அகத்தே செல்லும் வழி!

204

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•05•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(326) மனிதனே புனிதன் —
அகத்தே செல்லும் வழி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும், புறத்தே உள்ள பொருள் உலகினுக்கே செல்லும்படியாக இறை சக்தி படைத்து உள்ளது. புறத்தில் தான் அவைகளும் செல்லுகின்றன. அறிவு விளக்கம் அடையாத மக்களும் அந்த இன்பங்களைக் கண்டு கொண்டு, அதன் பின்னால் வேகமாகத் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். இறுதியில் மரணத்தின் வாயிலில் வீழ்ந்து விடுகின்றனர். உள்ளதில் உறைகின்ற அழிவில்லாப் பரம்பொருளாகிய ஆத்மாண்டவ னிடம் செல்ல எண்ணும் அறிவாளிகளாகிய மெய்யன்பர் கள், நிலையற்ற பொருள்களில் இறை சக்தியாகிய உண்மைச் பொருளைத் தேடுவதில்லை. நிலையில்லாப் பொருட்கள் அனைத்தும் பூமியில் தோன்றி பூமியிலேயே சேர்கின்றன. பிறகு அவைகள் வேறொன்றாய்ப் பரிமளிக்கின்றன. இந்த முக்கிய மாற்றங்கள் மாறி மாறித் தோன்றுவதும், மறைவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்படியாக உலகமே மாறி மாறித் தோன்றுவதையும், போவதையும் அடிக்கடி உள்ளத்தில் நினைவை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு, அத்தகைய அறிஞர்களுக்கு நிலையில்லாத விஷயங்களி லும், நிலையற்ற பொருட்களின் மீது ஏற்படும் பற்றுக்கள் தீர்ந்து நீங்கிப் போகும்.

மனிதன் விழித்து இருக்கும் போதும், கனவுகள் நிலையிலும் , தனது உணர்வு நிலையோடு கூடி இருக்கிறான். மனிதனிடம் இருக்கும் எப்பொருளையும் இதே நிலையில் ஆத்மாவினால் தான் அறிந்து கொள்கிறான் என்பதை அறிபவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை. காலங்களுக்கு எல்லாம் தலைவனாய் விளக்கும் ஆத்மா! பஞ்சேந்திரியங்கள் வழியே அனுபவிக்கவும் உள்ளுயிரே ஆத்மா! ஆத்மாவை அறிந்து கொள்பவனுக்கு அச்சம் அவனை விட்டு விலகி விடுகிறது. வாழ்க்கையின் நடைமுறையில் தன்னைப் பற்றியும், தனது ஆதமாவைப் பற்றியும் மனிதன் தனது அறிவினால் அறிய வேண்டும். நீர்க்குமிழியைப் போன்றே க்ஷ்ண நேரத்தில் கழிந்து போகும் நிலையே வாழ்க்கை என்பது அறிஞர் பெரு மக்களின் கருத்தாகும். மனிதனின் உடலும் நிலையற்ற பொருட்களால் உருவாக்கப்பட்டு, அதுவும் காலத்தில் அழிந்து போகக் கூடியதாகவே உள்ளது. மனித மனம் பிரியப்படும் எந்தப் பொருட்கள் ஆயினும், அவைகள் நிலைத்திருப்பதில்லை. மனிதன் உணர்ச்சிகளும் அவனுக்குத் தெளிவாக இல்லை. மனம் சம்மந்தப்பட்டதெல்லாம் ஏதோ கனவு போல்தான் உள்ளது. அதற்கு உருவமும் கிடையாது. அவனது விதியும் கூட அறிந்து கொள்ள முடியாததாக உள்ளது. மனிதன் தனது பேச்சினாலும், செல்வத்தினாலும் அடைந்த புகழும் கூட மற்றவர்களால் உருவாக்குவதில்லை. எனவே அதுவும் கூட ஒழுங்காக இல்லை! வாழ்க்கை முழுவதும் தீராத போராட்டமாகவே உள்ளது. இத்தகைய மனித வாழ்க்கையை செம்மைப் படுத்தும் வழிகாட்டியாக விளங்குவதே ஆத்ம ஞானம் என்பது ஆன்றோர் வாக்காகும்.

சீடன் தன்னை விட உயர்ந்த நிலைத் தன்மை பெறவேண்டும் என்று எண்ணுகின்ற, அறிவின் திருவை உடைய நல்ல குரு நாதனை சர்வேஸ்வரனாகவே எண்ணி, அவர் கூறும் உபதேசத்தைக் கடைப்பிடித்து, நன்நெறியில் வழுவாமல் நின்று ஆத்ம ஞானம் பெறவேண்டும். நல்ல குருநாதன் தனது சீடனின் உள்ளத்தில் உறையும் ஆத்ம ஆண்டவனைக் கெளரவப் படுத்தும் பணியை நிறைவேற்றி உத்தமனாக மாற்றுவார். நீதியுடையவனாக, இன்முகத்து டன் கூடியவனாக, சுதந்திரம் உடையவனாக ஆக்குவார். தெய்வீகமான விஷயங்களினால் மனதை அடக்கி, உயர்ந்த எண்ணங்களைக் காத்து, உலக நன்மையை நாடும் அறிவிற் சிறந்தவனாக ஆக்குவார். குருவின் மூலமாக எதனைச் சிறந்தது என்று அறிந்து கொள்ளும் சீடன், அதனை உறுதியாகக் கடைப்பிடித்து வர வேண்டும். விரும்பத்தகாதவை எது என்று அறிந்து விலக்குவ தோடு, நன்மை பயக்காத காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் மனதைத் தடுப்பது என்பது இயலாததாகும்.
உடல் அனுபவிப்பது எல்லாம் இன்பமல்ல! அறிவுடைய சீடன் தனது அறிவுக்கு இயைந்த உயர்வான இன்பம்தான் உண்மையான இன்பம் என்பதை அறிவான். அறிவை உபயோகப் படுத்தி வேண்டப்படாததை மிக உறுதியுடன் விலக்கும் சீடன், “நான் “என்ற கர்வம் இல்லாதவனாக வாழ்வானாக!

நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் எதனையும் மனதினுள் கொண்டு செல்லாத ஒரு பார்வையாளராகவே வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் நால்வரும்
பாட்டியைத் தவிர வாழைத் தோட்டத்து ஐயன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வர ஒரு காரியம் இருந்தது. பித்தளையில் நாக உருவத்தில் அதன் சிரசில் ஐந்து தீபங்கள் ஏற்றும் வசதியுடன் இருக்க அதனை வாங்கிக் கொண்டனர். கிராமத்தில் கிடைத்த உதவியுடன் புறப்பட்டுச் சென்றனர். வாழைத் தோட்டத்து ஐயன் பற்றிய வரலாறு கோவில் மண்டபத்தில் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளது. திருமதி ஸ்ரீ மீனாம்பாள் நாச்சியாரின் பெற்றோர் இங்கு பொங்கலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button