ஞானச்சுடர் கூறிய மெளன விரதம்!

137

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•06•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(336) மனிதனே புனிதன் —
ஞானச்சுடர் கூறிய மெளன விரதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவன், உலக மக்கள் நலம் வாழ அறிவின் ஆற்றலால், அநேக வழி வகைகளை வகுத்துக் தந்ததை, அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த இறையருள் பெற்ற ஆன்றோர் பெரு மக்களால் தொகுத்து வழங்கப் பட்டதை, இறைவன் சிந்தனை மிகுந்த அன்பர்கள் அதனைக் கடைப்பிடிக்க முயற்சி செய்து, பயபக்தியுடன் இன்றுவரை நல்வாழ்வு வாழ்ந்து வருகின்ற னர். இறைவன் மீது மிகவும் பற்றுக் கொண்டு, இறைவனை அடைந்து பேரின்ப வாழ்வு வாழ்ந்திட, இறைவனால் கொடையாக்கப்பட்ட நல்வழி முறைகளைச் செயல்படுத்த முனைபவர்களை ஆண்டவனின் குழந்தைகள் என்று அகில உலகம் போற்று கின்றது. இறை வனால் அருளப்பட்ட வேதங்கள், இறைவன் நம்பிக்கையுடன் ஞானம் தேடுபவர்களுக்குக் கிடைத்த உண்மைகள் மிகவும் வரப்பிரசாதமானவை, அற்புத மானவை. இறைவனை அடைய, இவ்வுலகத் துன்பங்க ளில் இருந்து மீட்சிபெறக் குழந்தையின் பண்பாகிய அதன் மனநிலையைச் சுட்டிக்காட்டி ஞானியர் விளக்கியிருக்கிறார் கள்.

நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுக்கு தவநெறியைக் காட்டி அருள் தரக்கூடிய, சற்குரு நாதரின் வரவை எதிர்நோக்கி மெளன விரதம் இருக்கச் சொல்லி ஆரம்ப காலத்தில் தவத் திருமதி.பொன்னம்மாள் நாச்சியார் அடிக்கடி கூறி வந்தார். குழந்தையைப் போன்ற கபடம் இல்லாத இயல்பும், பற்றற்ற தன்மையும், சரியானது தவறானது என்னும் சிந்தனை களில் இருந்து விடுபடுகின்ற முயற்சியும், நாவடக்கத்துடன் இருந்து கொண்டு மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்த லும், நல்லனவற்றைக் கொள்ளு தலும், இயற்கையாக வாழ்தலும் தனது பேரனிடம் கண்டுகொண்ட பாட்டி, இதனைக் கொண்டு இவனால் உன்னத மான இறைநிலையின் அருளைப் பெற்றுவிட முடியும் என எண்ணினார். யாருடைய உதவியும் இன்றி, தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொண்டு, தன்னந்தனி யனாய், ஒரு முகப்படுத்திய மனம் கொண்டு, இறைசக்தி யாகிய அருட்சுடர் மேல் பற்றுக் கொள்ள, மெளனமாக இருக்க வேண்டும் எனத் தனது பேரனைக் கேட்டுக் கொண்டார். இறையருள் ஆசைகள் அனைத் தும் நிறைவேறப் பெற்றவனாய், உலகோதய ஆசைகள் எதுவும் பற்றுக் கொள்ளாத மனதிடத்து டன் இருந்து கொண்டு, ஆசை யின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கண்டறிந்தவனாகத் திகழ வேண்டும் என்று உறுதிபட எண்ணம் கொண்டு அதனைப் போதிக்கவும் செய்தார்.

“ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெற்றவர்களுக்கு மரணமும் கூட, பயத்தையோ, மனக்கலக்கத்தையோ ஏற்படுத்தி விடாது. உலகில் உள்ள ஊர்வன, பறப்பன, உலவுவன, மனிதர்கள், ஆயுதங்கள், அமானுஷ்யங்கள், தேவதைகள் என்றிட்ட பற்பல வடிவங்களிலும் மரணம் அதனுள் வீற்றிருந்தாலும், அதனை அறிந்தோர் அச்சம் கொள்ள மாட்டார்கள். எதற்கும் அசையாத நிலையில் இருப்பவர் களிடம் பயமோ, கோபமோ உண்டாகாது. விருப்பமுடன் அவர்கள் உண்மையின் பக்கம் நிலை கொள்வார்கள். தெளிந்த மனநிலையுடனும் இருப்பார்கள். உண்மையாகவே உண்மை தான் ஆத்மா. எல்லா உயிர் நிலைகள் உள்ளும் இதயமாக இருப்பது தோன்றாப் பொருள் எனப்படும் ஆத்மனே! அந்த எல்லா உயிருக்கும் இதயமாக இருப்பது மரணமே! மரணம் மட்டுமே ஒளி சார்ந்த உன்னதப் பொருளோடு ஈரறக்கலந்து ஒன்று படுகின்றது. இறைவனாகிய பரம் பொருளில், இருப்பும், இன்மையும், இருப்பின் மையும் என்ற இவைகள் அங்கே ஏதுமில்லை. இதுவே ஆன்ம விடுதலைக்கு அழைத்துச் செல்லும் மார்க்கம் என்பதே வேத கால ரிஷிகளின் உண்மை வாக்காகும்” என்ற வேதத்தின் சாரத்தை எடுத்து இயம்பினார்.

நமது சுவாமியின் மெளன விரதம் துவங்கியது முதல் இடைவிடாத இறைசிந்தனை வசம் ஆழ்ந்து போனார். மிகவும் அரிதான இந்தக் காலங்களை சுவாமி நன்கு பயன்படுத்திக் கொண்டார். தனிமையில் வாழும் இந்த நாட்களில் பழனி முதற் கொண்டு அநேக சேத்திரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டானது. மெளனம் அநேக உண்மைகளை உள்ளத்தில் உணர்த்துகிறது. அதற்கு தியானம் உறுபொருள் எனவே உதவுகிறது. சுவாமி மற்றவர்கள் பார்வைக்கு ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்டு காணப்பட்டார். வெளித்தோன்றா இயல்பினுள் ஆழ்ந்து அமைதியானார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button