வாழ்க்கை வாழப்பட வேண்டும்!

161

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•06•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(357) மனிதனே புனிதன் —
வாழ்க்கை வாழப்பட வேண்டும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனுடைய ஆளுமை ஆற்றல் சக்தியை வளப்படுத்திக் கொள்ளவும், அதனைச் செயல் படுத்தப்படும் முன்பாக தியானத்தின் உண்மையான பரிமாணங்களை உணர்ந்து கொண்டு, அதற்கு உரிய ஆயத்தங்களைச் செய்து பிறகு அதில் ஈடுபடவேண்டும் என்பதே நமது ஞானியரின் அறிவுரை. இந்தச் சிந்தனைகளில் ஆழ்ந்து வெற்றி பெறுபவர்கள், உண்மை யாக தியானம் செய்யும் தகுதி யைப் பெற்று அதில் வல்லவர் கள் ஆகி விடுகிறார்கள். இவர்கள் தான் உலகத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் வாழ்வது எப்படி என்பது பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். அதன் பிறகு மனிதன் என்பவன் யார்? எதற்காக வாழ்கிறோம்? நமது சமுதாயக் கடமைகள் எவை? என்பன பற்றியும் அறிந்து கொள்ளத் தியானம் துணை செய்கிறது. மேலும் அறிவு விருத்தியைத் தருவதுடன், இறைவனின் எண்ணத்துடன் வாழ்வது, சந்தோஷத்துடன் இல்லறத்தில் அனுபவித்து நிறைவுடன், வளமாக வாழும் வழிகள் அனைத்தையும் உணரச் செய்கிறது. இதனால் அநேக நன்மைகள் வாழ்வில்ஏற்படுகின் றன. வாழும் வாழ்க்கையை வெறுத்து விடாதே; வாழ்க்கை யில் இருந்து விலகி ஒடி விடாதே என்பதுதான் நமது முன்னோர் கூறிய அறிவுரைகள். அது மாத்திரமல்லாமல் மனிதன் வளமான வாழ்க்கை வாழ்தல் என்பதே, இறைசக்தியின் அருள் மகிமை அங்கே வெளிப்படுகிறது என்பதும் ஞானியர் மூலம் இறைவன் மனித குலத்திற்கு தந்த செய்தியுமதுவே ஆகும். பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்து, சாதனை வாழ்வில் ஈடுபட்டு வந்தால் மனததூய்மை உண்டாகும். மனதிலுண்ணி இறையருளை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றிட இயலும். இப்படி சாதனை புரிந்து முன்னேற்றம் அடையும் அன்பருக்கு இறையருள் செய்தி யின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாகப் புரிய வரும். அவை அற்புதம் என்று அதனை ஆழ்ந்து உணர்ந்து, அறிந்து, மனம் மகிழ்ந்த சான்றோர்கள் அதனை உறுதி செய்திருக்கின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு உண்பதற்கு உணவு, உடுத்துக் கொள்ள நல்ல உடைகள், தங்கிக் கொள்ள வாய்ப்பான ஓரிடமும் தான் அடிப்படைத் தேவை. இவை மூன்றும் கிடைக்கப் பெற்றவு டன் மனிதனுக்குத் திருப்தி ஏற்பட்டு விடுவதில்லை. இப்போது அவனுக்கு அன்பு தேவை. அடுத்தது அறிவு தேவையாக இருப்பதனால் கல்வி கற்க முனைகிறான். கல்வியறிவு பெறுவதனால் அவனது வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என எண்ணுகி றான். இவைகள் கிடைக்கும் சந்தர்ப்பம் வாய்ந்தவுடன் அவன் பிறரை விட ஆற்றல் பெற்றவ னாக மாற விரும்புகிறான். அதற்காகத் தன் முயற்சியில் ஈடுபாடு உண்டாகி செயல்பட்டுக் தனது ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான். இவைகள் அனைத்தும் பெற்ற மனிதனுள் இன்னும் தேவையின் ஏக்கம் வந்து விடுகின்றது. மனம் இனி இன்பத்தை நாடுகிறது. இன்ப சுகத்தைப் பெற்று அனுபவித்து விட்ட மனம், பாவம், புண்ணியம் இவற்றை எண்ணி, தன்னைக் காக்க இறைவனை அன்றி வேறு கதி தனக்கில்லை என்று மரணத்தின் பயத்தால் கூவி அழைக்கின்றான் “என்னைக் காப்பாற்று” என்று. இந்த மரண பயத்தை மாற்றவும், இறைவனே தனது பந்தம் என்றும் காக்கும் துணை என்று எண்ணவும் நமது ஞானியர்கள் மனதிற்கு வலிமை யை ஊட்டும் வாழ்க்கைக் கல்வி முறையை, தகுந்த குருநாதனி டம் கற்றுக் கொள்ளும் “குரு குலக்கல்வி” என்னும் திட்டத் தில் சகல கலைகளிலும் வல்லவனாகத் திகழும் படி செய்தனர். அத்தகைய வலிமை, ஆற்றல், அறிவு, வித்தைகள், இறையருள் தன்மை உடைய ஞான குருமார்களுக்கு குரு ஈஸ்வராலயம், மெய்யன்பர்கள் தங்களது சிரம் தாழ்ந்த வணக்கத் தையும், நன்றியறிதல்களையும் தெரியப்படுத்துகிறார்கள். நன்றி.

நமது சுவாமி அவர்களுக்கு அற்புதமான, தனது வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட நல்ல குருநாதர் கிடைக்கப் பெற்றதும் குரு நாதரின் ஆசியும், இறைவ னின் கருணையும் தான் என கண்கள் பணிக்க நன்றி கூறும் பாங்கும் வரவேற்கத் தக்கதே! சற்குருநாதர் கல்வி அறிவு பற்றி மேலும் கூறுகையில் அது புத்தகப்படிப்பு மாத்திரம் அல்ல; பல்வேறு வகையான விஷயங் களை நமக்குக் கொணர்ந்து சேர்ப்பதுமல்ல! தகவல் சுரங்கம் எனப்படுவதுமல்ல! அறிவைத் தேடிக் கொண்டு விடுவதுமல்ல! ஞானியர்கள் கூறி வரும் வாழ்க்கைக் கல்வி என்பது அது மனிதனைச் சரியான முறையில் சிந்தனையைத் தூண்டி, சிந்திக் கச் செய்வது. திறமை மிக்க ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வது. பிறகு வெளிப்படுகிற சக்தியின் போக்கையே ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரச் செய்து, வாழ்க்கைக்கும் பயனளிக்கச் செய்திடச் செய்யும் ஒருவகை வித்தை அல்லது பயிற்சி என்றும் ஞானநிலை முதிர்வு பெற்றோரின் கூற்று ஆகும். மிகச் சிறந்த எதையும் மனிதன் சாதிப்பதற்குப் பணிவு டன் கூடிய பிரார்த்தனை தேவை. அதனால் நமது முயற்சி யின் பாதை சுலபமாகிறது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button