எம்மை இயக்கும் இறைவா வாழி!

177

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•07•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(366) மனிதனே புனிதன் —
எம்மை இயக்கும் இறைவா வாழி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவன் சகல ஜீவர்களுக்கும் உள்ளே இருந்து கொண்டு, அங்கு உள்ள இதய வெளியில் ஒளிப் பிரகாசமாய் சுடர்ந்து கொண்டு, ஆத்மாவில் நிலை பெற்றுள் ளார். மனிதனுக்கு ஆறறிவில் பகுந்தறியும் ஆற்றலை தந்து வாழ வைத்துக் கொண்டும் இருக்கிறார். உடலையும், உயிரையும் பாதுகாக்க இறை வன் நல்ல உணவாகவும் உள்ளார். மூச்சுத் காற்றில் பிராண சக்தியாக இருந்து ஆற்ற லைத் தருவதும் இறைவனே. கண்களில் வழியாக இருந்து நல்லவற்றைக் காணச் செய்வ தும் இறைவனே. காதுகளில் கேட்கும் சக்தியாக இருந்து கொண்டு நல்லவற்றைக் கேட்கச் செய்து கொண்டிருப்பதும் இறை வனே. மனதிலும் இருந்து கொண்டு இறை சிந்தனையைத் தந்து கொண்டிருப்பதும் இறை வனே. பேச்சின் ஒலியாக வெளிப்பட்டு நல்லனவற்றைப் பேசவைப்பதும் இறைவனே. இறைவனிடம் இருந்தே சகல உயிரினங்கள் அனைத்தும் தோன்றுகின்றன. பிறப்பினுக்கு வந்த அனைத்து ஜீவன்களும் இறைவனால் வாழ்கின்றன. எல்லா ஜீவராசிகளும் மரணத் திற்குப் பிறகு இறைவனிடமே ஒடுங்குகின்றன. அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறை வனிடம் இருந்தே அனைத்தும் தோன்றி, வாழ்ந்து, இறைவனு டன் சென்று சேர்கின்ற உண்மை யை அறிந்து கொள்ள இடை விடாத இறை சிந்தனை என்னும் தியானம் அல்லது புவன்களைக் கட்டுப்டுத்தி தவம் செய்திட வேண்டும்.

தவத்தின் மூலமாக இறைவனை எண்ணிச் செய்யப்படுகின்ற அனைத்து முயற்சிகளுக்கும், அரிதானவற்றைச் சாதிக்கின்ற செயலுக்கும், இறைவன் அருளே துணை செய்கிறது. எல்லா உண்மைகளும் மனிதனுள் இறைவனால் வைக்கப்பட்டுள்ள தை அறிந்து கொண்டு, மனதை யும், ஐம்புலன்களையும் வசப் படுத்திக்கொண்டு, தனக்குள்ளே யே ஆழ்ந்து கவனித்து வந்தால், மனிதனைப் பற்றிய, பிரபஞ்சங் களைப் பற்றிய, இறைவனைப் பற்றிய அனைத்து உண்மை களையும் அறிந்து கொள்ள, இறை அருளால் உதவும் வழி வகை தான் தவம் எனப்படுகிறது. இறைவனை எண்ணி தவம் செய்பவர்கள் படிப்படியாக உண்மையை அறிந்து கொள்ள முடியும். காரணம் இறைவனே தவமாகவும் இருக்கின்றார். இறைவனை அறிந்து கொள்ளும் குறிக்கோள் நம்மை மிகவும் ஈர்ப்பதாகவே உள்ளது. ஆனால் அதனை அடைவதற்கான வழி வகைகள், அதற்குண்டான செயற்பாடுகள், ஒழுங்கு முறை கள், இவைகளில் கவனத்தைச் செலுத்துவதற்கு பதிலாக மனதில் தயக்கம் கொண்டு, செயற் பாட்டை எண்ணிடாமல் விட்டு விடுகிறோம். முயற்சியே திரு வினையாக்கும். மேலும் வேதக் கருத்துக்களில் இறைவன் கூறியுள்ள முக்கியமானது என்று கூறப்படுவது, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களை யும் படைக்கும் போது, அவைக ளில் நன்மை, தீமைகளை விளைவிக்கும் வல்லமை உடையதாகவே இறைவனால் உண்டாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நல்லவனவற்றை, சிறப்பானவற்றை,எடுத்துக் கொள்ளப் பழகி வரவேண்டும். மனித சமுதாயத்தில் இறைவ னால் படைக்கப் பட்ட இயற்கை யின் இயல்புகளில் நல்ல பகுதி யை மட்டும் ஏற்றுக்கொண்டு வளர் வதற்கான முயற்சியை மேற் கொள்ள வேண்டும். அதனால் மட்டுமே இறைவனது மகிமைகள் வெளிப்படும். சகல செளபாக்கியங்கள் நிறைந்து விளங்கும் இறைவனுடைய மகிமை வெளிப்படும் விதமாகச் சிறப்பாக வாழ்ந்து, சமுதாயம் கடைப் பிடித்து வரும் வழிவகை களில் நல்லனவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, வளர்ந்து வரும் விதமாக தெய்வீக சிந்தனையுடன் வாழும் வாழ்க்கையே சிறந்ததென, இறைசக்தியை அறிந்து, உணர்ந்து, அனுபவத்தில் தெளிந்து வாழ்ந்த ஞானியர் களின் கூற்றாகும்.

பராபரமாகிய இறைவனே சகல வற்றிற்கும் ஆதாரமானவனாகப் போற்றி வாழப் பழக வேண்டும். இறை வனைப் போற்றுபவன் தன்னுள் நிலை பெற்று வளர்கி றான். இறைவன் மகிமையைப் போற்று பவன் உலகில் மகிமை பெற்றுச் சிறப்படைகிறான். இறைவனையே சிந்திப்பவன் சிந்தனா சக்தி பெற்று மிளிர்கி றான். இறை வனை விரும்பு கின்றவனை அனைத்து ஆசைகளும் வந்து அடி பணி கின்றன. இறைவனைத் தலைவ ராகப் போற்றுபவனே சமுதாயத் தில் தலைமை வகிக்கும் பொறுப்பை அடைகிறான். இறைவனை அழிக்கும் சக்தி யாகப் போற்றித் துதிப்பவனை, தன்னைச் சூழ வரும் எதிரிகளும், தன்னை வெறுப்பவர்களும், விரும்பாதவர்களும், தீயவர் களும், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும்படி இறைவனே செய்கிறான். எங்கும் நிறைந்து தன்னுள்ளும் இறைவன் நிறைந்து இருப்பதை அறிந்து கொண்டு போற்றுபவன், உலக உணர்வுகளில் இருந்து விடுபடும் போது, தனது உடலை கடந்து சென்று, விரும்பிய வடிவம் பெற்று, விரும்பிய உலகங்களில் ஆனந்தமாக வாழ இறைவன் அருள் புரிகிறார். புனிதம் மிகு வேதம் கூறுவது எல்லாம் இறைவன் கூறுவதா கும். மேலும் இறைவனே உணவு, இறைவனே உணவை உண்பவர், வேதத்தை உருவாக்கியவர் இறைவன். படைப்பில் முதலில் தோன்றிய வர் இறைவன். அனைவருக்கும் முன்னால் அழிவற்றவராக இருப்பவர் இறைவன்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button