நாகதோஷம் தீர்க்கும் ஆசி பெற்றது.

281

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•05•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(331) மனிதனே புனிதன் —
நாகதோஷம் தீர்க்கும் ஆசி பெற்றது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கதழி வனநாதர், சிவானுபூதி பெற்ற அருட்செல்வர் ஐயன் அவர்கள், தாம் பெற்ற அனுக்கிரகத்தை மக்களுக்கு வழங்கிட அன்பு கொண்டு, கிளுவையடி சிவன் ஆலயத்தில் புற்றுமண் மருத்துவமாக வெளிப்பட்டு, மகிமைகள் பல சிவனருளால் செய்யத் துவங்கினார். இறந்தும் அருள் வழங்க இருக்கும் தெய்வம் அவர்! நமது சுவாமி புற்று மண்ணை சிவலிங்கத்தின் முன்பு சிறு மண் குடுவையில் வைத்த போது, சர்பவடிவில் தோன்றிய ஐயன் குடுவையைச் சுற்றி வந்து, தனது சர்ப உடலில் புற்றுமண் பூசிக்கொண்டு, மீண்டும் கிளுவை மரக்கிளையில் அமர்ந்து கொண்டது. உடல் எங்கும் ரோமாஞ்சலி ஏற்பட, நமது சுவாமியும் அவர் பிள்ளை களும் புற்றையும், கிளுவை மரத்தையும் சுற்றி வந்து புற்று மண் குடுவையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர். சுவாமியின் துணைவியார் இதனைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைத் துதித்தார். வீட்டிற்கு வந்த பிறகு பாட்டி அவர்கள் நடந்த சம்பவத்தைக் கேட்டு, இறைவனுக்கு நன்றி கூறினார். அந்தக் குடுவையைப் பூஜை அறையில் வைத்து வழிபட்டு விட்டு வழக்கப்படி தனது பணிகளைச் செய்து வந்தார். பாட்டி அவர்கள் உண்மை மிகுந்த ஒரு கருத்தை நமது சுவாமி அவர்களிடம் கூறினார்.

” அப்பா, நாகராஜா இந்த உலகம் விசித்திரமானது. நான் கூறுவது மக்களின் மன நிலையைத்தான். ஸ்ரீ கதழி வனநாதரை நீ சென்று சேவித்து விட்டு வந்துள்ளது சந்தோசம் தருகிறது. உலகில் எத்தனையோ மகான்களுக்குத் துன்பங்கள் தந்து மகிழ்ந்த உலகமப்பா. ஞானம் உடையவர் களும், உயர்ந்த குணம் பெற்றவர் களும் உள்ள பரிசுத்தமாக வாழ்ந்த ஒருவர் இறந்து விட்டால், மகிழ்பவர்கள் உண்டு. உலகை விட்டு ஒழிந்து போனான் என்று பழிப்பவர்களும் உண்டு. எவ்வளவு தான் இந்த உலக மக்களுக்கு சேவைகள் செய்தாலும், நல்லோர்களுக்குக் கேடுகள் செய்ய எண்ணிச் செயல்படுபவர்கள் இல்லாமல் இல்லை! ஆனாலும் மகாத்மாக்கள் சந்தோஷமாய், சமாதானமாக மரணத்தையே எதிர்கொள்கிறார்கள். மரணம் எப்படி வேண்டுமானாலும் உருவாகலாம். அதனை சந்தோஷமாக ஸ்ரீ ஈஸ்வரர் சித்தனையோடு ஏற்றுக் கொள்கி றார்கள். இறைவனோடு சென்று ஜக்கிய நிலையை அடைந்து விடுகிறார்கள். ஒரு மகானின் மரணத்திற்குப் பின்னால் பிரபஞ்சரகசியம் புதைந்துள்ளது. நல்ல பரிசுத்தமான ஒரு ஆத்மா இறந்து விடும் பொழுது, இந்த உலகில் உள்ள கொடுமையான வியாதி ஒன்று நீங்கி விடுகிறது. இறந்தும் உலகிற்கு நன்மையை தந்திடும் மகான்கள் சமாது வைக்கப் பட்டுள்ள ஆலயங்க ளுக்குச் சென்றால் , அங்கே அவர்களின் தெய்வீக ஆற்றல் சக்திகள் நிறைந்து இருப்பதால், செய்பவர்களின் எண்ணங்கள் ஈடேறுகின்றன. தீமையை எண்ணுபவர்களுக்கும் நன்மை செய்திட எண்ணும் அவர்களுக்கு நன்றியைக் கூறுவது தான் கட்டாயக் கடமை விதியாகும்.”

” மரணம் என்பது ஒரு புதிய வாழ்வின் துவக்கம் என்று எண்ணும் புனிதர்களிடம், எப்போதும் அன்பு செலுத்தி வருவதுடன், அவர்களின் நட்பானது நன்மைகளையே ஏற்படுத்தும். தர்மசித்தத்தில் துவங்கி சாந்தசித்தமாக உள்ளம் புனிதப்படப் புனிதனாவாய்! மரணத்தை எப்போதும் மகிழ்வுடன் எதிர் கொள்பவ னுக்கு, நோயின்றி, உடலை விட்டு உயிர் சுகமாக வெளியே றும். கதழி வனநாதர் ஐயனின் மரணம் கூட இதனைத் தான் காட்டுகிறது. இறைவனைப் பற்றுக் கோடாகக் கொள்பவன் எவனோ அவனுக்கு இனம், சொந்தபந்தம், தோழமை எல்லா வற்றையும் இறை சக்தி தந்து அன்புடனே அவர்களுடன் இணைக்கிறது. இவர்களை எல்லாம் நமது உள்ளத்தில் இருந்து பற்றில்லாமல், சுகமுடன் வேறுபட்டுப் போவதற்கு வழி தேடினால், அதே இறை சக்தி அவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்தும். இதுதான் இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பு என அறிவுசால் மகான்கள் வெளிப்படுத்திய உண்மை என அறிவாய்” என பாட்டி திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் எடுத்துரைத்தார்.

மீண்டும் சொல்கிறார், “அப்பா, இதனையும் கேட்பாய்! மக்கள் மகான்களுக்குத் தீமை செய்வது என்பதும் ஒரு நோயாகத்தான் அறிஞர்கள் கருதுகிறார்கள். நோய்களற்ற உள்ளமானது தன்னிடத்தில் எது வந்து சேர்ந்தாலும் அதனை ஜீரணம் செய்து விடுகின்றது என்பது உண்மையே.- இதன் கருத்து என்ன வென்றால் எந்த ஒரு விஷயத்தையும் பொறுமை யுடன் கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதின் நோய் என்பது சுயநலப் பாங்காக வெளிப்படுத்துவதே!
தான் செய்யும் காரியங்களில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எது லாபகரமாக இருக்கின்றது?
என எண்ணுவதும், மற்றவர்கள் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுகின்றார்களா? என்பது போன்ற கவலைகள் மனதில் இருந்தால் நிச்சயமாக அவனது உள்ளமானது, ஆரோக்கியம் அற்றதாக, நோய் மிகுந்து உள்ளதாகக் கருதப்படும்.
அத்தகைய உள்ளமானது எதனையும் செய்ய இயலாது என்று எண்ணும்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button