ஸ்ரீ வாலை சக்தி உபாசனை

297

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•06•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(356) மனிதனே புனிதன் —
ஸ்ரீ வாலை சக்தி உபாசனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனித மனமானது மதயானை யைப் போன்று தன்நிலை தவறும் போது, பேராசை எனும்
வாழ்வில் மீளாத் துன்பத்தில் வீழ்ந்து படுகிறது. அதனை ஞான உபதேசம் என்ற அறிவின் பக்குவத்தால் அடக்கி ஆளும் தன்மைக்கு செயல் படுத்தப்படும் போது தான், ஒழுக்கமான வாழ்வின் இயல்புக்கு ஏற்ற மாதிரி, இறை நம்பிக்கையுடன் அது பயணிக்கிறது. நமது சுவாமியின் மனப் பக்குவதற்கு அநேக வழிமுறைகள் காட்டி அத்துடன் வழி நடத்தியும் வந்தார். மனிதனின் மனம் ஒரு க்ஷ்ண நேரம் கூட இடைவெளி விடாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நன்கு கவனித்துப் பார்த்தால் மனம் பலவகையான பொருட்களைக் பற்றியும் அது சிந்திக்கின்றது. இதற்காக மனம் எந்த விதத்திலும் சிரமப்படாமல் சிந்தனை செய்வதில் சலிப்பது கிடையாது. ஆனால் மனதிற்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளைத் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும், அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். அது அத்தனை சுலபமானது அல்ல என்பது நமக்குத் தெரிய வரும். காரணம் மனம் ஒருங்கிணைக் கப்படாமல் இருப்பது தான். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நல்ல கருத்து இதனை எடுத்துக் கொண்டு, அதனுடைய பல்வேறு சிறப்பு அம்சங்களை அடிக்கடி தொடர்ந்து சிந்தித்து வருவோமே யானால், மனமானது ஒரு ஈர்ப்பு வட்டத்தினுள் சுழலும்படி செய்து அதனை ஒருங்கிணைத்துவிட முடியும் என வேதசாரத்தின் உண்மையை எடுத்துரைத்தார்.

நாம் ஒன்றை எண்ணி ஜெபம் அல்லது தியானம் செய்வது அனைத்துமே மனதிற்குத் தரப் படும் பயிற்சிகள் என அறிவுறுத் தப்படுகின்றன. மனம் சம்பந்தப் பட்ட இந்த தியானம், ஜெபம் செய்ய மெய்யன்பர் ஆசனத்தில் அமர்ந்ததும் உடனடியாக உணரும் உண்மை ஒன்று உணடு. மனதினுள் பல்வேறு வகையான காட்சிகள் என துண்டுதுண்டாக அங்கே சிதறிக் கிடப்பதைக் காண முடியும். பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருக்கும் மனதை ஒன்று திரட்டி ஒன்றாகக் குவிக்க வேண்டும் என்பதே உண்மை நிலை. முதலில் ஈர்ப்பு வட்டத்தினுள் சுழன்ற மனம் பிறகு ஒத்த சிந்தனையில் ஒன்று குவியத் துவங்கி விடுகிறது. இப்போது நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்பது என்னென்ன என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி நேர்மறையாகச் சிந்திக்க நமது முன்னோர்களாகிய ஞானி யர்கள் சில வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் முக்கியமானவைகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் நாம் நமது வாழ்வை “நான்”, “எனது” என்ற குறுகிய வட்டத்
தின் உள்ளேயேதான் அடக்கி விடுகிறோம். தொழில், குடும்பம், உறவு, நட்பு என்ற வட்டத்துக்குள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டு வாழ்கிறோம் என்பது மகான்களின் கருத்து. அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்தால் தான், நாம் நம்மைச் சுற்றிலும் உள்ள பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ள முடியும். எல்லையில்லா அழகுடனும், இனிமையுடனும் விளங்கி, விரிந்து, பரந்த பிரபஞ்சத்தைக் காண முடியும். கண்டு சிந்திக்க முடியும். வாழும் வாழ்க்கையை ரசிக்கவும் அதனை அனுபவித்து வாழவும் முடியும்.

மனிதன் இயற்கையையும் இந்த உலகத்தையும் வெறுத்து ஒதுங்க வேண்டியதில்லை. இயற்கை யின் மகிமையைப்பற்றிச் சிந்திக்க விழைவதே சிறந்த ஆன்மிக சாதனை என்றே நம்பிக்கையுடன் கூறப்படுகிறது. மன ஒருமைப் பாட்டை வளர்த்துக் கொண்டால் அதன் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்பதே உண்மையான கருத்து. மன ஒருமைப்பாடு என்னும் சிறந்த கருவியினால், நாம் விருப்பப்படும் எல்லாத் தகவல்களையும் சேகரித்துக் கொள்ள முடியும். மனம் குவியும் ஒருமைப்பாட்டை அறியாத மனிதனின் எண்ணத் தினுடைய ஆற்றல்கள் எல்லாம் அனேகமாக வீணாகி விடுகின் றன. எண்ணசக்திகள் விரையம் ஆவதால்தான் மனிதன் அடிக்கடி தவறுகள் செய்கின்றான். மன ஒருமைப்பாடு பயிற்சியை உடைய மனிதன் மனம் தவறு கள் செய்யாத காரணத்தினால் மனம் ஒருமுகப்பட்டுத் தன்னுள்ளே திரும்பும் போது, மனிதனுள் உள்ள எல்லாமே அவனது கட்டுப்பாட்டினுள் வந்து விடுகின்றன. மனிதன் சாதனை யாளனாக மாறிவிடுகின்றான். இந்த சாதனையைச் சிறுகச் சிறுகப் பயின்று, மனதை ஆரம்பத்தில் சிறிய எல்லைக்குள்
கட்டுப்படுத்திட வேண்டும் என நினைவில் கொள்வது அவசியம். இப்படியான விஷயங்களை நம் மனதில் பதியுமாறு வேதத்தின் வாயிலாகவே அன்று நமது அறிவாளிகளான முன்னோர்கள் வழிகாட்டிகளாகவும் விளங்கி வந்துள்ளனர். நமது சற்குரு நாதர் சற்று நிதானமாக மேலும் கூறினார், தியானம் எனப்படுவது நமது ஆளுமைப்பகுதியின் எல்லா இடங்களிலும் செயல் பட்டு, மனிதனை இறைவனு
டைய முழு அருளுக்கும் தகுதி
யுடையவனாக ஆக்கும் சிறந்த சாதனமாகும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button