ஸ்ரீ கொடுங்கல்லூர் பகவதி.

210

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•06•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(354) மனிதனே புனிதன் —
ஸ்ரீ கொடுங்கல்லூர் பகவதி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அதிகாலை நான்கு மணிக்கு சுவாமியின் கிராம வீட்டில் பாட்டியின் குரல் கேட்டு கண் விழித்தவரின் மெளனவிரதம் தொடர்ந்து இருந்து வர வேண்டும் என நியதி இருந்த தால் பேசுவதற்குத்தான் சுவாமி யினால் இயலவில்லை. பாட்டி அவர்கள் தொடர்ந்து மெளன விரதம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வீட்டில் உள்ளோர் மெளனவிரத காலத் தில் படும்பாடு இருக்கிறதே, அது சொல்லி மாளாது. சாலைப்புதூர் என்று அழைக்கப்படும் நஞ்சே கவண்டன் புதூரில் செல்ல முத்துக் கவுண்டர் என்பவர் இருந்தார். சற்று பெண்மையின் சாயல் நடக்கும் போது மட்டுமே தென்படும். அன்பும் மரியாதை யும் உடையவர். அவர் வரும் போதெல்லாம் கற்பக விருட்சப் பால் அருந்தினால் உடல் ஆரோக்கியம் என்றும் நீடிக்கும் என்பது அவர் தரப்பு வாதம். இந்த விவாதமேடை பல பேர் கூடிக் கருத்துகள் பரிமாறிக் கொள்வ தாக ஆரம்பித்து நடந்து வந்தது. சுவாமியின் மெளன விரதம் நல்ல படியாக நடந்து முடிந்த பிறகு சுவாமியின் தாயாரிடம் அனுமதி பெற்று அவ்வூரில் நடை பெறும் பண்டிகை க்கு விருந்துண்ண அழைத்துப் போனார். இது சுவாமிக்கு வந்த சோதனைக் காலம் என்று சொன்னால் மிகையாகாது.

விருந்தினரைக் கெளரவித்து, உபசரித்து அன்புடன் உணவளித்து அவர்கள் சந்தோஷம் கொள்ளும் நிலையும் உண்டு என்பதற்கு அக் குடும்பத்தினர் முன்னுதாரணம். அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு வந்தவு டன், ஒரு தட்டில் முற்றிய தேங்காய்த்துண்டுகள் மற்றும் பனங்கருப்பட்டி ஒரு பெரிய அச்சும் தரப்படுகிறது. குடும்பத் தினர் எல்லோரும் அதனை உண்ணுகிறார்கள். பிறகு விவசாயப் பணிகள் மற்றும் பசு பராமரிப்பு வேலைகள் துவங்கி விடுகிறது. கறந்த பால் அத்தனையும் அவரது தாயாரி டம் ஒப்படைக்கப் படுகிறது. பணம் வரவு செலவு அனைத்தும் தாயார் தான். அதிகாலையில் அந்த உணவு கடின உழைப்பாளி களுக்குப் பொருந்தும். நமது சுவாமி அவர்களுக்கு நெஞ்சைக் கரித்துக் கொண்டு வருவதைப் போன்று உணர்ந்தார். ஊர் அருகேயுள்ள அவர்கள் தோட்டத் திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கிக் கள்ளுக் கடைகளுக்கு கொண்டு செல்லத் தயார் நிலையில் இருந்தது. சைக்கிளில் வந்து கேன்களில் ஊற்றி எடுத்துப் போனார்கள். கள் இறக்கும் சாணார்ஐயா செல்லமுத்துவை தனியாக இருக்கும் பனைமரம் அருகே கூட்டிப் போனார். அவரது சொந்தக்காரர் ஒருவரும் வந்திருந்தார். நமது சுவாமியைப் பார்த்ததும் சங்கோஷப்பட்டார். அதிகாலையில் உண்ட தேங்காய் கருப்பட்டி ஒவ்வாமையினால் சுவாமிக்கு வாந்தி வர நீரோடும் வாய்க்கால் அருகே உட்கார்ந்து விட்டார். அங்கு காணும் சூழல் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள சுவாமி விரும்பாததால் அங்கே யிருந்து வீட்டிற்குப் புறப்பட்டு வந்து விட்டார்.

வரும் வழியில் குட்டிப்பாலம் மீது சன்னியாசி ஒருவர் அமர்ந்து இருந்தார். நமது சுவாமியைப் பார்த்து விட்டு, “நலமா?” என்றார். நமது சுவாமி அவருக்கு வணக்கம் தெரிவித்தார். கேரளாவில் கொடுங்கல்லூர் பகவதியை வழி பட்டு வரும் அவர், பழனி மலை செல்லப் பாதையாத்திரையாகப் புறப்பட்டு வந்தவர். சுவாமியின் கிராமத் தின் எல்லைக்கு வெளியே, பெரிய குட்டிப்பாலம் மீது தெற்கு நோக்கி அமர்ந்து அங்குள்ள ஆசாரிபட்டறையைக் கவனித் துக் கொண்டிருந்தவர், நமது சுவாமிக்கு முகமன் கூறி நலமா? என்றார். சுவாமியை அருகில் அமரவைத்து விட்டு, “நான் உங்களுக்காகத்தான் இங்கு காத்துக் கொண்டிருக்கி றேன். இங்கு தேவி அமற ஏற்ற இடம் கூற வேண்டும் “என்றார். நமது சுவாமி, ” ஐயா தங்களுக்கு என்னைப் பற்றி எப்படித் தெரியும்?” என்று வினவினார். அதற்கு அவர், ” பிரஸன்னத்தில் தேவியின் வாக்கு அது” என்றார். “ஆகட்டும் சிருஷ்டிக்கும் தேவிக்கு இங்கேயே அமைவது உத்தமம். நான் வருகிறேன் ஐயா” என்று கூறி நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்து விட்டு வீடு திரும்பினார். நமது சுவாமிக்கு இது சோதனை காலம் எனக் கூறியிருந்தேன். வாழ்க்கையில் நல்லது, தீயது என்ற பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். நாம் எல்லா விஷயங்களையும் வெளிப்படை யாகக் கூறத் தயங்குவோம் அல்லது கூறமாட்டோம். ஆனால் நமது சுவாமி அவர்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல. அவர் வெளிப்படையாக வே பேசுவார். ஆரம்பத்தில் அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது அவர் கவலைகள் இல்லாத, கவலையேபடாத ஓர் புனித ஆத்மா எனப் புரிந்து கொண்டோம். சுவாமியின் மெளன விரத காலத்தில் கூட தம்பனவசியனின் குடும்பம் செய்த இன்னல்கள் சொல்லி மாளாது. அவர்கள் எண்ணப்படி உள்ள பெண்களைக் கொண்டு நமது சுவாமியின் குடும்பத்தில் அவப் பெயரை உருவாக்கிட திட்டங்கள் போட்டு செயல் படுத்தினார்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button