திருமூர்த்தி மலையில் சுவாமி.

216

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•06•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(340) மனிதனே புனிதன் —
திருமூர்த்தி மலையில் சுவாமி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் உணவு உண்பதை இதுவரையிலும் நமது சுவாமி பார்த்ததில்லை. என்ன வகையான உணவை உண்பார் என்பதும் தெரியவில்லை. நமது சுவாமி இரண்டு வேளையும் உண்பதால் அதற்கான பொருட்களைச் சேகரிக்கத் துறவி போய் வாங்கி வந்தார். நமது சுவாமிக்கு ஐயிரை தேவி பற்றிக் கூறினார். தவம் செய்பவர்களுக்கு உதவும் அற்புத சக்தி என்றும், அநேகர் இங்கு வந்து தவம் புரிந்து சக்தி பெற்று உயர்நிலை பெற்று இறைவனு டன் கலந்து வாழ்கின்றனர் என்றார். இரவு வந்ததும் நிம்மதி யுடன் உறங்கச் செல்லும்படி ஆணையிட்டார். நமது சுவாமிக்கு உறக்கம் வராததால் பாறையின் மீது படுத்துக் கிடந்தார். துறவி தனியே தவம் செய்யச் சென்று விட்டார். மலையின் உச்சியை நோக்கி அவர் செல்வது அவரது டார்ச்லைட் வெளிச்சம் விட்டு விட்டுத் தெரிவதில் இருந்து புலனாகியது. நீலவண்ணம் நிறைந்த பிரகாசமாக வெளிச்சம் குகைக்குள் தோன்றியது. அதன் அருகில் செல்லும் முன் குரு நாதர் வஸ்திரம் ஒன்றை எடுத்து நமது சுவாமி மீது போர்த்தி விட்டார். கண்கள் இருளடைந்து வந்தது. மெல்ல மெல்ல மயக்கமான உறக்கத்தில் மூழ்கினார். அதிகாலையில் உணர்வு வந்ததும் அருவிநீர் சலசலக்கும் ஒலியும், பறவைகள் சத்தமும் தெளிவாகக் கேட்டது. சூரியன் ஒளி கண்களில் இதமாகத் தெரிந்தது.

” சந்தோஷமாக அருவியில் குளித்து விட்டு, நிம்மதியாகச் சாமி கும்பிட வந்தா.. இந்தக் குடிகார நாயிங்க இங்கேயும் வந்து குடித்து விட்டு, நடக்கிற தடத்திலே உளுந்து கிடக்கறானுக. தூத்தேறி” என்று காமி உமிழ்ந்து விட்டுச் செல்லும் சப்தம் கேட்கவே, சுவாமி மெல்ல எழுந்து அப்படியே அமர்ந்து கொண்டார். அருவிக்குச் செல்லும் பாதை யில், தரையில் தான் படுத்துக் கொண்டி ருப்பதையும், தன்னைப் பார்த்துக் குடிகாரன் என்று ஒரு அம்மா வைது விட்டுச் செல்வதையும் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். சற்குரு
நாதரும், உணவு சமைக்கும் துறவியும் சற்று தூரத்தில் பாறையில் அமர்ந்திருந்தனர். வலதுகாலை இடதுதுடையின் மீது வைத்து சற்குருநாதர் அமர்ந்து இருக்கும் தோற்றம் ஸ்ரீ’ தெக்ஷிணா மூர்த்தியை ஞாபகப் படுத்திற்று. குருநாதர் துறவியிடம், “நாம் அமர்ந்திருக் கும் இடம் கல்லாலமரப்பாதை. இங்கே இருந்து மலை மீது ஒற்றையடிப் பாதை செல்கின் றது. அதில் பயணித்தால் ஒரு மணி நேரம் நடைப் பயணத்தில் முஸ்லீம் அவுலியா சமாதியான இடம் வரும். அதற்கு முன்பாக வே குருமலை செல்லும் பாதைப் பிரிவு வரும். அவ்விடத்தில் வனவாசிகள் வசிக்கும் கிராமம் ஒன்று உள்ளது. இந்த ஊமை யனை, நீ அங்கு அழைத்துச் செல்ல வேண்டும். செல்லும் வழியில் மலைப் பாறையை உடைத்துக் கொண்டு வெளியே வரும் மரவேர்கள் கிடைத்தால் அதனை எடுத்துக் கொண்டு போ. அங்கு வந்து உங்களைச் சந்திக்கிறேன் ” என்று கூறி விட்டுப் பஞ்சலிங்கத்தை நோக்கி மெல்ல நகர்ந்து சென்றார்.

அன்றைய காலத்தில் வனத்தில் மூலிகை பறிக்க மருத்துவர்கள் சென்று வந்தனர். இன்றைக்கு வனப்பகுதி தீயவர்கள் உலாவும் இடமாக உள்ளதால் பாதுகாப்புக் கருதி வனத்துறையினர் மக்களை வனத்தினுள் செல்ல அனுமதிப் பதில்லை. ஊமையாக இருக்கும் நமது சுவாமியை அழைத்துச்செல்ல பலமான ஊன்றுகோலைத் தேடி எடுத்து வந்து கொடுத்தார். காட்டாற்றில் குளித்து விட்டு சுவாமி துறவி யுடன் சென்றார். இடது காலில் செலுத்தப்பட்ட கத்தியில் துருவேறி இருந்திருக்க வேண்டும். எலும்பு வரையிலும் சென்றதால் நடக்கும் போது சுரீர் என வலி ஏற்ட்டது. பாறைகள் மிகவும் நிறைந்த கரடுமுரடான பாதை அது. மிக மெதுவாகத் தான் நடைபயணம் செய்ய முடிந்தது. சற்குரு நாதரின் அருளை எண்ணியபடி நமது சுவாமி, துறவியின் உதவியோடு குருமலை கிராமத்தை அன்று மாலைப் பொழுதில் சென்று சேர்ந்தார். கள்ளம் கபடம் ஏதுமற்றவர்கள். அன்றைய காலத்தில் சற்குரு நாதரை நன்கு அறிந்திருந்தார்கள். ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதர் அவர்களது பெயரைத் தெரியாவிட்டாலும், அன்றைய காலத்தில் அவரால் அவர்களுக்கு அநேக நன்மைகள் விளைந்து வந்தன. பள்ளி மாணவரான ஊமைச் சுவாமியை யும் துறவியையும் வரவேற்ற னர். “மருத்துவசாமி” என்று தான் சற்குருநாதரை அறிந்திருந்தனர்.
” சாமிவந்தார். ரெண்டு பேரு வருவாங்க, நல்லா கவனிச்சுக் கோங்க என்று சொல்லீட்டு வனத்துக்குள்ள மூலிகை கொண்டு வரப் போயிருக் காங்கோ. வந்து உக்காருங்கோ… கஞ்சி குடிக்கலாம்” என்று அவர்களின் தலைவரான மூப்பன் வரவேற்றுக் கஞ்சியும், மிளகாய்ப்பொடி தூவிய கிழங்கும் கொடுத்து உபசரித்தார். கிராமப் பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் சிறிய வெயில் பந்தலில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர். காய்ந்து உலர்ந்த ஒருவகைப் புல்லைப் பரப்பி இருந்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button