ஆன்ம விடுதலை !

261

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•05•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(333) மனிதனே புனிதன் —
ஆன்ம விடுதலை !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானச்சுடர் என்று சற்குரு நாதரால் அழைக்கப்பட்ட திருமதி பொன்னம்மா நாச்சியார் அவர்கள், சத்திய தர்மங்களாகிய திருப்பாத சுவாச கலைகளின் உண்மையாக விளங்கும், தெய்வீக ஆற்றல் சக்தியின் ஞான போதனைகளை எடுத்துக் கூறுவதிலும் தேர்ச்சி பெற்றிருந் தார். கல்லாஞானம் என்ற நிலைப்பாடு அவரிடமிருந்தது. இது இறை சக்தி தந்த வரப் பிரசாதம் என்பது அவரின் கருத்து. இந்நிலையை அடைந்து விட்டவர்கள் தன்னடக்கத்துடன் இறைவனை எண்ணி வாழ்வதில் ஆச்சரியமே இல்லை. இதைப் பற்றி அவரிடமே அறிந்து கொள்ள ஆவலுற்றோம். அவர் என்ன கூறினார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறோம். அது அவர் பெற்ற அனுபவம்; அதனை அப்படியே தருகிறோம். தனது மூச்சை எல்லா நேரங்களிலும் கவனிப்பதற்கு, அவர் ஒரு ஜெபத்தை ஆரம்பத்தில் இருந்து கடைப்பிடித்து வந்துள்ளார். மிகுந்த தயக்கத்துடன் கூறும் படியான ஓர் சூழல் உருவான தால், வெளிப்படுத்தினார். தகுதி உள்ளவர்களுக்கும், அதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர் களுக்கும், தன்னார்வலர்களுக்கு மட்டுமே உபதேசித்திருக்கிறார். வெறும் வாய்ச்சொல் வீரர்கள், இதுதானா என அலட்சியப் படுத்தும் அலட்சியவாதிகள் நிச்சயம் அதனை நெருங்கக்கூட முடிந்திடாது. காரணம் இறை நம்பிக்கை வைத்து ஆத்மனை அறிந்து கொள்ளும் உலக நன்மை இதில் அடங்கிக் கிடப்பதுதான்!

இவர் அநேக வசதிகளாகிய, வீடு, மனை, அணிகலன்கள் தனது காலத்தில் பெற்றிருந்த போதும், அதைப் பற்றி ஒருபோதும் பெருமை பேசிக் கொண்டது இல்லை. உலகில் அனைத்தும் ஒன்றுடன் ஓன்று சார்ந்திருக்க, இது என்னைத்தான் சார்ந்துள் ளது என்று எண்ணியதுமில்லை. தன்னுள் குடிகொண்டுள்ள ஆத்மா எங்கும் வியாபித்துப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ள பேரறிவன் பரம் பொருள் என்பதைப் பரிபூரண மாக உணர்ந்து கொண்டவர். அதனுடன் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டவர். மகிழ்வு கொண்டு ஆத்மாவில் ஐக்கிய மாகும் மனநிலையை வளர்த்து வந்தவர். ஆத்ம ஐக்கியத்தில் பேரின்பத்தைச் சுவைத்து தனது விடுதலையின் முடிவைத் தெரிந்து கொண்டு மெளனத்தில் ஆழ்ந்து போனவர்.

திருமதி.பொன்னம்மாள் பாட்டி ஒரு சாதனையாளர். நமது சுவாமியைத் தயார்படுத்தும் காரியத்தில், அவர் கால நேரம் பாராமல் செயல் முனைவில் இருந்திருக்கிறார். உள்ளத்தின் உள்ளே இறைவனிடம் உள்ள வெட்டவெளி யாகிய வானத்தில் அனைத்தும் நிறைந்துள்ளது என்றும், நாம் உலகத்தில் அறிந்து கொண்டதும், அறிந்து கொள்ளாததுமாகிய, எல்லாமில் எல்லாமாய் உள்ள பிரபஞ்சம் அங்கு உண்டு என்றும், அதனை ஆட்சி புரிபவர் இறைவன் தான் என்று விளக்குகிறார் . அங்கு பசி, தாகம், துன்பம், முதுமை, மரணம் எல்லாம் கடந்து வாழ் வாங்கு வாழும் இறைவனாகிய மஹா ஜோதி வீற்றிருந்து பிரபஞ்சம் முழுமையும் வாழ வைத்துக் கொண்டு உள்ளது. அன்பே வடிவான ஆத்மாவாகிய பராபரத்தின் எண்ணங்களும் அதன் அன்பைப் போன்றே தூய்மையாக என்றும் உள்ளது. இப்படிக் குறிப்பிடும் அவரது உள்ளத்தின் தூய்மை ஆண்டவனுக்குப் பிரியம் உள்ளதாக இருக்கும் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

அவர் நமது சுவாமியின் சிறு வயது காலம் முதல் தினமும் அதிகாலையில் எண்ணையில் ஊற வைத்த பேயன் பழம் தினமும் ஒரு துண்டு சாப்பிடக் கொடுப்பார். ஈரப்பதம் நீக்கிய சிற்றாமணக்கு எண்ணெயில், பேயன் வாழைப் பழத்தை சிறு வில்லைகளாக்கிப் போட்டு அதில் கல்கண்டைப் பொடியாகச் செய்து தூவி வைத்திருப்பார். வீட்டுக் குழந்தைகள் அனைவரும் அதன் ஒரு வில்லையை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட வேண்டும். நமது சுவாமி சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்தாலும் விடவே மாட்டார். அதன் மேன்மை பற்றி எடுத்துக் கூறுவார். சுவாமியின் எதிர் காலம் இப்படித்தான் இருக்கும் எனக் கணித்தவரும், மகாயோகி என ஊர் மக்களால் போற்றப் பட்ட வருமான வாத்தியார் திரு. தங்கவேல் தேவர் அவர்கள் பாட்டியிடம் மேற்படி வைத்திய முறையை உபதேசித்து இருந்தார். அதனைக் கடைப் பிடித்துக் குழந்தைகளின் நலன் பேணி வந்தார். மருத்துவ சித்தரான அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்ட பிறகு இயற்கை மருத்துவத்தை ஆவலுடன் கற்றுக் கொண்ட அவரது மூத்த மகன், வாத்தியார் திரு.T. முருகானந்தம் அவர்கள் மருத்துவ சேவையை ஊர் மக்களுக்கு இலவசமாகச் செய்து வந்தார். முன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் தரும் வயிறு சுத்தி குளுகைகளைப் பெற்று வருவார். அதனைப் பனங்கருப்பட்டியில் பொதிந்து அதிகாலையில் நமது- சுவாமியைச் சாப்பிட வைப்பார். வயிற்று பேதி மருந்து என்று பேசிக் கொள்வார்கள். பச்சிலை கள் போட்டுத் தயாரிக்கப்பட்ட ரசம் மட்டுமே சாப்பிடக் கொடுப்பார்கள். பலகாரங்கள் எல்லாம் முதல் நாள் மறைந்து விடும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button