மகேந்திர ஜாலம் எப்படி?

264

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•06•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(347) மனிதனே புனிதன் —
மகேந்திர ஜாலம் எப்படி?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குருமலையில் அன்றைய இரவு நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமிக்கு மிகவும் முக்கியமான இரவாகிப் போனது. துறவியை மூப்பனுடன் சென்று தங்கிக் கொள்ளும்படி சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அனுப்பி வைத்தார். துறவியோ தயங்கினார். நமது சுவாமியின் முகத்தைப் பரிதாப மாகப் பார்த்தார். “இன்று இரவு இந்த ஊமையன் இந்தப் பந்தலில் தனியாகப் படுத்துத் தூங்கட்டும். பாவம் பசியுடன் வரும் விலங்குகளுக்கு உணவு வேண்டாமா? ” என சற்குருநாதர் கூறி விட்டு இடி முழக்கம் போல் சிரிக்கவும் பேசாமல் வாய் பொத்தியபடித் துறவி சென்று விட்டார். நமது சுவாமியின் தலையை ஆதரவுடன் தடவிய சற்குரு நாதர் ஒரு மூலிகை வேரைக் கையில் கொடுத்தார். “இது, மகேந்திர ஜாலமூலி! இதனைக் கொண்டுதான் அன்றைய காலத்தில் ஜாலங்கள் புரிந்தார் கள். இன்றைய இரவு மட்டும் அது உன்னிடத்தில் இருக்கட்டும். இன்றைய இரவில் எது நடந்தா லும் நீ ஆச்சரியம் அடையாதே! பழனிக்குச் செல்கிறோம். நீ மெளனமாக இருப்பதால் உனக்கு நன்மைகளே உண்டாகும். இந்த அனுபவம் உனக்கு மிகவும் தேவை” என்றார். வஸ்திரத்தை எடுத்துப் போர்த்தி விட்டுப் போனார். மாய உறக்கம் நமது சுவாமியை ஆட்கொண்டது.

நீங்கள் பழனியில் சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமியின் சமாது பீடத்திற்குச் செய்பவராக இருந்தால், அங்கு பிரதமசீடர் ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று இருப்பீர்கள். ஒரு குழந்தையின் மனதுடன் மிகவும் எளிமையாக, திருநீறு தவழும் முகமுமாக, சிரித்த முகத்துடன் தனது குரு நாதர், குருநாதர், குருநாதர் பற்றியே வாய் ஓயாமல் குரு நாதனின் புகழைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவ்வளவு குரு பக்தி மிக்கவர். குரு நாதர் தனக்குத்தான் சொந்தம், தனது உடலில் இருந்து மட்டுமே செயல்படுகிறார் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து வாய் விட்டுச் சிரிப்பார். சிரித்துக் கொண்டே இருப்பார். பார்த்தால் குழந்தையின் எதார்த்தம் உள்ளவர். சற்குருநாதரின் அற்புத சக்திகளைப் பற்றி அவர் எல்லோரிடமும் என்னென்ன சொன்னாரோ, அத்தனையும் உண்மை என்பதை, நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் நேரில் கண்டு அறிந்ததை இதில் தருகிறேன்.

சுவாமி அவர்கள் கண் விழித்த போது ஒரு சிறிய அறையில் ஹோமக்குண்டம் அமைக்கப் பட்டிருந்தது. அந்த அறை உஷ்ணமாக இருந்தது. சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி ஹோம குண்டம் எப்போதும் அக்கினி யுடன் கூடியதாகக் கனன்று கொண்டிருந்தது. பாத்திரத்தில் நீர் விட்டு குரு நாதரின் வஸ்திரங்கள் அதில் ஊற வைக்கப் பட்டிருந்தன. அவர் ஹோமத்தைத் துவங்கினார். நாவு, உதடுகள் அசையாமல் மனதினுள் ஜெபம் செய்யத் துவங்கினார். ஹோமப் புகை அந்த அறையில் நிறைந்தது. நமது சுவாமி கையில் மூலிகை வேர் ஒன்றைத் தந்திருந்தார் அல்லவா, அதனை எடுத்துக் கொண்டார். வெண்மை நிறமும், நறு மணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் இந்த வேரைத்தான் மகேந்திர ஜால மூலி என்றார். எது நடந்தாலும் ஆச்சர்யம் உறாதே என்றதில் தான் ஆச்சர்யமே இருந்தது. வேரைக் கையில் வைத்ததும் மனதில் என்ன எண்ணுகின்றோ மோ அது அப்படியே கண் முன்னால் தத்ரூபமான காட்சி யாகத் தெரிந்தது.

நமது சுவாமி இரத்தப்பசியாறும் கொல்கத்தாக் காளியை எண்ணினார். உடனே ஹோமப் புகையில் வாள் ஏந்திய காளியின் ரூபம் தென்பட்டது. ஹோமம் செய்து கொண்டிருந்த சற்குரு நாதரின் தலையை வாளால் வெட்டித் தலையைத் தனியே இடதுகையில் எடுத்துக் கொண்டது. கழுத்தில் இருந்து பீரிட்டுக் கொப்பளிக்கும் ரத்தத்தை வாயினால் உறிஞ்சிக் குடித்தது. சுவாமி பிரமிப்பும் பார்த்துக் கொண்டிருந்தார். இரத்தத்தைக் குடித்து முடிந்த தும் அவரின் தலையை மீண்டும் பொருத்திவிட்டு ஆக்ரோசம் அடங்கியவளாக மறைந்து போனாள்.மூலிகையைப் பையில் போட்டுக் கொண்டு சுவாமி கையை முகர்ந்து பார்க்க மருக்கொழுந்து அத்தர் போன்று மணம் கமகமத்தது. சற்குரு நாதரின் மெளனஹோமம் தொடர்ந்து நடைபெற்றது. நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து போனார்.

பிறகு விழிப்பு நிலை உண்டான போது ஹோமம் நிறைவடைந்து இருந்தது. எழுந்து நின்ற அவர் ஆகாயத்தைம் பார்த்து ஏதோ ஜெபம் சொல்லியபடியே இருந்தார். நமது சுவாமி வேரைக் கையில் எடுத்துக் கொண்டு தனது குருநாதர் உறங்குவது எப்படி? என்று மனதினுள் வினவினார். அந்தக் காட்சி தோன்றியது. ஹோம குண்டத்தி ற்கு மேலே சுவற்றில் உள்ள ஆணியில் கயிறு கட்டப் பட்டிருந்தது. அதன் அடுத்த நுனி எதிர்புறச் சுவற்றில் உள்ள ஆணியில் கட்டப் பட்டிருந்தது. சற்குருநாதரின் உடல் படுத்த படியே கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு மேலே உயர்ந்து கொண்டே சென்று, மேலே கட்டப்பட்ட கயிற்றில் சென்று படுத்தபடியே அமர்ந்து கொண்டது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button