பழனி மலை ஓர் அதிசயம்!

192

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•06•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(350) மனிதனே புனிதன் —
பழனி மலை ஓர் அதிசயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியின் கரத்தில் இருந்த மூலிகை வேர் சரியாக உடும்பின் காலடியில் விழுந்தது. நறுமணம் வீசிக்கொண்டு நல்ல வெண்மை நிறத்தில் கிடந்த மாயேந்திர ஜாலம் காட்டும் வேர் தரையில் கிடந்தும், அதனை எடுக்க முடியாமல் மாந்திரீகர் கள் பெருமூச்சு விட்டனர். உடும்பு நிதானமாக வேரைக் கவ்வி எடுத்து, வாயில் போட்ட படி வறட்டாற்றின் தெற்குப்புறம் மேட்டில் ஏறிச்சென்று காட்டில் மறைந்தது. குதிரை வண்டியில் இருந்து இறங்கி முதலில் ஓடி வந்த சாமியார் நமது சுவாமியின் அருகே சென்றார். தரையில் விழுந்து கிடந்த அவருக்கு, துணிகளை உடுத்தி விட்டு உதவிகள் செய்தார். கையில் விஷக் கத்தியுடன் நின்றவர்கள், ஏமாற்றம் அடைந்ததால் கோபத்துடன் சுவாமி மீது பாய்ந்தனர். வறட் டாற்றின் தென்கரையில் இருந்து ஒடிவந்தவர், தரையில் கிடந்த காயந்த மரக் கம்பை எடுத்து வந்து அவர்களை அடித்து நொறுக்கினார். குதிரை வண்டிக்காரர் தமது பங்குக்கு குதிரைச் சவுக்கால் விளாசித் தள்ளினார். மாந்திரீகர்கள் குய்யோ முறையோ என்று சப்தமிட்டபடி விழுந்து ஓடியே போயினர். சுவாமியின் வலது கையில் வீக்கம் கண்டிருந்தது. சாமியாரும், வண்டிக்காரரும் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினர். தீயவர்களிடம் இருந்து காப்பாற்றியவர் கம்பை வீசி விட்டு சுவாமிக்கு உதவிசெய்ய வந்தார். வீக்கம் கண்டிருந்த இடங்களில் பச்சிலைச் சாறு தடவி விட்டு, இரண்டொரு மூலிகை இலைகளைப் பறித்து வந்து சாப்பிடக் கொடுத்தார். அதனால் நமது சுவாமிக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது. அவரை நிமிர்ந்து பார்த்தார். நல்ல சிவந்த நிறமும், அன்பான சிரிப்புடன் பேசினார். “தம்பி எப்படி இருக்கிறாய்? ” என்று கேட்டார். சுவாமி தலையை அசைத்தார். அவர் மீண்டும் குதிரை வண்டிக்காரரைப் பார்த்து, “என்னங்க தேவரய்யா, முதலில் தம்பிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம், வாங்க” என்றபடி தனது சைக்கிளில் புறப்பட்டுப் போனார்.

அழகு நாச்சியார் கோயிலடி வந்ததும், ” லைன்மேன் நடராஜா இங்க வந்துட்டுப் போடா” என்ற பலத்த சப்தம் கேட்டது. சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அழைத்ததும், சைக்கிளை விட்டு இறங்கி ஓடினார். குரு பக்தி மிக்கவர் ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமி. அருகில் சென்று கைகட்டி வாய் பொத்தி நின்றார். அப்போது குதிரை வண்டியும் அங்கே வந்து நின்றது. “நடராஜா வண்டியில் இருக்கும் ஊமைப் பையனை அழைத்து வந்து அழகு நாச்சியார் கோயிலில் விட்டு விடு” என்று கூறினார். நமது சுவாமியை அழைத்துச் சென்ற சாமியார் கோயிலில் விட்டு வந்தார். ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமி பலகாரம் வாங்கி வந்து ஊமை சுவாமிக்கு சாப்பிடக் கொடுத்து உதவினார். இந்த நிகழ்ச்சிகளை நமது நாகராஜன் சுவாமி என்றும் ஞாபகத்தில் வைத்திருந்து வந்தார். குதிரை வண்டிக்காரரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் பெயர் மாணிக்கம், ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி சமாதியில் பின் நாளில் எலுமிச்சை கனியில் அருள் வாக்குக் கூறிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு நமது நாகராஜன் சுவாமியைப் படுத்து ஓய்வில் இருக்க வைத்தார். ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமியைத் தனது அருகே அமரவைத்து பழனி மலையின் அபூர்வமான விஷயங்களை உபதேசித்தார். உடனிருந்து நமது சுவாமி அவைகளைக் கேட்டு கிரஹித்துக் கொண்டிருந்தார்.

“எனதருமைக் குழந்தைகளே. வரும் காலத்தில் ஸ்ரீ ஈஸ்வரரின் புகழ் பாடும் சீடர்களே. உங்கள் குடும்பத்தினர் எதிர் காலத்தில் தழைத்தோங்கி வாழ்வார்கள். இன்று இரவு நீங்கள் முக்கால முனிவரை தரிசிக்கலாம். அதன் பிறகு அதிசயம் அநேகம் உள்ள பழனி மலையில் என்ன நிகழ்வைச் சித்தர்கள் செய்து கொண்டிருக் கின்றார்கள் என்று நமது பிரதமசீடன் லைன்மேன் நடராஜன் நம்மிடத்திலே கேட்டுக் கொண்டுள்ளதால் கூறுகிறேன். செவிமடுத்துக் கேட்பீர்களாக! இந்த மலைக்குள் அநேக சித்தர்கள் பரிபூரண தவம் செய்து வருகிறார்கள். இந்த மலை தேங்காய் சிரட்டையைக் கவிழ்த்து வைத்தது போன்று, உட்புறத்தில் பெரிய மைதானம் அளவில் இடமுள்ளது. அங்கு ஓர் குளத்துடன் கூடிய பெரிய மேடையும், மேடையில் மேல் அறிவைக் குறிப்பிடுகின்றன ஞானவேல் ஒன்று சொர்ண மயமாக விளங்குகின்றது. அநேக குகைகளில் நிறைந்துள்ள அதிசயம் மிகுந்த அவ்விடங்க ளில் அமர்ந்துள்ள நிலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இடைவிடாத தவங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜடாமுடி மற்றும் உடலெங்கும் புழுதி யால் மூடப்பட்டு மண்மேடுகள் போன்று அவர்கள் காணப்படு கின்றனர். பழனிமலை குகைக் குள் செல்ல எல்லோராலும் இயலாது. அவர்கள் யாரைத் தகுதி வாய்ந்தவர்கள் என்று எண்ணுகின்றார்களோ, அவர்க ளுக்கு உலக நன்மையை நாடும் எண்ணம் இருக்க வேண்டும். அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டு கிரிவலம் வந்த வண்ணம் இருப்பார்கள்.”

( வரலாறு இன்னும் வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button