவர் கூறும் பரிகாரங்கள் அபூர்வமான விஷயங்களாக இருந்தது. ஒன்றை உறுதிபடக் கூறினார். அது, “நன்மை, தீமை இரண்டும் உள்ள உலகில் தீமை சக்திகள் எப்போதும் நன்மை சக்திகளை எதிர்த்தே வருகின்றன. நன்மை சக்திகள் போராட வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டு விடுகின்றன. யாரெல்லாம் நமது செயல்களுக்கு எதிர்ப்பைக் காட்டி வருகின்றனரோ, அவர்களை நாமும் வெறுக்கக் கூடாது. இதோ, இதுதான் தீமையின் இருப்பிடம் என்று நமக்குச் சுட்டிக்காட்டி அறிவுறுத் திடும் தீமையாளனும் நமக்கு வழிகாட்டி தான். அதனால் நாம் தீமையாளர்களை அறிந்து, உணர்ந்து கொண்டு, அவர்களைத் தவிர்த்திட, அவர்கள் நம்மை விட்டு விலகிச் சென்று விடப் பிரார்த்தனை செய்ய முடிகிறது அல்லவா? மகான்களின் தவத்தாலும், இறை சக்தியின் அருளாலும் மட்டுமே இயற்கை யின் உண்மைகள் பெறப்படுகின் றன. இறைவன் அருளியுள்ள அனைத்தின் உண்மைப் பொருளை, மனிதன் தனது கல்வி அறிவினாலோ, தனது புலமையினாலோ, தனது திறமையினாலோ, இறை சக்தியின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ள முடியாது. இதனை அறிந்து கொள்ள விரும் பினால், குருநாதர் கூறும் உபதேசங்களை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, முதலில் பிரார்த்தனையில் ஜெபத்துடன் ஈடுபட்டு விட வேண்டும். பிறகு குருகாட்டிய உண்மையான வழியில், சாதனையில் ஈடுபட வேண்டும். இதனால் உண்டாகும் மனத்தூய்மையினால் இறை அருளை நெருங்கி விட முடியும். மீண்டும் மீண்டும் ஜெபம் செய்து, அதன் பொருளை ஆழ்ந்து சிந்தித் துப் பிறகு சாதனையாகிய தவத்தில் ஈடுபட்டு வந்தால் தான் தன்னுள்ளே உண்மை களை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.”

“மனிதன் எந்தவொரு செயலினைச் செய்தாலும், அதற்கான மன நிலையை வரவழைத்துக் கொண்டு, அச்செயலைச் செய்தால் நல்ல, சிறப்பான பலனைப் பெற்று விட முடியும். உயர்ந்த வாழ்க்கையை வாழ விரும்பினால் உள்ளும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும். தவிர சிந்தனையும், பேச்சும், செயலும் ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். மனதினில் இறை சிந்தனை துலங்கும் . நமது எண்ணமும், பேச்சும் இறைவன் அருளைக் கொணர்ந்து தரும். குரு நாதனிடம் கேட்கப்பட்ட உபதேசங்கள் உள்ளத்தை விட்டு நீங்காது இருக்கும். அதுவே உள்ளத்தில் எந்நேரமும் சிந்தனையாக இருந்து வரும். பேச்சில் உண்மை துலங்கும். மகனே, நாகராஜா உனது நிலை தற்போது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. நீ எதை நினைத்துப் கலக்கம் அடைந்திடத் தேவை இராது. உன்மீது சுமத்தப்பட்ட களங்கம் அகன்று விடும். எனது நண்பர் ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி தரிசனம், உனக்குக் கிடைத்தது அல்லவா? நீயே சொல், உனக்கு இன்னல் விளைவிப்பவர்கள் அனைவருக்கும் தண்டனைகள் வழங்கலாமா?” என்று கேட்டு விட்டு நமது சுவாமியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அதற்கு நமது சுவாமி அவர்கள் பதில் கூறினார்கள். ” ஐயனே, குற்றம் இழைப்பது தவறு என்று எண்ணி யாரும் செயல்படுவது இல்லை. அதன் காரணமும் எனக்குப் புரிய வில்லை. நாம் மன்னிப்பு அளித்தால், அபிமானி தேவதைகள் மன்னிப்பைத் தருவார். இயற்கையின் இயல்பு இதனால் பாதிப்பை அடையுமா? என்று தாங்கள் தான் விளக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு சற்குரு நாதர், “மகனே ‘திரு’ பெருமகிழ்வு கொண்டதடா. உன்னைப் போன்ற சீடனால் குருவினுக்கு மரியாதை மட்டுமல்ல, பாதுகாப்பு சங்கல்பமும் கிடைக்குமடா, வாழி வாழி ” என வாழ்த்தினார்.

எங்களுக்குத் தெரிந்த வரை நமது நாகராஜன் சுவாமி அவர்கள் தன்னைப் பற்றி எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், மறைந்து உறைவதில் கவனம் செலுத்தி வந்தவர். எந்த போதனைகளை யும் தான் கூறுவதாகச் சொல்ல மாட்டார். மகான்கள் இந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கின் றார்கள் என்பார். இனி சற்குரு வின் கருத்துக்கள் பற்றி கவனிப் போம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button