பாவம் ஊமையாப் போனாரே!

213

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•06•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(337) மனிதனே புனிதன் —
பாவம் ஊமையாப் போனாரே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திருமதி.பொன்னம்மாள் நாச்சியார் எண்ணம் ஈடேறியது. அவருடைய தவக்கனல் ஒளி வீசுவது முகத்தில் தோன்றிய தேஜஸ் பளீரிட்டது. கண்களில் இருந்து நீல வண்ண ஒளி எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருந்தது. அன்று அமாவாசை தினம். உடலும் ஒளிர்ந்து எம்போதும் விபூதியின நறுமணம் எங்கும் பரவ சற்குரு நாதர் தோன்றினார். அவரது வரவு கண்டு பாதம் பணிந்து எழுந்தார் நாச்சியார். ஆசீர்வதித்து விட்டு நமது சுவாமி யை ஏறிட்டு நோக்கினார். சகல தோஷங்களையும் நீக்கும் ஞான ஒளிப்பார்வை ஸ்ரீ ஈஸ்வர பட் ஆண்டவருடையது. அப்போது பள்ளி விடுமுறை காலம். நமது சுவாமி பாட்டியின் ஆசீர்வாதத் துடன் விடை பெற்றுக் கொண்டு மெளனமாக சற்குருவைப் பின் தொடர்ந்து சென்றார். ஆற்றின் கரையில் உள்ள அரசமரத்தடிக்கு வந்து இருவரும் சேர்ந்தனர். சறகுரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் சிறிது நேரம் வானத்தையே பார்த்துக்கொண்டி ருந்தார். ஏதோ வினோத சபதங்களைக் குரலில் உண்டு பண்ணிக் கொண்டிருந்தார். அது உடனிருந்த நமது சுவாமி அவர்களுக்குப் புரியவில்லை. அனுமதியை யாரிடமோ பெறுவதாகவும், பதில்களைக் கேட்பது போல் இருந்தது. பிறகு நமது சுவாமியின் தொண்டைப் பகுதியில் உள்ள கூர்மையான நாடியைத் தொட்டு அழுத்தம் உண்டு பண்ணவும் சுரீர் என வலி ஏற்பட்டது. அத்துடன் பேசும் தகுதியை நமது சுவாமி இழந்து போனார்.

தன்னிடம் இருந்த ஒரு வஸ்த்திரத்தை எடுத்துப் போர்த்திக் கொள்ளச் செய்தார். ஒருவிதமான மயக்க நிலை அப்போது நமது சுவாமி அவர்களுக்கு ஏற்பட மயங்கிக் படுத்துக் கொண்டு விட்டார்.
கண்விழிப்பு ஏற்பட்ட போது தனது தலைக்குமேல் பாறைகள் புலப்பட்டது. சமையல் செய்யும் வாசனையும், விறகுப்புகையும் நெருப்பின் சூடும் கண்களில் எரிச்சல் உண்டு பண்ணியது. அதனால் கண்ணீர்ப் பெருக்கு ஏற்பட எழுந்து அப்படியே தரையில் அமர்ந்து கொண்டார். தலையில் உருமாலுடன் காவி வஸ்திரம் உடுத்த ஒரு துறவி பாசிப்பயறு அவித்து மண்தட்டில்
கொட்டினார். அரிசிக்கஞ்சி மண் சட்டியில் தயாராக இருந்தது. அவர் கறிகாய்கள் சிலவற்றை நெருப்பின் தணலில் போட்டு சுட்டு எடுத்து மற்றொரு தட்டச் சட்டியில் போட்டு வைத்து விட்டுப் பிரார்த்தனையை முழு ஈடுபாடுடன் செய்தார். நமது சுவாமிக்கு நடப்பது கனவா அன்றி நனவா என்பது தெரியாமல் விழித்துக் கொண்டு
இருந்தார். மீண்டும் படுத்து உறங்கிக் போனார். கண்விழித்த போது அமாவாசை யன்று இரவு நேரம், கஞ்சாபுகை பிடிக்கும் வாசனை வீசியது. சுமார் நான்கு, ஐந்து பேர் தர்பை புல்லால் பின்னிய பாயில் அமர்ந்து இருந்தனர். மாந்திரீக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். உணவு படைத்துக் பிரார்த்தனை செய்த துறவியை அங்கு காண வில்லை.

இரவு நேரத்தில் தீவிர உச்சாடனத்தில் இருந்தவர்களில் ஒருவர், “நமது ஜெபம் பலிதமாக வில்லை. இங்கு வேறு யாரோ இருக்கிறார்கள். அவர்களை அபுபுறப்படுத்த வேண்டும். சென்று பிடித்து வாருங்கள் ” என்று கரகரத்த குரலில் சப்தமிட்டார். டார்ச்லைட்டை அடித்துப் பார்த்தபடி வந்தவர்கள், தியானத்தில் ஆழ்ந்திருந்த நமது சுவாமியிடம் வந்து சூழ்ந்து கொண்டனர். தோள்களைப் பிடித்து அசைத்து, அசைத்து, “டேய், எழுந்திரடா. எங்காவது வேறு இடத்தில் போய் தியானம் பண்ணு போடா. எந்திரி எந்திரீ டா “எனத் தோளில் ஓங்கி அடித்தனர். சுவாமி அசையாமல் உணர்வில் ஒன்றிக் கலந்து இருந்தார். அதில் உயரமாக, ஒல்லியான உடல்வாகு உடைய மனிதன், “இவனுடைய நாக்கை அறுத்து நமது தேவிக்குப் படையல் பூஜை செய்தால் என்ன? என்ன ஆணவம்? கூப்பிட்டும் ஏனென்று கேட்காத இவன் நாக்கை அறுத்து விடுகிறேன்” என்று கூறிக் கொண்டு சுவாமியைக் கீழே தள்ளிவிட்டு மார்பின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். இடுப்பில் இருந்து பிச்சுவா கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, இடது கையினால் வாயைத் திறக்க முயற்சி செய்தார். தலையை ஒருவர் பிடித்துக் கொண்டார். வாயைத் திறக்க முயற்சிக்கும் போது, “அவனை விட்டு விடு. தற்போது அவன் ஓர் ஊமை. பாவ காரியத்தைச் செய்யாது விலகிப் போய் விடுங்கள் ” என்ற சப்தம் கேட்டது. சபதம் வந்த திசையில் விளக்கை முன்னால் காட்டினர். வளைந்த கம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ஸ்ரீ சற்குரு நாதர் நின்று கொண்டிருந்தார். சற்குரு சுவாமியின் கரத்தைப் பிடித்தபடி நைவேத்தியம் படைத்து வழிபட்ட சாது நின்று கொண்டிருந்தார். அவரது நாக்கு முன்னால் தொங்கியபடி இருந்தது. நமது சுவாமியை விட்டு விலகி எழுந்து நின்று கொண்டனர். அமாவாசை இரவு நேரம், எதுவும் புலப்படாத மையிருட்டு. நால்வரும் தங்கள் டார்ச்லைட்டு வெளிச்சத்தை குருநாதர் மீது போட்டுப் பார்த்தனர். அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அங்கே..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button