என்னையும் அழைத்துப் போங்கள்!

214

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•06•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(351) மனிதனே புனிதன் —
என்னையும் அழைத்துப் போங்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சத்து, சித்து, ஆனந்தமயமாக விளங்குபவரும், மறை பொருளாய் விளங்கும் உண்மையை அறிந்து, உணர்ந்து, தெளிந்திடச் செய்திடும் அறிவுப் பொருளாம் மெய்ஞானம் உடையவரும், திருவடிகள் எனப்படும் சுவாசகலைகளில் பேரின்பமாகிய ஆனந்த நிலை தந்தருள்பவரும் ஆகிய சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் மேலும் கூறினார், ” உலக மக்கள் கண்களுக்குப் பித்தன் போன்று காட்சி தரும் அவர்களால் மற்றவர்களுக்கு எவ்விதத் துன்பங்களும் ஏற்படாது. அவர்கள் பித்தன் போன்ற தோற்றத்தில் அதிசயம் அநேகம் நிறைந்த பழனியம் பதியில் கிரிவலம் வந்த வண்ண மாக இருப்பார்கள். யாரிடத்தி லும், எதுவும் யாசகம் பெற மாட்டார்கள். பசி வந்த போது இவர்கள் பழனி மலையில் கிடைக்கும் மூலிகையை உண்டு பசியாற்றிக் கொள்வார்கள். இவர்களது எண்ணம், சொல், செயல் அனைத்தும், எது
உள்ளதாய்(உண்மை – சத்து) உள்ளதோ; எது விளங்குவதாய் (அறிவு – சித்து) உள்ளதோ; இவை இரண்டும் சேர்ந்தால் எது திருவடி தீட்சை(பிராணாயாமம் ஆகிய சுவாசக்கலை) என்னும் இடைவிடாது நிரம்பும் பேரின்பம் நல்குகின்றதோ அந்தப் பரம் பொருளை முருகனைச் சித்தத்தில் உண்ணியவர்களாக வலம் வந்து கொண்டி ருப்பார்கள். இவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்துச் சென்றிட மாலைக்குள் இருந்து யாராவது ஒருவர் வெளிப்படுவர்.”

“மலையினுள் தவம்பரிபவர்கள் இயற்கையின் இயல்பு குணங்க ளை அடைந்தவர்களாக முருகனின் ஆற்றலாய் ஒளிர் வார்கள். உலகில் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட, அனைத்தையும் தனது வயமாக்கும் சுதந்திரத்தைப் பெற்றுத் தனித்தன்மையுடன் முருகனாய் விளங்குவார்கள். இவர்கள் சரீரத்தைப் பரிசுத்தத் துடன் வைத்திருக்கும் முருகனே ஆவர். இறைவனுடைய உணர்வு நிலையில் என்றுமே முருகனாக இருப்பவர்கள். சகலத்தையும் முருகனாகவே உணர்ந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் பந்த பாசங்களில் இருந்து நீங்கி இறை நேசம் கொண்டு முருக னாக விளங்குபவர்கள். அருள் சக்தியைத் தவத்தினால் பெற்று அதனைப் பேரருள் முருக சக்தியாக உருவாக்கிக் கொள்பவர்கள். முடிவேயில்லாத ஆற்றல் சக்தியாக முருகனாக உருவெடுத்து இருப்பவர்கள். அளவில்லாப் பேரானந்தத்தை அடைந்து இறை சக்தியுடன் முருகனாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இத்தகைய நிலையை அடைந்து மற்றவர்களுக்கும், முருகா என்று அழைப்பவர்களுக்கும் அருள் தருபவர்களாக நிறைந்து வீற்றிருந்து வாழ்விப்பவர்கள்.”

“முருக சக்தியாகவே வாழும் இவர்கள் தேர்ந்தெடுத்த தகுதியுள்ள சக்தி பெற்றவர்கள், கிரிவலம் வந்து, “முருகா” என்று சிந்திக்கும் அந்த உத்தமர்களைச் சோதனை செய்து பார்த்து உறுதி செய்வார்கள். உள்ளே வரும் புதிய நபர்களை வரவேற்றுப் தங்கவைத்துப் பயிற்சிகள் அளிக்கும் தனிப்பிரிவு உண்டு. இவர்களுக்கு ஒருவேளை உணவாக மூலிகைகள் கலந்த வேக வைக்கப்பட்ட பாசிப்பயறு கொடுக்கப்படுகிறது. இது உடலைப் பக்குவப் படுத்தவும், மற்றும் யோகங்கள் பயிலவும் உதவுகிறது. மற்ற நேரங்களில் சமாதி யோகப் பயிற்சிகள் தான். காற்றில் இருந்து உணவைப் பிரித்து எடுக்கும் சுவாசகலைப் பயிற்சியில் கூர்மநாடியில் இருந்து சந்திரகலைக்கும், அங்கேயிருந்து சூரியகலைக் கும், சூரிய கலையில் இருந்து கூர்மநாடிக்கும், மீண்டும் அங்கேயிருந்து சூரியகலைக்கும், அங்கிருந்து சந்திரகலைக்கும், மூச்சைச் செலுத்தி சந்திரகலை யில் இருந்து அண்ட உச்சியாகிய இடத்தில் கும்பித்தலாகும். அகார உகார சிகாரத்தில் கிரியா யோகம் கற்றுத் தேறுகிறார்கள். உலகின் மிகவும் சிறந்த ஆசான்கள் அங்கே கற்றுத் தருகின்றார்கள்.”

“மூச்சை முதலில் கண்டத்தில் “அங்” என்று அழுத்தி சப்தமாக இழுத்துக் கொண்டே இடது கண் பொட்டில் “அம்” என்று சந்திர கலையில் தாக்கிப் பிறகு அதனை “உம்” என்று சூரிய கலையில் வாங்கி, மீண்டும் கண்டத்தில் “உங்” என்று ஏகி மீண்டும் சூரியனில் “உம்” என்று தாக்கி, பிறகு “அம்” என்று சந்திர னில் தாக்கி அண்டமேவி “சிங்” என்று கும்பிக்கவும். இதனைக் கற்றுக் கொள்ளும் பரிசுத்தர்கள் மிகவும் சுலபமாக ஞானக் கனியை அடைந்து வாழ்வாங்கு வாழ்கின்றார்கள். அனைத்தை யும் அறிந்து, உணர்ந்து, அடைந்து, அனுபவிக்கும் இறைவனின் அறிவு துலங்கிடும் நிர்விகல்ப சமாதி யோகத்தைப் பெற்று விடுகின்றார்கள். பக்குவமான்களாக்கப் பலப்பல ஞானயோக வித்தைகளைக் கற்று முருகனின் பராபர சக்தியில் கலந்து விடுகின்றார் கள். எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் நிறைந்து விளங்கு தலாகும்.” ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமி தனது குருநாதரிடம் தன்னை உள்ளே அழைத்துச் சென்று காட்டுமாறு வேண்டிக் கொண்டார். “குகை வாயிலைத் திறந்து விடுகின்றேன். முப்பது நிமிடங்கள் அவகாசத்திற்குள் வெளியே வந்து விடு!”

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button