அகத்திய முனிவரும் சாபமும்.

164

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•06•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(346) மனிதனே புனிதன் —
அகத்திய முனிவரும் சாபமும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ கோரட்சருடைய பாடல்கள் பதினெண்சித்தர் தலைமையில் வெளியிடும் சமயத்தில் முக்கிய மானவரிடம் இருந்து ஆட்சேபம் கிளம்பியது. அவரே அகத்தியப் பெருமான். சுவடிகளை அவர் எடுத்துக் கொண்டு ககன மார்க்க மாகச் செல்லும் பொழுது அதிர்ச்சியடைந்த சித்தர்கள் , “ஓலைச் சுவடிகள் கல்லாகக் கடவது; அது அகத்தியர் கண்ணுக்குப் புலப்படாது மறைவது” எனச் சாபமிட்டனர். வெள்ளை விநாயகர் சாயா ரூபத்திற்குப் பின்புறம் உள்ள ஆழமான வனத்தில், ஒரு அகலக் கற்பாறை மேடைமீது சதுர வடிவப் பாறையாக அந்த ஓலைச் சுவடிகள் கிடக்கின்றன. அங்கு கரடிகள் அதிகமாக வசிக்கும் இடமாக உள்ளது. (நமது சுவாமி அந்தப் பாறையை தரிசித்து இருக்கிறார். மின்னு கின்ற பொரிப்பாறைக் கற்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன. சுவடிகள் இருப்பதும் தெரிகின் றது.) அகத்தியப் பெருமான் அந்த ஓலைச்சுவடிகள் பாறையாக மாறியதும் ஓர் நன்மைக்குத் தான் என்றெண்ணி, ஆசீர்வதித்து விட்டு சந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு அடுத்துள்ள தனது ஆஸ்ரம வனம் ஏகித் தவத்தில் ஈடுபட்டு வரலானார்.

ஸ்ரீ கோரக்கருக்கு அநேக சித்தர் கள் நட்பாக மாறினார்கள். அதில் முக்கியமானவர் பிரம்மமுனி ஆவார். பிரம்மமுனி தனது ஆஸ்ரம வனத்தில் மகாயாகம் ஒன்றை ஸ்ரீ கோரக்கருடன் சேர்த்து துவங்க, அதில் அநேகர் கலந்து கொண்டனர். இதன் நோக்கம் மரணத்தை வெல்வது மற்றும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று சக்திகளையும் பெறுவது. இம் மூன்று சக்திகள் பெறுவது என்பது நம்பமுடியாத காரியம் என்பதாகப் கூறினாலும் ஸ்ரீ கோரக்க சித்தர் அதனை அடைவதில் உறுதியாக இருந் தார்.ஸ்ரீ பிரம்ம சித்தரும் யாகம் செய்வதில் தீவிரமாக இருந்தார். இந்த யாகத்தைத் தடை செய்யும் நோக்கில் இறையருளால் பிரம்ம மோகினி, புகை மோகினி என இருவர் வெளிப்பட யாகத்திற்கு வந்திருந்த அனைவரும் மோகத் தால் பீடிக்கப்பட்டு, தங்கள் வசம் இழந்தனர். தங்கள் வசத்தை இழக்காத ஸ்ரீ கோரக்ரும், ஸ்ரீ பிரம்மமுனியும் அப் பெண்களை மயக்கம் தரும் மூலிகைகளாகப் போகும்படி சபித்தனர். சாபம் தந்ததால் யாகத்தின் நோக்கம் தடைப்பட்டது. யாகத்தில் தோன்றிய மோகினிப் பெண்கள் உலகோரை மயக்கும் கஞ்சாச் செடியாகவும், புகையிலைப் செடியாகவும் மாறி விட்டனர். இன்றளவும் உலக மக்களைப் போதை மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ கோரக்க நாதர் சதுரகிரியில் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் அத்திரி மலையில் ஸ்ரீ அத்திரி மகரிஷியின் பத்தினி, கற்பில் சிறந்த அனுசூயா தேவியை, மும்மூர்த்திகள் பைராகிகளாக வந்து நிர்வாணமாக பிச்சை கேட்டதை தமது ஞானத்தால் உணர்ந்து கொண்டார். திரி மூர்த்திகளும் குழந்தைகளாக மாற்றிய அனுசூயா தேவியின் ரிஷிபத்தினியின் மகிமையைப் போற்றினார். இனித் தமக்கு மூன்றாவது குரு அத்திரியே என முடிவு செய்தார். எனவே ககன மார்க்கத்தில் கடனாநதி பாயும் அத்திவனம் சென்று சேர்ந்தார். அத்திரி மகரிஷியின் தவம் பூர்த்தியாகி சந்தான பாக்கிய வரமும் பெற்று இல்லற வாழ்வில் மகிழ்ச்சியில் இருந்த நேரம். அத்திரி மகரிஷியிடம் சீடனாகச் சேர்ந்து கொண்ட ஸ்ரீ கோரக்க நாதர் இயற்கை தர்மம் இல்லற வாழ்வியலை நடத்தி அதன் மூலம் பெறும் ஞான வாழ்வு தான் சிறந்தது என ஓதினார். குருநாதர் அத்திரி மகரிஷியினிடத்தில் அநேக வாழ்வியல் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தார். நீண்ட நெடுங் காலமாகத் தவத்தில் ஈடுபட்டு
வந்த ஸ்ரீ கோரக்க நாதர் இல்லற வாழ்வில் தமது கவனத்தைத் செலுத்தினார். இவருக்கு ஐந்து மனைவியர்களும், அறுபது குழந்தைகளும் என போக நாதரின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதனை ஸ்ரீ கோரக்க நாதர் உண்மை என்று கூறுவது டன், பொதிகை மலையில் உள்ள புலிக்குகையில் மனைவி, மக்கள், பேரன், பேத்திகளுடன் மரணத்தை வென்று இறைவன் அருளால் இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனக் கூறும் அவரது பாடல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். இத்தகைய செய்திகள் அறிவின் சிந்தனை யில் உண்மையா? என்ற வினாக்களை உருவாகலாம்! ஆனால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உறுதிபடக் கூறிய ஸ்ரீ கோரக்க நாதர், தான் அறிந்த உண்மைகளை, அதன் வழி முறைகளை, மறைக்காமல், உள்ளது உள்ளபடி தனது ஏட்டில் பதிவு செய்துள்ளார். இவர் ஸ்ரீ அத்திரி மகரிஷியன் சீடனாக வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீ கோரக்க நாதர் ஆலயம் அத்தி வனத்தில் இன்றும் உள்ளது. இந்த அபூர்வ விஷயங்களை திருமூர்த்தி மலையில் நமது சுவாமி குணம் பெறும் வரை பல நாட்கள் கூறி வந்ததைத் சுருக்க மாக இதில் எழுதியுள்ளேன். மேலும் சடையாண்டி மலை பற்றிய அநேக விஷயங்களை நமது சுவாமி பவானியில் தங்கி இருந்த போது நடைபெற்ற சம்பவங்களின் போது அறிவோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button