மும்மூர்த்தி மலைகள்.

256

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•06•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(342) மனிதனே புனிதன்,
மும்மூர்த்தி மலைகள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துறவி அவர்கள் ஸ்ரீ சற்குரு நாதரிடம், ” சுவாமி தாங்கள் அடிக்கடி திருமூர்த்தி மலைக்கு வருகின்றீர்கள் என்று அறிந்தி ருக்கிறேன். இதன் பெயர் வரலாறு பலபடியாக ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகக் கூறி வருகிறார்கள். திருமூர்த்தி மலை எனறு அழைக்கப்படும் காரணம் என்ன? இங்குள்ள விஷேசங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.நன்றி ” எனக் கூறினார். ஸ்ரீ சற்குருநாதர் கூறுவார், “ஓ துறவியே கேளும். திரிமூர்த்தி மலையின் ரகசியம் பற்றி அறிந்து கொள்ளும் முன்பு திரிமூர்த்திகளும் சேர்ந்து ஒரே அவதாரமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் அத்திரி மலையில், பிரம்ம புத்திரர் ஸ்ரீ அத்திரி மகரிஷிக்கும் அனுசூயா தேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இவர் அவதாரம் செய்வதற்கு முன்பு இவரது அன்னையைத் திரிதேவி யர்கள்(கலை மகள், அலை மகள், மலை மகள்) எண்ணப்படி பதிபக்தியில் அனுசூயா தேவி தங்களை விடச் சிறந்தவளா? என்றறிய சோதனைக்கு உள்ளாக்கினர். அதற்கு உதவும்படி கேட்டு தங்களின் கணவர்களாகிய திரிமூர்த்தி களின்(பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்) சம்மதத்தையும் பெற்று விட்டனர். ஸ்ரீ அத்திரி மகரிஷி தமக்குப் புத்திரப்பேறு கிடைக்க ஆதிபராசக்தியை நோக்கிக் கடும் தவசில் ஈடுபட்டிருந்த நேரம். அனுசூயா தேவியின் பதிவிரதா தர்மத்தை உலகினுக்கு உணர்த்த மும்மூர்த்திகளும் சந்நியாசி களாக வேடம் தாங்கி, திருவோடு கையில் ஏந்தி, அத்தி மரங்கள் நிறைந்த ஆரண்யத்தில் அமைந்துள்ள அத்திரி மகரிஷி யின் தபோவனத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சோதனையின்றி சாதனை இல்லை; சாதனை ஒன்றில்லா மல் சாதிப்பார் உலகில் இல்லை என்ற ஞானியின் வாக்கினுக்கு உயிர் தரவே ஆஸ்ரமத்தின் முன்பு நின்று பிச்சை கேட்டுக் குரல் கொடுத்தனர். ரிஷி பத்தினி அனுசூயா தேவி அதிதிகளை வரவேற்று ஆசனப்பலகை இட்டு அமரச் செய்து, குளிர்ந்த மோர் தந்து உபசரித்தார். அவர்கள், “அம்மா அனுசூயா தேவி, நாங்கள் கடனாநதியில் நீராடி எங்கள் கடமைகளைச் செய்து விட்டு வாருகிறோம். பசியுடன் வந்திருக்கும் நாங்கள் இங்கு அமுதுண்ண விரும்புகிறோம். விரைந்து வந்து விடுவோம் ” என உத்தமியிடம் உத்திரவு பெற்றுச் சென்றனர். மதிய வேளையில் போஜனம் தயாராகி இருந்தது. விருந்துண்ண வந்த திரிமூர்த்தி தேவர்கள் அத்திரி மகரிஷியின் பத்தினியை அழைத்து, “அம்மா நாங்கள் நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்பது எங்கள் வழக்கம். எங்களுக்கு உணவு பரிமாறும் தாங்களும் நிர்வாண மாக வந்துதான் உணவு பரிமாற வேண்டும். சம்மதம் என்றால் மட்டுமே அதிதி பூஜையை ஏற்போம்” என்று கூறினார்கள். “அப்படியே ஆகட்டும், அமருங்கள் ” என்ற அனுசூயா தேவி தனது பதி ஸ்ரீ அத்திரி மகரிஷி அவர்களை மனதில் எண்ணித் துதி செய்தார். வந்திருப்பவர்கள் திரிமுர்த்திகள் என்பதைத் தனது பதிவிரதா தர்மத்தால் அறிந்து கொண்டு விட்டார். கமண்டல நீரைக் தனது வலது உள்ளங்கையில் ஏந்தி, “கொண்டவனுக்குப் (அத்திரி) பத்தினி நான் என்பது உண்மை யானால், இறைவன் சாட்சியாக என்னைச் சோதிக்க வந்திருக்கும் முத்தேவர்களும் இக்கணம் முதல் எனது குழந்தைகளாக மாறக் கடவது. இது சத்திய தர்ம நீதி உண்மைகளாம்” என்று சொல்லி அவர்கள் மீது தீர்த்தத்தைத் தெளித்தார்.

அங்கேயே அக்கணமே திரி மூர்த்திகள் பச்சிளம் குழந்தை களாக மாறிவிட்டனர். அனுசூயா தேவியின் கற்பின் கனல் சகல தேவாதி தேவர்கள் அனைவரை யும் தகித்தது. அத்தி மலையில் அனைவரும் கூடி விட்டனர். திரிமூர்த்திகள் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க நிர்வாணமான அக்குழந்தைகளுக்கு அதன் படியே, அனுசூயா தேவி அமுதூட்டி வளர்த்து வரலானார். முப்பெரும் தேவியர்கள் நாரத மகரிஷியை அழைத்துக் கொண்டு பதிவிரதா பத்தினி அனுசூயா தேவியைத் தேடி வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். தங்களது பதிகளுக்கு சுயரூப விமோச் சனமும் தந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டனர். தேவாதி தேவர்கள் தமது ஆஸ்ரமத்தில் குழந்தை களாக மாறி வளர்ந்து வருவதை அறிந்து கொண்ட ஸ்ரீ அத்தி மகரிஷி வந்து கண்டு மன நிறை வடைந்தார். திரிதேவியர்கள் விமோசனம் கேண்டுக் கொண்ட தற்கு இணங்க திரிமூர்த்திகள் மீண்டும் சுயரூபமடைய அனுசூயா தேவி அனுக்கிரகம் செய்தார். திரி மூர்த்திகள் மகிழ்ந்து அவர்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டனர். மூவரும் எங்களுக்குக் குழந்தைகளாகப் பிறந்து வரும் வரத்தை வேண்டினர்.திரிமூர்த்திகள் உடனே, “அத்திரி மகரிஷியே, அம்மா அனுசூயா தேவியே உங்கள் பதிவிரதா தர்மத்தை நாங்கள் சோதித்த தோஷத்தை நீக்கிக் கொள்ள அமராவதி நதி உற்பத்தி ஆகும் ஆரண்யம் செல்கிறோம். எங்களது அம்சமாக உருவாகிய மூன்று மலைகளில் கடும் தவம் செய்து வருவோம். ”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button