நமது சுவாமி குணம் பெற்றார்.

187

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•06•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(341) மனிதனே புனிதன் —
நமது சுவாமி குணம் பெற்றார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமக்கு வேண்டியதை எல்லாம் மிகவும் சுலபமாக, மிகவும் எளிமையாக நாம் அடைந்து விட முடியும். அதற்கான தியாக வழி ஒன்றுண்டு. அது என்னவென் றால் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். அவர்களுக்கே அனைத்தும் கிடைக்கும் என்பது இறைவன் வகுத்த அருள் வழி. இதனை மாற்றம் செய்ய முடியாது. நம்மைத்தான் நாம் மாற்றிக் கொண்டு நிம்மதியை அடைய வேண்டும். இறைவன் வழி மிகவும் எளிமையானது. நமது வாழ்க்கையில் நமக்கு நேர்வது அனைத்தையும் மகிழ்ச்சி யுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். இறைவனது நீதியானது உண்மையைப் பேசி தர்மத்துடன் வாழ்வதாகும். இறைவன் அமைத்த இந்த இயற்கையின் இயல்பு அமைப்பினை ஒப்புக் கொண்டு வாழ்வதே இறைபக்தி ஆகும். இதனைக் கடைப்பிடித்துத் தமது அனுபவத்தில் உண்மையைக் கண்டனர். ஞானியர்களால் இறைவன் பக்தியை மக்களுக்கு எடுத்து உரைப்பதைக் கேட்டுக் கடைப்பிடிக்க முயல்வதே குரு காட்டிய வழியாகும். உண்மை யைப் பேசுவதும், தர்மம் செய்வ தும், குருவழியில் நிற்பதும், இறைவன் சிந்தனையைக் கொள் வதும், பிராணாயாமம் மற்றும் தியானம் செய்வதும் குரு பக்தி நிறைந்த செயலாகும். மற்றவர் கள் பேசிய பேச்சுக்காகவோ அல்லது செய்யும் தவறுக்கவோ தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது என்பதே குருநாதன் காட்டிய இறையருள் வழி ஆகும்.

நமது சுவாமிக்கு உதவிகள் செய்த வனவாசிகளுக்கு நிச்சயம் இறைவனருள் உண்டு. குளிருக்கு இதமாகப் புல் நிறைந்த படுக்கையில் படுக்க வைத்தனர். காலில் உள்ள வலிகள் போக பாறையைத் துளைத்து வெளிவந்த மர வேரைப் பசைபோல் அரைத்து ராகி மாவுடன் கலந்து, கூழ் போன்ற பக்குவத்தில் வேகவைத்து கை, கால்களில் பூசினர். மேன்மேலும் பூச்சின்மேல் மேல்பூச்சு பூசினர். பசுமாடுகள் அப்போது அவர்களுக்கு அங்கிருந்ததால், சுவாமிக்குப் பால் சாதம் மட்டுமே சாப்பிடத்தந்தனர். குருநாதர் மறுநாள் காலையில் முக்கிய மூலிகைகளுடன் வந்து சேர்ந்தார். சாதாரண கத்திக் காயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் எதற்கு? என்று துறவி எண்ணினார். அவருடைய எண்ணத்திற்கு சற்குருநாதர் உடனேயே பதில் கூறினார். “இதனை சாதாரணமான கத்திக் காயம் என்றால் நீ கட்டிய சாணப் பூண்டில் குணமாகும். நஞ்சை நெஞ்சில் கொண்டு தீயசக்தியை உபாசனை செய்து வரும் அவர்கள் கத்தியில் ஏதோவொரு பாஷாணத்தைத் பூசியிருக்கி றான்கள். சிறுகச் சிறுக துன்பம் தந்து கொல்லும் தன்மை வாய்ந்தது. அதற்கு உடனடியாக மாற்று மருந்து மூலிகை இங்குதான் கிடைக்கிறது. அதனால் உடனே இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்” என்று சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி கூறினார். அதற்குத் துறவி, “குரு நாதா, உங்கள் அன்பிற்குப் பாத்திரமான இவரை இங்கேயே கொண்டு வந்திருக்க லாமே. இவர் ஏன் பேசாமல் இருக்கிறார்? ” என்றார். “சிறப்பி னாலோ, மதிநுட்பத்தின் தெளிவி னாலோ ஆன்மசக்தி அடையப் படுவது இல்லை! இது இறை சக்தி யின் விருப்பத்தினால் நடை பெறுகிறது. இவனுள் குடி கொண்டுள்ள ஆத்ம சக்தி தான் இவனைத் தேர்வு செய்துள்ளது. அதன் விருப்பத்திற்கு மாறாக இவன் செயற்படமாட்டான். தோன்றாத் துணையாக இருந்து வரும் இறைவனின் விருப்பம் தான் இவனது விருப்பம். ‘உண்மை என்றால் என்ன?’ என்பதனை, இயற்கையின் இயல்பைப் போதிப்பது எங்களின் கடமை. அத்துடன் சற்குருவே நீங்கள் யார்? என்ற வினாவிற்கும் எம்மால் விடை கூற முடியாது. இவனுக்குத் தந்துள்ள இறைப்பணியை இவன் ஆற்றுவான். அத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தில் இயங்குவதால் அனைத்திற்கும் நன்றி கூறுவதே இவனது கடமையாகும் “இப்படி தனது பதிலில் கூறினார்.

சற்குருநாதரின் தெய்வீக ஆற்றல் சக்தி யானது, நோயுற்ற வரை நொடியில் குணப்படுத்தும் தகுதியைப் பெற்றது. தனது குழந்தையாகவே பாவிக்கும் நமது சுவாமி அவர்களிடம் கருணை மிகவும் கொண்டவர். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூட வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வைத்திய முறையைக் கைக்கொண்டிருந்தார். அதன்படி நமது சுவாமி நல்ல ஆரோக்கியம் அடைந்து விட்டார். ஒரு நாள் மாலைப் பொழுதில் வனவாசிகள், சற்குருநாதர், துறவி எல்லோரும் நெருப்பு இட்ட தணலினைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். கூதல் அதிகமாகவே வனவாசி உலர்ந்து போன சிறிய மரக்குச்சிகளைப்
போட்டு தீநாக்குகள் வளரவே திருப்தியாகப் பாதுகாப்புடன் குளிர் காய்ந்தனர். அப்போது துறவி சற்குரு நாதரிடம் ஓ சிறப்புக் கேள்வி ஒன்றை வினவினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின்’ தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button