மிளகாய்ப் பொடி வைத்தியம்!

181

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•05•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(325) மனிதனே புனிதன் —
மிளகாய்ப் பொடி வைத்தியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எவனொருவன் மற்றவர்களிடம் குற்றம் புரிய எண்ணும் மனது கொண்டு, கேடுகளை உருவாக்கி செயல்படும் போது, அவன் தனக்குத்தானே துன்பத்தையும், துயரத்தையும் வரவழைத்துக் கொள்கின்றான். பிறருக்கு இன்னல்களை விளைவிப்பவன் சுபாவம் தீமைசக்தி உடையதாக மாறி விடுகிறது. அவன் மன மே அவனுக்குப் பகையாக மாறி விடுகின்றது. தனக்குத்தானே அநீதி இழைத்ததை மனம் திருந்துபவன் மட்டுமே அறிந்து கொள்கிறான். –ஸ்ரீ ஈஸ்வர நீதி.
வீட்டினுள் கதவை ஒட்டி சோபாக்களைப் போட்டு வீட்டு ஜனங்கள் அனைவரும் அமர்ந்து கொண்டதால், கதவை உடைக்க வந்த கள்வன் தனது எண்ணம் ஈடேறும் வழியில் முட்டுக் கட்டை விழுந்து விட்டதால் கோபத்துடன் கதவைத் தட்டி சப்தமிட்டான். அருகில் இருந்த ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை வைத்து நடத்தி வருபவர் கிராமத்து உழைப்பாளி. அலுத்துப் போய் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவர், தனது தூக்கம் கலைந்து போன கோபத்தில், சற்று போதை யும் தெளிந்து விட்டதால், பெரிய கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு தனது வீட்டு வாசலில் நின்று கத்தியபடி கம்பைச் சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் என்ன நடந்து கொண்டிருக் கின்றது என்பது புரியவில்லை. அவரது சப்தம்தான் வீதியில் பெரிதாகக் கேட்கத் துவங்கியது.

மாடியில் குடியிருந்த இளைய மகன் குடும்பத்தார் வீட்டின் கதவு வெளியே தாழிடப்பட்டு விட்டதால், திறக்க முடியாமலும் உதவி செய்ய வழியின்றியும் தவித்துக்கொண்டு இருந்தார்கள். கதவைத் திறக்க முடியாத கள்வர்கள் அக்கடா என்று அங்கேயே உட்கார்ந்து விட , கதவின் மேல்புறம் இருந்த வெண்டிலேட்டர் துவாரத்தின் வழியே, ராமநாதபுரம் மண்ணில் விளையும் காரம் மிகுந்த குண்டு மிளகாய்த்தூள், கள்வர்கள் இருவர் தலையிலும் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த துவேஷ கைங்கரியத்தில் ஈடுபட்டு பலத்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர் பெரியம்மா அவர்களின் மூத்த பேரம் பிள்ளை தான். காரியம் பலிதம் ஆகாமல் கதவின் மீது சாய்ந்து கொண்டு பலமாகக் கொட்டாவி விட்ட கள்வன் வாயில் கனகச்சிதமாக மிளகாய் தூள் விழுந்து விடவே, பொறை ஏறி அலறிக் கொண்டு எழுந்து ஓடி வெளி வாசலில் சப்தத்துடன் விழுந்தான். மறறொருவன் கண்களில் எரிச்சல் தாள முடியாமல் எழுந்தோடி, முன்னால் விழுந்தவன் மீது விழ ஒரே கலவரம் தான்போங்கள்!

இருவரும் வீதிக்குப் போகும் வரை விழுவதும் அலறுவது மாகத் தட்டுத்தடுமாறிச் சென்று, வெளியே மோட்டர் சைக்கிளில் காத்துக் கொண்டிருந்த தங்கள் நண்பனின் உதவியுடன் தப்பி ஓடினர். கள்வர்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்குள் இருந்து வெளியே வருவதைக் கண்ட, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் அப்போதுதான் ஏதோ விபரீதம் விளைந்து விட்டதை அறிந்து கொண்டு மோசடிப் பேர்வழிகளை நோக்கிக் கம்பை எடுத்து ஓங்கியபடியே வீதியில் துரத்திச் சென்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் துறைக்கு போன்மூலம் தகவல் தந்ததால், வந்து விசாரித்து விட்டுச் சென்றதும் அல்லாமல் அந்தப் பகுதிக்கு காவல் நிலையம் வரவும் உதவினர். செய்த தர்மங்கள் அவர்கள் குடும்பத்தினரைக் காத்திட தக்க சமயத்தில் எப்படியோ உதவிகள் செய்தது.

வண்டியில் பூட்டப்படும் மிருகங்கள் நல்ல பயிற்சிகள் பெற்றபிறகு பயன்பாட்டிற்கு வந்தால், வண்டி ஓட்டுபவர் நல்ல தெளிந்த, சிந்தனை அறிவுடன் கூடிக் செயல்படுவார்.
தன்னுடைய வாழ்க்கையை வெற்றியாளனாக வழிநடத்திச் செல்பவராக இருப்பார். தூய்மை மிக்கவராகவும், ஞாபகசக்தி உடையவராகவும, தெளிவான அறிவைப் பெற்றும் இருப்பர். வாழ்க்கையில் இறைசக்தியை அடைந்து வாழ்வர்.

பழக்கப்படுத்தாத துஷ்டத்தனம் மிகுந்த மிருகத்தை வண்டியில் பூட்டுபவன் கதி என்னாவது? எனத்தெரிய வேண்டும். அதனை எப்படிச் செலுத்துவது என்ற வழிவகையை அவனால் அறிந்து கொள்ள முடியாது. தெளிவான அறிவு துலங்காத தால், அவனுக்கு மனம் உறுதி யாக இருக்காது. கவனமில்லாத வனாக, தூய்மை இல்லாதவ னாக இருப்பான். வாழ்க்கையை அனுபவித்து நிம்மதியாக வாழ்பவனாக ஆக மாட்டான். வாழ்க்கைப் பயணத்தின் இறுதி யை அடைய இயலாமல், மீண்டும் மீண்டும் தொல்லை மிகும் பிறவி எடுத்து அலைந்து கொண்டு இருப்பான்.

மனிதனின் வாகனமாகிய உடலைப் பகுத்தறிவு என்னும் வாகன ஓட்டி ஓட்டிச் செல்கிறார். வாய், கண், மூக்கு, காது என்னும் பொறிகளே வண்டியை இழுத்துச் செல்லும் மிருகங்கள். அதனை அடக்கும் கடிவாளமே மனம். பொறிகள் இவற்றையெல்லாம் அனுபவிக்கின்றதோ அவைகளே வண்டி செல்லும் பாதைகளாகும்.

மனமாகிய கடிவாளம் பூட்டிய மிருகங்களாகிய பொறிகள், ஆத்மாவுடன் ஒன்றி இணையும் போது, இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கை ஏற்படுகிறது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button