கோரட்ச நாதரின் விருப்பம்!

261

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•06•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(345) மனிதனே புனிதன் —
கோரட்ச நாதரின் விருப்பம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“கோ” என்பது பசுவைக் குறிப்ப தோடு அது ஆன்மாவையும் குறிப்பிடுவது. “ரட்ச” எனப்படுவது பாதுகாப்பது அல்லது கருணை குணத்தைக் கூறுவது. “நாதர்” என்பதற்குத் தலைவர் என்பது பொருள். “ஆன்ம பசுவின் மீது கருணையுடைய தலைவர்” என்ற பொருள்பட அவரை மராட்டிய பாக்ஷையில் “கோரட்சநாத்”, தமிழில் “கோரக்க நாதர்.” ஸ்ரீ மச்சேந்திரநாத சித்தரி டம் குழந்தைப்பேறு வேண்டி ஆசி பெற வந்த ஒரு மராட்டியப் பெண்ணிற்கு விபூதியை அபி மந்திரித்துத் தந்து அதனைப் பிரசாதமாக உண்டால் சந்தான பாக்கியம் உண்டாகும் என ஆசி வழங்கினார். இதனைக் கண்ட அண்டை வீட்டுப் பெண், “சாமியார் விபூதி கொடுத்துப் உன்னை மயக்கி தன் வசப்படுத் தத்தான் தந்துள்ளார் ” எனக் கூறியதால், அந்த விபூதிப் பிரசாதத்தை தன்வீட்டு அடுப்புச் சாம்பல் மற்றும் பசுவின் சாணக் குவியலிடும் கொல்லைப் புறத்தில் கொட்டிவிட, விபூதி பசு வின் சாணத்தில் விழுந்தது.

பல ஆண்டுகள் சென்ற பிறகு அந்த ஊருக்கு வந்த ஸ்ரீ மச்சேந்திரநாத சித்தர், தான் விபூதியை அபிமந்திரித்துத் தந்த பெண்மணியின் இல்லத்திற்குச் சென்று அவளின் பிள்ளையைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதனைக் கேட்ட அந்தப்பெண் சித்தரிடம் மறைக்காமல் நடந்த உண்மை யைக் கூறி விட்டாள். சாம்பல் கொட்டும் இடத்தைக் காட்ட வேண்டும் என சித்தர் கேட்டுக் கொண்டார். வீட்டின் பின்புறம் சாணமுடன் சாம்பல் கொட்டி வைக்கும் இடத்திற்கு அவரை அழைத்துப் போனாள். குப்பை மேட்டின் அருகே சென்று ஸ்ரீ மச்சேந்திரநாத சித்தர், “கோரட்சா” என அழைத்தார். குப்பைக்குள் இருந்து, “ஏன்?” என்று குரல் வரவும், அவ்விடத் தில் குப்பையை அகற்றி விட்டுப் பார்க்க அதனுள் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்தது எனவும் வரலாறு உண்டு.

இயற்கையின் இயல்பில் எல்லாப் பொருள்களுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தியே இறைவன் படைத்துள் ளான் என்பதை அறிந்துகொண்டு, எதனையும் சாதிக்கும் வல்லமை பெற்ற சித்தர்களுக்கு, இது ஒன்றும் அதிசயமல்ல! அறிவியல் இன்னும் அறிந்து கொள்ளாத பிரக்ருதியின் ரகசியங்கள் ஏராளமாக உண்டு. இறைவன் நினைத்தால் எது தான் நடைபெறாது? ஸ்ரீ மச்சேந்திர நாதரின் ஆசியுடன் ஸ்ரீ கோரக்கநாதர் மக்களுக்கு அனேகமான நன்மைகள் செய்து வந்தார். தென்திசை வந்த ஸ்ரீ கோரக்க நாதர் சதுரகிரி மலை யில் தவம் புரிந்து கொண்டு, தன்னை விரும்பி நாடிவரும் சித்தர்களுக்கு அநேக உதவிகள் செய்து கொண்டிருந்தார். தெய்வீக ரகசியம், யோக ரகசிய வித்தைகள் மற்றும் மூலிகை ரகசியங்களை மறைக்காமல் உள்ளது உள்ளபடிக்கு இவர் வெளிப்படுத்தி வந்ததுடன், அதனை அநேக ஓலைச் சுவடி களிலும் பதிவு செய்து உலகம் அறியக் கூறி வந்தார். தெய்வீக உண்மைகளை வெளியிட்டு, அது தீயவர்கள் கைகளில் அகப்பட்டு விட்டால், மக்களுக்குக் கேடுகள் விளையும். ரகசியத்தைத் தகுதி பெற்றவர்களுக்குத்தான் உபதேசிக்க வேண்டும் என்னும் கொள்கையுடைய அநேக சித்தர்கள், இதனை வரவேற்க வில்லை.

மும்மூர்த்திகள் சதுரகிரியில் தபசு செய்யும் ஓங்கார மரம் இருக்கும் இடத்தில், பெளர்ணமி தினத்தில் சித்தர்கள் கூடினர். ஸ்ரீ கோரக்க நாதருக்கு எதிர்ப்பைக் காட்டி எச்சரிக்கை செய்ய முடிவு செய்தனர்.உடனே அனைவரும் ஸ்ரீ கோரக்க நாதரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தனர். தனது தவவலிமையால் ஸ்ரீ கோரக்க நாத சித்தர் அதனை அறிந்து கொண்டார். அவர்கள் கருத்தைத் தந்திரமாக முறியடிக்க உபாயம் மேற் கொண்டார். சித்தர்களுக்கு உணவுகள் தயார் செய்து வைத்தார். அவர்களை நல்ல முறையில் வரவேற்று மரியாதை செலுத்தி உபசரித்து, உணவுகளை உண்ண வைத்தார். உணவில் போதை தரும் மூலிகை கலந்திருந்ததால் வந்த சித்தர்கள் மயங்கிய நிலையில் உறங்கி விட்டனர். அவர்கள் எழுவதற்கு அதிக நேரம் செல்லும் என்பதால், தான் இதுவரை எழுதியுள்ள ஓலைச் சுவடிகளில் உள்ள இருநூறு ரகசியங்களை மட்டுமே தேர்வு செய்து தனியொரு ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டு, அதனை மறை விடத்தில் வைத்துக் கொண்டார். சித்தர்கள் நிம்மதியாக உறங்கி எழுந்து, ஸ்ரீ கோரக்கர் இதுவரை எழுதியுள்ள பதினாறு ஓலைச் சுவடிகளைக் கேட்டனர்.

கேட்டது தனது இரண்டாவது குருவாகிய நந்தி தேவராவார். தனது குருவிடம் சுவடிகளை ஒப்படைத்தார். அதனை அந்த ஏழு சித்தர்களும் கொண்டு சென்றனர். இதனை மற்றுமுள்ள சித்தர்கள், கோரக்கரிடம் அவரது நூல்களைப் பறித்துச் சென்றது முறைகேடான செயல் என வாதிட்டனர். எனவே ஓங்காரமர மேடையில் அனைவரும் ஒன்று கூடி வாதிட்டனர். கடைசியில் ஸ்ரீ கோரக்கர் ஏழை, எளியவர் களுக்கு உதவும் வழிவகை செய்யும்படி கேட்டுக் கொண்டார் பிறகு ஸ்ரீ கோரக்கர் நூல் பதினெண் சித்தர்கள் தலைமை யில் சதுரகிரியில் வெளியிடப் பட்டது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button